அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அறிவியலாளர்கள் குழு, இந்தியாவில் கோவிட்-19 தொற்று உச்சம் அடைந்து காணப்படுகிறது என்றும் இப்போது அது வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அறிவியலாளர்கள் குழு, இந்தியாவில் கோவிட்-19 தொற்று உச்சம் அடைந்து காணப்படுகிறது என்றும் இப்போது அது வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், தொற்று
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அதன் பரவல் முடிவடையும் என்றும் கூறியுள்ளது.
ஹைதராபாத் ஐ.ஐ.டி பேராசிரியர் எம்.வித்யாசாகர் தலைமையிலான குழு, நாட்டில் தொற்றுநோயின் பாதையை கணினி வரைபட மாதிரிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த குழுவின் முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், இந்த தொற்றுநோய் செப்டம்பர் நடுப்பகுதியில் உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்தியாவில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 106 லட்சத்தை (10.6 மில்லியன்) தாண்ட வாய்ப்பில்லை. இதுவரை, இந்தியாவில் 75 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 66 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் நாட்டில் தொற்றுநோய் பரவுவதை குறைப்பதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்த குழு கூறியுள்ளது. பொதுமுடக்கம் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் இறப்பு எண்ணிக்கை 25 லட்சம் வரை உயர்ந்திருக்கும். தற்போது வரை, இந்தியாவில் இந்த நோயால் 1.14 லட்சம் பேர் இறந்துள்ளனர். இருப்பினும், மேலும் பொதுமுடக்கம் விதிப்பது என்பது விரும்பத்தகாதது. அவை இனி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் வரவிருக்கும் பண்டிகை காலமும் நெருங்கிவரும் குளிர்காலமும் இந்த கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மக்களுக்கு பாதிப்பை அதிகரிக்கும் என்று குழு கூறியுள்ளது. எனவே, தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியா 24 மணி நேரத்தில் தினசரி 61,871 கொரோனா வைரஸ் தொற்றுகளைக் கண்டறிந்துள்ளது. மொத்த நோய்த்தொற்று 75 லட்சத்திற்கு அருகில் உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தகவல்கள் இன்று காலை தெரிவித்துள்ளன. நாட்டில் இப்போது இதுவரை மொத்தம் 74,94,551 தொற்றுகள் உள்ளன. தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65,97,209 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக எட்டு லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இருப்பினும், இந்தியா கொரோனா தொற்றில் தொடர்ந்து மோசமான இரண்டாவது நாடாக உள்ளது. நாட்டில் கோவிட்-19 தொற்றில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 88.03 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ரு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"