Coronavirus breakout India to produce hazmat suits in large numbers
Coronavirus breakout India to produce hazmat suits in large numbers : தற்போது இந்தியாவில் கொரோனாவைரஸ் அதிக தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் மருத்துவ துறை சார்ந்த ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகள், கவசங்கள், முகக்கவசம் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவ ஊழியர்களும் தங்களின் உயிரை பணயம் வைத்து இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு ஆடைகள் என்று அழைக்கப்படும் ஹஸ்மட் (hazmat - hazardous materials என்பதின் சுருக்கம்) சூட்களை தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்களால், தொடர்ந்து உலக நாடுகளுக்கு சப்ளை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு 5 தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. தமிழகத்தின் கோவையில் செயல்பட்டு வரும் சித்ராவில் (South India Textiles research association (SITRA)) இந்த ஆடைகளை தயாரிப்பதற்கான அனுமதிக்காக விண்ணப்பம் செய்திருந்தது. இதில் சரியான நிறுவனத்தை தேர்வு செய்ய அவர்கள் அனுப்பியிருந்த ஆடைகள் (துணிகள்) மீது பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 25 வரை கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 2ம் தேதி அந்த ஆடைகளுக்கான சிறப்பம்சங்களை வரையறை செய்தது மத்திய அரசு.
மருத்துவர்களுக்கு தேவையான ஆடைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு அளித்த பதிலில் “கடந்த 45 நாட்களில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சகம், இந்த ஹஸ்மட் சூட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு சரியான நிறுவனங்களை ஆய்வு செய்து வந்தது” என்று கூறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஜனவரி 31ம் தேதி என்95 முகக்கவசங்கள், 2-ply/3-ply அறுவை சிகிச்சை மாஸ்க்குகள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது. பிப்ரவரி 8, தேதி அந்த தடை நீக்கப்பட்டு, நியாயமான விலைக்கு அனைவருக்கும் அந்த கவசங்கள் மற்றும் உடைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது. ஆனால் மீண்டும் 9ம் தேதி மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம், பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தேவையான உதவிகளை செய்ய முன் வருவதாக கூறியது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் முகக் கவசங்களையும், மிக அதிக அளவில் ஹஸ்மட்களையும் தயாரிக்க முன் வந்துள்ளது.
இந்த உடையில் பொதுவாக முகத்திற்கான கவசம், கையுறைகள், ரப்பர் பூட்ஸ்கள், மற்றும் ஓவர்ஆல்ஸ் என்று அழைக்கப்படும் பி.வி.சி.யால் செய்யப்பட்டிருக்கும் மேலாடை ஆகியவை இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவர்களுக்கு வழங்கப்படும்.