சென்னையில் 2 பேர், சேலத்தில் ஒருவர் சிகிச்சை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆனது

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு, ரூபாய் 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By: Mar 28, 2020, 7:35:31 AM

Covid – 19 Cases Updates :. தமிழ்நாடு- தேசிய சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று தமிழகத்தில் மூன்று புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ,73 வயது  நிரம்பிய சென்னை முதியவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், 61 வயது நிரம்பிய ஒருவர் சேலம் மருத்துவக் கல்லூரியிலும், அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் கீழ்பாக் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, நிலைத்தன்மையோடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 38-க உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் சவாலை சமாளிக்க புதிய நடைமுறைகளை வகுக்க வேண்டும், என ஜி-20 மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. இதில் 45 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவர் குணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

’உங்கள கை எடுத்து கும்பிட்டு கெஞ்சிக் கேட்டுக்குறேன்’ : வடிவேலு உருக்கம்

கொரோனா நிவாரண தொகையான ரூபாய் ஆயிரம், ஏப்ரல் 2-ம் தேதி முதல் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவற்றை இலவசமாக விநியோகிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு லட்சத்து 70000 கோடிக்கான சலுகைத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு, ரூபாய் 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள் நேரமின்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதோடு கோழி, மீன், முட்டை, உள்ளிட்ட இறைச்சி வகைகளை எடுத்துச் செல்லவும் தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் சொல்வதில் பெருமை என்ன? கைகளை கழுவுவதில் சோம்பேறி நாடு இந்தியா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Corona Virus : இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா குறித்த மருத்துவ செய்திகள், அரசு அறிவிப்புகள் குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
23:08 (IST)27 Mar 2020
உடலில் கொரோனா எதிர்ப்புச் சக்தி உருவாகி உள்ளதா?

அமெரிக்காவில் ரத்தப் பரிசோதனை மூலம் உடலில் கொரோனா எதிர்ப்புச் சக்தி உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது

22:44 (IST)27 Mar 2020
ஒரு நாளில் 1,000 இறப்புகளுக்கு அருகில் இத்தாலி

இத்தாலி 24 மணி நேரத்திற்குள், அதாவது வெள்ளிக்கிழமை நிலவரப்படி 969 இறப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், நோய்த்தொற்று வீதம் அதன் கீழ்நோக்கிய போக்கைத் தொடர்ந்தது, சிவில் பாதுகாப்பு நிறுவனம் இத்தாலியில் கிட்டத்தட்ட 86,500 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகளைப் பதிவுசெய்தது - இது 7.4 சதவிகிதம் ஆகும். இது முந்தைய நாட்களில் இருந்த சுமார் 8.0 சதவீதத்திலிருந்து குறைவான அளவீடாகும்.

22:22 (IST)27 Mar 2020
மேற்கு வங்கத்தில் மேலும் ஐந்து கோவிட் -19 வழக்குகள்

மேற்கு வங்கத்தில் ஐந்து புதிய கோவிட் -9 வழக்குகள் பதிவாகியுள்ளன. 9 மாத பெண் குழந்தை, 11 மற்றும் 6 வயதுடைய குழந்தைகள் இதில் அடக்கம், இரண்டு பேர் 27 வயது மற்றும் 45 வயது மதிப்புமிக்க பெண்கள் என்று மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மொத்த மேற்கு வங்கத்தில் வழக்குகளின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

22:19 (IST)27 Mar 2020
முதன்மை மாநிலமாக தமிழகம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிக முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது

மக்கள் வீடுகளிலேயே தனித்திருந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தந்துவருகின்றனர்

- அமைச்சர் பாண்டியராஜன்

21:35 (IST)27 Mar 2020
நான் யாரு? நான் வந்து உங்க வண்டில உட்காரவா?

கொரோனா வேடத்தில் நூதன முறையில் பிரச்சாரம் செய்த போலீஸ்.. அதிர்ந்த வாகன ஓட்டிகள்

21:31 (IST)27 Mar 2020
38ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 38ஆக உயர்வு - தமிழக சுகாதாரத்துறை தகவல்

21:29 (IST)27 Mar 2020
கேரளாவில் வெள்ளிக்கிழமை மேலும் 39 பேருக்கு கோவிட் 19

திருவனந்தபுரத்தில் முதல்வர் பதவியில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 39 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் இந்த நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மாநிலத்தின் பலவேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கேரளாவில் 176 பேருக்கு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல மாவட்டங்களிலாக 1,10,229 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,09,683 பேர் வீடுகளிலும் 616 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். நோய் அறிகுறி காணப்பட்ட 5679 பேரின் உமிழ்நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் முடிவு கிடைத்த 4448 மாதிரிகள் நெகட்டிவாகும். இவ்வாறு அவர் கூறினார்

21:13 (IST)27 Mar 2020
மன அழுத்தங்களை மருத்துவர்கள் தீர்த்து வைப்பார்கள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மன அழுத்தங்களை போக்கவே கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அவர்களது மன அழுத்தங்களை மருத்துவர்கள் தீர்த்து வைப்பார்கள் - முதல்வர் பழனிசாமி

20:56 (IST)27 Mar 2020
வெறிச்சோடி காணப்படும் சாலைகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக, வெறிச்சோடி காணப்படும் குஜராத்தின் வதோதரா சாலைகள்

20:55 (IST)27 Mar 2020
எண்ணிக்கை 640க்கும் மேல்...

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 640க்கும் மேல் உள்ளது. அதில் சுமார் 66 பேர் குணமடைந்துள்ளனர்.

20:35 (IST)27 Mar 2020
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்

காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும்

* மருந்தகங்கள், உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம்

* ஸ்விக்கி, ஜோமோட்டோ, உபேர் போன்ற நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு

20:35 (IST)27 Mar 2020
மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு

மார்ச் 29ம் தேதி முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு

* காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்பட வேண்டும்

* பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும்

20:19 (IST)27 Mar 2020
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் - ஐகோர்ட் உத்தரவு

மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரிய வழக்கு

* தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

20:18 (IST)27 Mar 2020
சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம்

விளைபொருட்களை 180 நாட்கள் அரசு சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம் - தமிழக அரசு

* சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை - தமிழக அரசு

20:18 (IST)27 Mar 2020
போலீஸார் பணி நீக்கம்

உருளைக்கிழங்கு எடுத்து சென்ற தொழிலாளியை தாக்கிய போலீஸார் பணி நீக்கம்

* பீகார் டிஜிபி அதிரடி உத்தரவு

* 3 போலீஸாரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருவதாக டிஜிபி தகவல்

* பீகாரில் 144 தடை உத்தரவின்போது வெளியில் சென்ற தொழிலாளியை தாக்கிய விவகாரம்

19:31 (IST)27 Mar 2020
விற்பனையாகாத 10% பி.எஸ் 4 ரக வாகனங்கள்

பி.எஸ்.4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் முதல் தேதிக்கு பின்னர் விற்பனை செய்யக் கூடாது என 2018 அக்டோபா் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவில் மாற்றம் கோரி ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன், 17 ஆயிரத்து 260 பி.எஸ்.4 ரக பயணிகள் கார்கள், 14 ஆயிரம் வாடகை வாகனங்கள், 2 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இன்னும் விற்கப்படாமல் உள்ளதாகவும், இவற்றை விற்பனை செய்ய 30 நாள்கள் கூடுதல் கால அவசாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி, பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை கால நீட்டிப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டின் சுற்றுச் சூழலுக்கு தியாகம் செய்ய கற்றுக் கொள்வோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

19:05 (IST)27 Mar 2020
முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம்

முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

18:52 (IST)27 Mar 2020
கொரோனா ஒரு கொடிய தொற்று

கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும். 144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதிகாப்பதற்கே; 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் - முதல்வர் பழனிசாமி

18:45 (IST)27 Mar 2020
எண்ணிக்கை 176 ஆக உயர்வு

கேரளாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்வு.

18:43 (IST)27 Mar 2020
புதிதாக நியமனம்

கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 லேப் டெக்னீசியன்ஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் : முதல்வர் பழனிசாமி

18:42 (IST)27 Mar 2020
தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது; கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம் : முதல்வர் பழனிசாமி

17:42 (IST)27 Mar 2020
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

17:22 (IST)27 Mar 2020
கொரோனா அச்சுறுத்தல் 2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுதலை - அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விடுப்பில் உள்ள கைதிகளின் பரோல் காலத்தை நீடிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

17:16 (IST)27 Mar 2020
சென்னை காவல்துறையினருக்கு ‪குளுக்கோஸ், முககவசங்களை வழங்கிய நடிகர் சிரிஷ்

24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சென்னை காவல்துறையினருக்கு ‪குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு முககவசங்களை விநியோகம் செய்தார் நடிகர் "மெட்ரோ" சிரிஷ்.

16:53 (IST)27 Mar 2020
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா தொற்று உறுதி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

15:42 (IST)27 Mar 2020
மின்கட்டணம் குறித்த தேதியில் செலுத்தாவிட்டாலும் இணைப்பு துண்டிக்கப்படாது - மின்சார வாரியம்

தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் மார்ச் மாதம் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளநிலையில், மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி வழக்கமான செய்தியாக அனுப்பப்பட்டு விட்டது. மக்கள் மின்கட்டணம் குறித்த தேதியில் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15:33 (IST)27 Mar 2020
புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளித்த விசிக தலைவர் திருமாவளவன்

புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு, எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் தங்கள் ஒரு மாத சம்பளத்தை அளித்தனர்

15:27 (IST)27 Mar 2020
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை மக்கள் செய்யலாம். நிதி அளிப்பவர்கள் முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நேரடியாக நிதி தருவதை ஊக்குவிக்க இயலாது. இருப்பினும் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி அளிப்பவர்களின் விவரங்களை பத்திரிகையில் வெளியிடப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

14:36 (IST)27 Mar 2020
தேவையில்லாமல் பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து - வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வேலூரில் தேவையில்லாமல் வெளியே பைக்கில் சுற்றினால் அவர்களுடைய லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் தேவையில்லாமல் பைக்கில் 2 பேர் சுற்றினாலும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர்

14:31 (IST)27 Mar 2020
கொரோனா நிவாரண நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கு முடிவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வகிதத்தை குறைக்கும் முடிவை வரவேற்றுள்ளார். இது அதிக பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈ.எம்.ஐ தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்று அரை மனதுடன் உள்ளது. அனைத்து ஈ.எம்.ஐ செலுத்த வேண்டிய தேதிகளும் தானாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

14:23 (IST)27 Mar 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் மே 2 -ம் தேதி நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஜூன் 19 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மே 2 முதல் மே 18 வரை நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14:15 (IST)27 Mar 2020
கொரோனாவை நடவடிக்கைக்காக புதிதாக 530 டாக்டர்கள், 1000 நர்ஸ்கள், 1508 டெக்னீஷியன்கள் நியமிக்க முதல்வர் உத்தரவு

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக அரசு மருத்துவமனைகளில் புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக டெக்னீஷியன்களை உடனடியாக நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையால் நியமிக்கப்படும் மருத்துவர்கள் 3 நாட்களில் பணியில் சேர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

13:32 (IST)27 Mar 2020
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

கொரோனா தாக்குதலுக்கு கர்நாடகாவில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 11-ம் தேதி டெல்லியில் இருந்து ரயில் மூலம் கர்நாடகா திரும்பியவர். அவருடன் ரயிலில் பயணித்தவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

13:16 (IST)27 Mar 2020
தமிழகத்தில் 4100 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் 4100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியதாக 4100 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 1252 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று 2,848 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

12:37 (IST)27 Mar 2020
தமிழகத்தில் 35 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. 

12:10 (IST)27 Mar 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு. 144 தடை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

11:45 (IST)27 Mar 2020
10- ம் வகுப்பு பொதுத்தேர்வு

கொரோனா காரணமாக மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவிலான தேர்வை நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல். ஏற்கனவே, மார்ச் 26-ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏப்ரல்10-ஆம் தேதி வரை கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தால், காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக பரவலை தடுக்கும் விதமாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

11:11 (IST)27 Mar 2020
மோடி அரசை பாராட்டிய ராகுல் காந்தி

கொரோனாவால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார இயக்கமும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரவேற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரியான பாதையில் எடுத்து வைத்துள்ள முதல் அடி இது என தெரிவித்துள்ளார்.

10:48 (IST)27 Mar 2020
ஸொமேட்டோவுடன் ஒப்பந்தம்

கேரளாவில் நியாயவிலைக் கடையிலிருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக சொமேட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

10:37 (IST)27 Mar 2020
ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைப்பு. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 

10:27 (IST)27 Mar 2020
கொரோனா இறப்பு 17-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137 பேருக்கும், மகாராஷ்டிராவில் 130 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

Corona Virus : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது மார்ச் மாத ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதோடு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்பிக்கள் ரூ.1 கோடியும், எம்எல்ஏக்கள் ரூ.25 லட்சத்தையும் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Title:Corona virus updates live covid 19 tamil nadu 21 days lockdown

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X