27 மில்லியன் முக கவசங்கள், 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் அடுத்த இருமாதங்களில் தேவை – அரசு கணிப்பு

கேரளாவில், தான் கடந்த ஜனவரி 31ம் தேதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

By: April 6, 2020, 2:54:12 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தேவைகளை மத்திய அரசு வரையறுத்துள்ளது. அதன்படி, அடுத்த 2 மாதங்களுக்கு 27 மில்லியன் என்95 முக கவசங்கள், 15 மில்லியன் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 1.6 மில்லியன் பரிசோதனை கருவிகள், 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவைகள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3ம் தேதி, டெல்லியில் அதிகாரிகள் குழுவினர் நிடி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தலைமையில், நாட்டின் முன்னணி பொதுத்துறை, தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப்பேசினர்.

இந்த கூட்டத்தில், ஜூன் மாதத்திற்குள் 27 மில்லியன் என்95 முக கவசங்கள், 15 மில்லியன் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 1.6 மில்லியன் பரிசோதனை கருவிகள், 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தேவைப்படுவதாகவும், இதனை கொள்முதல் செய்ய மத்திய அரசு தயாரிக்க இருப்பதாக அந்த பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

தேவைப்படும் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களில், 16 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தற்போது கைவசம் இருப்பதாகவும், எஞ்சிய 34 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெண்டிலேட்டர்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சர்வதேச நிறுவனங்களிடமிருந்து வாங்க திட்டமிடப்பட்டு, அதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதியை நாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிறுவன பிரதிநிதிகள், அடுத்த 6 முதல் 12 மாத கால அளவில் வெண்டிலேட்டர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பிரிவில் இருக்கும் தேவைகள் குறித்த தெளிவான விபரங்கள் தரப்பட்டால், தங்களது நிறுவனங்கள் இந்த பிரிவில் எத்தகைய முதலீடு செய்ய திட்டமிட வசதியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

நிடி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜயராகவன், என்டிஎம்ஏ உறுப்பினர் கமல் கிஷோர், சிபிஐசி உறுப்பினர் சந்தீப் மோகன் பட்னாகர், உள்துறை கூடுதல் செயலாளர் அனில் மாலிக், பிரதமர் அலுவலக இணை செயலாளர் கோபால் பாக்லே மற்றும் மத்திய அமைச்சரவையின் துணை செயலாளர் டினா சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FICCI தலைவர் டாக்டர் சங்கீதா ரெட்டி, உதய் சங்கர், மூத்த துணை தலைவர் மேத்தா, துணை தலைவர் , ஹனிவெல் நிறுவனத்தின் அஸ்வனி சன்னான் மற்றும் மகாஜன் இமேஜிங் நிறுவனத்தின் ஹரீஷ் மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, பரிசோதனை கருவிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு, கடந்த சனிக்கிழமை தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 24ம் தேதி, மத்திய அரசு, வெண்டிலேட்டர், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், செயற்கை சுவாச கருவிகள், பிராண வாயு சிகிச்சை உபகரணங்கள், சானிடைசர் உள்ளிட்டவைகளின் ஏற்றுமதியை தடை செய்தது.

அறுவை சிகிச்சை முக கவசங்கள், முக கவசம் தயாரிக்க பயன்படும் துணிகள் உள்ளிட்டவைகளின் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில், தான் கடந்த ஜனவரி 31ம் தேதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus covid 19 coronavirus preparations masks n 95 masks ventilators

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X