/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-22T110440.413.jpg)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகள், ஜீன், ஜூலை மாதங்களுக்குள் நிறைவு பெறும் என்று நிடி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஊரடங்கு உத்தரவை முன்கூட்டியே தளர்த்தினால், வைரஸ் தொற்று மீண்டும் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும். இதன்காரணத்தினாலேயே, கொரோனா தடுப்பு மண்டலங்கள் அமைக்கப்படுவதுடன் அப்பகுதி மக்கள் தகுந்த பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ இத்தகைய நடவடிக்கைகள் உதவிபுரிகின்றன.
தொற்று தடுப்பு நடவடிக்கைகளை நாம் சிறப்பாக மேற்கொண்டிருப்பதன் மூலம், கொரோனா தொற்று அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில், நாம் அதிகளவிலான பொருளாதார இழப்பு உள்ளிட்ட அசவுகரியங்களை அதற்கு விலையாக கொடுத்து வருகிறோம். தற்போதைய நிலையில், கொரோனா புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜீன் ஜீலை மாதங்களில் கொரோனா பாதிப்புகளிலிருந்து முற்றிலும் நிவாரணம் அடைய முடியும்.
மே 3ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவையும் ஒரே பகுதியாக அல்லாமல், பகுதிவாரியாகவும், அதேநேரத்தில் பாதிப்பை முக்கியமாக காரணியாக கருதி இந்த விவகாரத்தில் நுணுக்கமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
டாக்டர் பால், எய்ம்ஸ் மருத்துவமனையில், குழந்தைகள் நலத்துறை முன்னாள் பேராசிரியர் ஆவார். தற்போது நிடி ஆயோக்கில், கோவிட்19 நிர்வாக செயற்குழுவில், திட்டமிடல் மற்றும் செயலாக்க பிரிவு உறுப்பினர் ஆக உள்ளார். இந்த பொறுப்பை தவிர்த்து, மத்திய உள்துறையின் மருத்துவ அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த அதிகாரமிக்க குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அதேபோல், ஊரடங்கு சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திட்டமிடும் அதிகாரமிக்க குழுவின் நிர்வாகியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் பால், பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியை, விஜயராகவன் உடன் பகிர்ந்துகொண்டுள்ளார். சார்ஸ் நோயின்போதும் தற்போது கொரோனா தொற்று பரவல் நிலையிலும் அரசிற்கு வேண்டிய அறிவியல் சார்ந்த கொள்கைகளை வகுத்தல், சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டமிடல் உள்ளிட்ட பணிகளில் இவரது பங்கு அளப்பரியது.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தற்போது பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை தொடர்ந்து, பிளாஸ்மா சிகிச்சை, பிளாஸ்மா பரிமாற்றம், ரெடீம்சிவீர் மருந்து உள்ளிட்வைகளின் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், இந்த தொற்றுக்கு புதிய மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் முடுக்கிவிட்டுள்ளதாக டாக்டர் பால் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.