சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக, நோக்கம் (Intent), சேர்த்தல்(Inclusion), முதலீடு (Investment),உள் கட்டமைப்பு அடிப்படை வசதி (Infrastructure) மற்றும் புதுமை (Innovation) உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisment
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தொழிற்கூட்டமைப்பின் (Confederation of Indian Industry(CII)) வருடாந்திர கூட்டத்தில், தொழிலதிபர்களிடையே, வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றினார்.
இந்த கொரோனா தொற்று பரவலின் இக்கட்டான காலத்திலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தியா விரைவில் பொருளாதாரத்தில் முன்னேறும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, விரைவில் மீண்டும் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும்.
பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு, தானியங்கள் வழங்குவதற்காக ரூ.53 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக, நோக்கம் (Intent), சேர்த்தல்(Inclusion), முதலீடு (Investment),உள் கட்டமைப்பு அடிப்படை வசதி (Infrastructure) மற்றும் புதுமை (Innovation) உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டுள்ளோம்.
இந்தியாவை நம்பகமான, திறன்மிக்க, ஆற்றல்வாய்ந்த, வலிமை மிக்க நாடாக சர்வதேச நாடுகள் பார்த்து வருகின்றன.
விண்வெளி, அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அந்த துறைகளில் புதுவிதமான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
கொரோனா வைரஸ் காலத்திலும், இந்திய நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டால், இந்தியாவை நோக்கி உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது.
சுயசார்பு இந்தியா என்பதில், இந்தியாவை தனிமைப்படுத்துவது என்று பொருள் கொள்ளாமல், போர்த்திறன் சார்ந்த துறைகளில் சுயமாக தன்னிறைவு அடைவது என்ற நோக்கத்திலேயே இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
கொரோனா விவகாரத்திற்கு பிறகு CII என்பது இந்திய உத்வேகங்களின் சாம்பியன்ஸ் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சிக்காக கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil