Avishek G Dastidar
டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோனோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணியில் ரயில்வே நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இஸ்லாமிய அமைப்பான தப்லிக் ஜமாத் சார்பில் மார்ச் மாதத்தில் டில்லியில் மாநாடு நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இவர்கள், ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இந்த பரிசோதனையை செய்தால் மட்டுமே, தொற்று பரவலின் விகிதத்தை கட்டுப்படுத்த முடியும், இல்லையெனில் பேரிழப்பு சந்திக்க நேரிடும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இதற்காக டில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் 14 மற்றும் 19ம் தேதி புறப்பட்ட ஆந்திரபிரதேச மாநிலம் குண்டூர் புறப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னைக்கு புறப்பட்ட கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னைக்கு புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகளின் விபரங்களை ரயில்வே நிர்வாகம் பெற்று சோதனையை துவக்கியுள்ளது.
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் 18ம் தேதி துரந்தோ ரயிலின் எஸ்8 பெட்டியில் பயணித்துள்ளனர். அவர்களுடன் இருந்த 2 பேர் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்3 பெட்டியிலும், அவர்களின் குழந்தைகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பயணித்துள்ளனர்.
இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் எத்தனை பேருக்கு இந்த தொற்று இருப்பதை கண்டறியும் பொருட்டு, மார்ச் 14 முதல் 19ம் தேதி வரையிலான இந்த 3 ரயில்களில் பயணம் செய்தவர்களின் பட்டியல் குறித்த விபரங்களை பெற்றுள்ளதாகவும் அதன்மூலம் அவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே நிர்வாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த டில்லி அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
டில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ள இந்த 3 ரயில்களும் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து செல்கின்றன. இதுமட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களையும் அது கடந்து செல்கிறது. உதாரணமாக டில்லி நிஜாமுதீனிலிருந்து கிராண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 37 நிறுத்தங்களை கடந்து செல்கிறது.
இந்த ரயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதுதொடர்பான எஸ்எம்எஸ்கள் அதில் பயணித்த பயணிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதோடு, ஊழியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு ரயிலில் குறைந்தது 1200 முதல் 1500 பயணிகள் வரை பயணிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 16 -17ம் தேதிகளில் டில்லி – ராஞ்சி ராஜ்தானி ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மார்ச் 17ம் தேதி, டில்லி – ராஞ்சி ராஜ்தானி ரயிலின் பி1 பெட்டியில், பயணம் செய்தவர்கள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு ராஞ்சி போலீஸ் துணை ஆணையர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டில்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம், டில்லியின் மிக முக்கிய ரயில் நிலையமாகும். இங்கிருந்து தினமும் 26 நீண்ட தொலைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து தினமும் 136 ரயில்கள் இங்கு வந்து சேர்கின்றன. புறநகர் ரயில் சேவையும் இங்கிருந்து இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் இந்த ரயில் நிலையத்தில் இருந்துதான் புறப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறுதியிட்டு தெரிவித்துவிட முடியாது. அவர்கள் புதுடெல்லியில் இருந்தோ அல்லது ஆனந்த் விஹார் பகுதியில் இருந்தும் புறப்பட்டு சென்றிருக்கலாம் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்பு தடமறிதல் நிகழ்வை தாங்கள் முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறோம். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே இந்த ரயில்கள் புறப்பட்டு சென்றுள்ளன. உதாரணமாக, புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 62 ரயில்கள் வந்தும் 76 ரயில்கள் இங்கிருந்தும் புறப்பட்டு சென்றிருக்கின்றன. இதன்மூலம் குறைந்தது 5 லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil