பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமலில் உள்ள 3-ம் கட்ட பொது முடக்கம் முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில்,...

நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமலில் உள்ள 3-ம் கட்ட பொது முடக்கம் முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலை ஏற்று, நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு சில தளர்வுகளையும் அறிவித்ததோடு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது முடக்க மே 31-ம் தேதி வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

1. அனைத்து உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்தும், (உள்நாட்டு விமான மருத்துவ சேவை, விமான ஆம்புலன்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்கான பயணம் தவிர்த்து) தடை செய்யப்படுகிறது.

2.அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் செயல்பட தடை தொடரும்.

3. நாடு முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வியியல் நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். ஆன்லைன் கற்பித்தலுக்கு அனுமதி தொடரும். ஆன்லைன் கற்பித்த ஊக்குவிக்கபடும்.

4.நாடு முழுவதும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், மூடப்பட்டிருக்கும்.

சுகாதார நிலையங்கள், காவல், அரசு அலுவலகங்கள், சுகாதாரப் பணியாளர்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள், ஆகியவை செயல்படும். பேருந்து டெப்போக்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் செயல்பட அனுமதி தொடரும். அதே போல, வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவகங்களுக்கு அனுமதிக்கப்படும்.

5. அனைத்து திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், மதுபான அரங்குகள், கலையரங்குகள், மக்கள் கூடும் இடங்கள், விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும். இருப்பினும், பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

6. அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, அகாடெமிக், கலாச்சார, மத செயல்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை தொடர்கிறது.

7. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் பார்வைக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கும். அனைத்து மத நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன.

நோய் கட்டுபாட்டு பகுதிகளைத் தவிர்த்து, பின்வரும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

* மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மத்துடன் இயக்கலாம்.

* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் வாகனப் போக்குவரத்துக்கான அனுமதியை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே முடிவெடுக்கலாம்.

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்கள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

* அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர்த்து, தனிநபர்கள், மக்கள் வீடுகளை வீட்டு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியே வரக்கூடாது.

* அத்தியாவசிய மற்றும் மருத்துவ காரணங்களைத் தவிர்த்து, 65 வயதுக்கு மேற்பட்டோர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* மேலும், பொது மக்கள் அனைவரும் பொது இடங்களில் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* பொது இடங்களில், பொது போக்குவரத்தில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர்கள் வரை கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* இறப்பு மற்றும் இறுதி நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை உறுதி செய்வதோடு 20 பேர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கிடையாது.

* பொது இடங்களில் மது, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.

* கடைகளில் பொருட்களை வாங்க செல்லும்போது, ஒரு நபர் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். ஒரு கடையின் முன்பு 5 வாடிக்கையாளர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கிடையாது.

* வீடுகளில் இருந்து பணிபுரியும் நடவடிக்கை தொடரும் உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188வது பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close