இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.5 சதவீதத்திற்கு கீ்ழ் குறைந்தது – குஜராத், மகாராஷ்டிரா நிலை தான் மோசம்

Coronavirus fatality rate : கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.49 சதவீதம், அமெரிக்கா ( 3.88 சதவீதம்), பிரேசில் (3.81 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.

By: July 20, 2020, 11:25:34 AM

இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 மில்லியன் ( 10 லட்சம்) என்ற அளவை கடந்துள்ள நிலையில், ஜூன் 18ம் தேதி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,816 ஆக கடந்துள்ள நிலையில், முதல்முறையாக கொரோனா பாதிப்பு காரணமாக இறப்பு விகிதம் 2.5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2.49 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சர்வதேச நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்புவிகிதம் 1.78 சதவீதமாக உள்ளது.

நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொரோனா இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. 14 மாநிலங்களில், இந்த இறப்பு விகிதம் 1 சதவீதத்தைவிட குறைவாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஜூலை 19ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் நிலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணித்து வரும் நிலையில் ஒவ்வொரு மருத்துவமனையும் 24 முதல் 72 மணிநேரத்திற்குள் அறிகுறி உள்ளவர்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இறப்பு விகிதம், தேசிய சராசரியை விட மிக அதிகளவில் உள்ளதாகவும், இருந்தபோதிலும் இது தவிர்க்கப்பட முடியக்கூடிய நிகழ்வுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அரசு சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி கூறியதாவது, பல்வேறு மாநிலங்களில் கொரோனா இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைந்த அளவில் உள்ளது வரவேற்கத்தக்க நிகழ்வு தான். கொரோனா அறிகுறி காணப்படுபவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை தகுந்த சிகிச்சைக்குட்படுத்தி நோயிலிருந்து காப்பாற்றிவிடுவதால், இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளுக்கு இதுதொடர்பான முறையான அறிவுத்தல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.

மகாராஷ்டிரா (3.85 சதவீதம்), குஜராத் (4.48 சதவீதம்) மேற்குவங்கம் (2.67) மாநிலங்களில் தேசிய சராசரியைவிட கொரோனா இறப்பு விகிதம் மிக அதிகளவில் உள்ளது.

உத்தரபிரதேசம், பீகார், அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ள நிலையிலும், அம்மாநிலங்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் முழு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் புதிதாக ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதேநிலை தான் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலும் நிலவுகிறது. இந்த மாநிலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள், தொடர்பு தடமறிதல், சோதனைகள் உள்ளிட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த அம்மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலமும் தீவிர கண்காணிப்பிற்கு உட்புடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா இறப்பு விகிதத்தில், தேசிய சராசரியை விட குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில், தெலுங்கானா (0.93 சதவீதம்), ஆந்திரபிரதேசம் (1.31 சதவீதம்), தமிழ்நாடு (1.75 சதவீதம்), கர்நாடகா (2.06 சதவீதம்) மற்றும் உத்தரபிரதேசம் (2.36 சதவீதம்) உள்ளன. மேற்கண்ட இந்த மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு கடந்த சிலவாரங்களாக மிக அதிகமாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநிலங்களில், நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் மிகதாமதமாக மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர். இதன்காரணமாக அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளித்து தனிமைப்படுத்த கால அவகாசம் அதிகம் தேவைப்பட்ட நிலையில், அதிகளவிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவர்கள் முன்னதாகவே மருத்துவமனைகளை நாடியிருந்தால், அவர்களை இறப்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம்.

மத்திய சுகாதாரத்துறை வடிவமைத்துள்ள கொரோனா சோதனைகள் உள்ளிட்ட வழிமுறைகளை பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாலேயே, இந்தளவிற்கு இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.49 சதவீதம், அமெரிக்கா ( 3.88 சதவீதம்), பிரேசில் (3.81 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.

மத்திய அரசு, ஜூலை 19ம் தேதி கொரோனா இறப்புவிகிதம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மற்ற நோய் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விவகாரங்களில், தொழில்நுட்ப அடிப்படையிலான வசதிகளான செயலிகள் வடிவமைக்கப்பட்டு, அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் தொடர்கண்காணிப்பிற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்கூட்டியே கண்டறிதல், தக்க நேரத்தில் சிகிச்சை அளித்தல், இதன்மூலம் இறப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Covid fatality rate drops below 2.5%; Gujarat and Maharashtra still a worry

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Corona viruscoronavirus death toll in india fatality rate who maharashtra

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X