Coronavirus Outbreak Latest Updates: ஈரானில் இருந்து காஜியாபாத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சிக்கி தவித்துவரும் இந்தியர்களை மீட்க, மத்திய அரசு சார்பில் ஏர் இந்தியா விமானம் இன்று, டெஹ்ரான் விரைகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ராஜ், சீன எல்லையில் உள்ள குவாம் பகுதியில் 1200 இந்தியர்கள் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus in India updates: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
சீனாவில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இளைஞர் சில நாட்களுக்கு பின் மரணமடைந்துள்ளார். அவரின் மரணத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தான் காரணம் மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல, பலருக்கும் இதுபோன்ற அறிகுறி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் நிலவிவரும் கொரோனா வைரஸ் பீதி, இதன் பாதிப்பு தொடர்பாக முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால், மும்பை பங்குச்சந்தை ( BSE), தேசிய பங்குச்சந்தை (NSE) உள்ளிட்டவைகளின் வர்த்தகத்தில் 1400 புள்ளிகளுக்கு கீழ் பங்கு வர்த்தகம் சரிவடைந்துள்ளது. 2019 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, பங்குவர்த்தகம் இந்த அளவிற்கு சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பீதி காரணமாக, அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், அதனை எதிர்கொள்ள போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ள நிலையில், சீனாவில் இருந்து கொரோனா தொற்று உள்ளவர்கள் இந்தியாவில் வருவதை தடுக்கும்பொருட்டு, இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள நாதுலா கணவாய் பகுதி மூடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, வரும் 13ம் தேதி துவங்கும் ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பெல்ஜியம் நாட்டின் புரூசல்ஸிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பீதி, சர்வேதேச நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது பயணத்தை அவர் ஒத்திவைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights