Covid-19 Cases Update: பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொலிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் பதிவில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், 66,918 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3,277 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 128 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரழப்பு 2,109 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில், நோய் தாக்கியவர்களில் 19,357 பேர் குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் 1,511 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து, குணமானவர்கள் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டியுள்ளது. குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் 3 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குணமடைந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Updates : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தமிழகத்தில் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 4 பெண்கள் 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் டாஸ்மாக் மது விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள டாஸ்மாக் வழக்கு விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள டாஸ்மாக் தொடர்பான வழக்கு விசாரணையில் மிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
பிரதமர் மோடி, காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியபோது, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடியிடன் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், விமான சேவையையும் தொடங்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
காணொலி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனிஅக் கூட்டத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசு ஏற்கெனவே கேட்ட ரூ.2,000 கோடியை விடுவிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினார். தேசிய பேரிடம் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடியை வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரியுள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இப்போதைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என்றும் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சிவப்பு மண்டலங்களில் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியான 6 பேரும் கோயம்பேடு தொடர்பு உடையவர்கள். கன்டோன்மென்ட் கவுன்சிலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாம்பரம், பல்லாவரம் நகராட்சியில் மட்டும் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் 8 சிறப்பு ரயில்களில் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். மேலும்,தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் சொந்த இடங்களுக்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும், தினமும் அதிகாலை 5- 10 மணி மற்றும் மாலை 5 - இரவு 7.30 மணிக வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாளல், ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அறிகுறிகள் காட்டத் தொடங்கிய 17 நாட்களுக்குப் பிறகு, தொடர்ந்து 10 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாத நோயாளிகள் தனிமைப்படுத்தல் சிகிச்சையை முடிக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று, வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, லேசான கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தல் சிகிச்சைப் முடிந்ததும் கொரோனா டெஸ்டிங் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளளது (உடல் வெப்பநிலை சோதனை மட்டும் போதுமானது). முன்னதாக, ஏப்ரல் 27 சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, நோய் பாதப்பு இல்லை என்று கண்காணிப்பு மருத்துவ அதிகாரி வழங்கிய சான்றிதழ் அடிப்படையில் மட்டும் தனிமைப்படுத்தல் சிகிச்சை முடிவடையும்.
மேலும், லேசான அல்லது முன் அறிகுறிகள் கொண்ட நோயாளிகள், தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பகுதிக்கான வசதிகளையும், கவனித்துக்கொள்வதற்கான ஒரு பராமரிப்பாளரையும் வைத்திருந்தால் தங்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தல் சிகிச்சையைத் தேர்வு செய்யலாம்.
கடந்த 10 நாளில் மட்டும் 1.10 லட்சம் புலம்பெயர் தொழிலளர்கள் பீகார் மாநிலத்தை வந்தடைந்துள்ளனர். மேலும், கூடுதலாக 85,000 பேர் இந்த மாத இறுதிக்குள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, அந்த மாநிலத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக ஒரு நாளைக்கு சுமார் 1,800 கொரோனா டெஸ்டிங் செய்யும் அளவிற்கு தான் பீகார் சுகாதாரத் துறையின் திறன் உள்ளது. இதுநாள் வரையில், ஆறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சுயாதீன அமைப்பான ராஜேந்திர மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் தினமும் சராசரியாக 1,400-1,500 சோதனைகள் எடுக்கப்பட்டு வந்தது. பணம் செலுத்த விரும்பும் எவருக்கும் சோதனைகள் நடத்த இரண்டு தனியார் ஆய்வகங்களை பீகார் அரசாங்கம் அனுமதித்துள்ளது .
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கோவிட் - 19 அல்லாத பிற சிகிச்சைக்கு வருபவர்கள் ஆகியோருக்கான மாநிலங்களுக்கிடையேயான பயணம் உள்ளிட்ட தடையற்ற பயணத்தை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
புது தில்லியில் இருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய இடங்களுக்கு பயணிகள் சென்றுவர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில் சேவை விவரங்களை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 48 மணிநேரங்களில் தென்கொரியா நாட்டில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய வாரத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைக்கு நிகராக கடந்த இரண்டு நாட்கள் எண்ணிக்கை உள்ளது. நேற்று, தலைநகர் சோலில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மீண்டும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் வட மாநிலங்களில் ஒன்றாக காசராகோட்டு மாவட்டத்தில் சிகிச்சை எடுத்து வந்த கடைசி கொரோன நோயாளி நேற்று குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார். கேரளாவில் மொத்த எண்ணிக்கையில் 35 சதவீத கொரோனா தொற்று (512 ல் 178 )முந்தைய நாட்களில் இந்த மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் வரும் 500 பேருக்கு நேற்று சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.மேலும், மனம் சோர்வு அடையாத வகையில் பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
திருமழிசை காய்கறி சந்தையில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ரூ.1.50 கோடி அளவில் காய்கறி விற்பனை நடைபெற்றுள்ளதாக முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட நிலையில், காய்கறி கடைகள், சென்னை திருமழிசையில் தற்காலிகமாக மொத்த சந்தை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
10/05/2020 தேதியின்படி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 483 மாவட்டங்களில் 7740 சிகிச்சை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் இதில் அடங்கும். 656769 தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகளும், நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 305567 படுக்கை வசதிகளும், நோய்த் தாக்குதல் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு 351204 படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்களுக்கு 99492 படுக்கை வசதிகளும் உருவாக்கப் பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் 1696 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சைக்கு 34076 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில், 66,918 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3,277 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 128 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரழப்பு 2,109 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில், நோய் தாக்கியவர்களில் 19,357 பேர் குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் 1,511 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து, குணமானவர்கள் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டியுள்ளது. குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் 3 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குணமடைந்து வருகின்றனர்.
புறப்பட்டுச் சென்றது. மிஷன் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உதவித் திட்டம், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், நோயின் பாதிப்பினால் ஏற்பட்ட சிரமங்களுக்கும்,இந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான மிகச்சிறப்பான உறவுகளை வலுப்படுத்துவதாகவும் உள்ளது.
இந்திய ரயில்வே பயணிகள் ரயில் சேவையை 30 ரயில்களுடன் நாளை முதல் படிப்படியாக தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதற்கான இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ள்ளது.மேலும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட வழங்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights