scorecardresearch

பிஎம் கேர்ஸ் அமைப்பிற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி : வாரிவழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்

PM cares fund donors : பிஎஸ்என்எல் நிறுவனம், 2015-16 முதல் 2018-19ம் நிதியாண்டுகள் வரை லாபம் ஈட்டவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், 2015-16 முதல் தற்போது வரை அந்நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதி பட்ஜெட் விபரங்களை அளிக்கவில்லை.

Corona virus, PM Modi, covid pandemic, PM cares, Pm cares coronavirus fund, ONGC, PM cares fund donors, narendra Modi, PSU donors in pm care funds, voluntary donations pm cares fund, pm cares fund money, narendra modi news, indian express news
Tamil nadu news today

Shyamlal Yadav

ஓஎன்ஜிசி உள்ளிட்ட நாட்டின் 38 பொதுத்துறை நிறுவனங்கள், பிஎம் கேர்ஸ் அமைப்பிற்கு, தங்களது சமூகப் பொறுப்பு நிதிகளிலிருந்து ரூ. 2,105 கோடி நிதியை வழங்கியிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகக்கு கிடைத்த ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2020 மார்ச் 28ம் தேதி, Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations fund ( PM Cares) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மார்ச் 31, 2020 நிலவரப்படி இந்த அமைப்பில் ரூ.3,067 கோடி இருந்ததாகவும், அதில் 3075.85 கோடி ரூபாய் சுயவிருப்ப பங்களிப்பு என்று PM Cares அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இதுதொடர்பான தகவல்களை அறிய 55 பொதுத்துறை நிறுவனங்களை நாடியிருந்தது, அதில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் 2019-2020 மற்றும் 2020-2021 ம் நிதியாண்டுகளில் கடந்த 5 மாத கால பட்ஜெட் தொகையான ரூ. 2,105.38 கோடி நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தொகை பிஎம் கேர்ஸ் அமைப்புக்கு கிடைத்துள்ளது தொடர்பாக, மே 28ம் தேதி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டது. ஆனால், அவர்கள் எவ்வித விபரங்களையும் அளிக்காதநிலையில், பிஎம் கேர்ஸ் நிதி என்பது பொது அமைப்பு அல்ல என்றும், தகவல் அறியும் உரிமை சட்டம் 2(h) பிரிவின் படி தகவல்களை அளிக்க முடியாது, தேவையெனில், பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் (pmcares.gov.in) பார்த்து தெரிந்துகொள்ளும்படி அவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த 38 பொதுத்துறை நிறுவனங்களும்,பிஎம் கேர்ஸ் அமைப்பு துவங்கி 4 நாட்களுக்குள், அதுவும் நிதியாண்டின் இறுதியில் இருக்கும்போது, சமூகப் பொறுப்பு நிதிகளிலிருந்து ரூ. 2,105 கோடி வழங்கியுள்ளது குறித்த கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன. அந்த நிதியாண்டின், சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட் இறுதி செய்யப்படாத நிலையில், இந்த அளவிற்கு நன்கொடை அளிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

38 பொதுத்துறை நிறுவனங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம், அதிகபட்சமாக ரூ.300 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2020-2021ம் நிதியாண்டின் சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட்டை ஓஎன்ஜிசி நிறுவனம் இறுதி செய்யாத நிலையில் இந்தளவிற்கு நிதியை வழங்கியுள்ளது.
அதேபோல், சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட் இறுதி செய்யாத நிலையில், ஹெச்பிசிஎல் நிறுவனம், ரூ.120 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளது.

பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் 2020-2021ம் நிதியாண்டின் சமூகப் பொறுப்பு நிதிகளுக்கான பட்ஜெட்டை இறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அந்நிறுவனம் ரூ.150.28 கோடி அளவில் நிதி வழங்கியுள்ளது. ஆனால், அதன் பட்ஜெட்டில் சமூகப் பொறுப்பு நிதி அளவு ரூ.200 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் 2019 -20 மற்றும் 2020-21ம் நிதியாண்டுகளிலிருந்து சமூகப் பொறுப்பு நிதிகளிலிருந்து நன்கொடைகளை வழங்கியுள்ளது.
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம், ரூ.13 மற்றும் 25 கோடிகளும், பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம் ரூ.130 மற்றும் 70 கோடிகளும், ரூரல் எலெக்ட்ரிபிகேசன் கார்ப்பரேசன் நிறுவனம் ரூ. 156.68 மற்றும் 50 கோடிகளை வழங்கியுள்ளது.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ரூ.15 கோடிகளை வழங்கியுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் சமூகப் பொறுப்பு நிதி பட்ஜெட், ரூ.83.79 கோடிகளாக நிர்ணயித்திருந்தது.

பிஎஸ்என்எல் நிறுவனம், 2015-16 முதல் 2018-19ம் நிதியாண்டுகள் வரை லாபம் ஈட்டவில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், 2015-16 முதல் தற்போது வரை அந்நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதி பட்ஜெட் விபரங்களை அளிக்கவில்லை.

செயில் நிறுவனம் பிஎம் கேர்ஸ் அமைப்பிற்கு ரூ.33 கோடிகள் நிதியளித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தங்களது நிறுவனம் லாபம் எதையும் ஈட்டவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Maharatnas to navratnas: 38 PSUs give Rs 2,105 crore from CSR to PM CARES

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Corona virus pm modi covid pandemic pm cares pm cares coronavirus fund ongc