இந்தியாவில் குணமடைவோர் விகிதம் குறைகிறது: சர்வதேச ஆய்வு

Corona deaths in India : தொற்று கண்டறியப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட பலர் குணமடைந்தனர். ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை இறங்குமுகமாக உள்ளது.

Corona deaths in India : தொற்று கண்டறியப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட பலர் குணமடைந்தனர். ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை இறங்குமுகமாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus, corona updates live, covid 19 cases

Karishma Mehrotra

ஜெர்மனியில், கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை , 1000 ஆக இருந்த நிலையில், அந்நாடு, இந்தியாவைவிட அதிகளவுக்கு கொரோனா சோதனைகளை மேற்கொண்டிருந்தது. அந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவாகவே இருந்தது.

Advertisment

இந்த முடிவுகள், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகமும், குளோபல் சேஞ்ச் டேட்டா லேப் இணைந்து சர்வதேச அளவில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது. இவைகள் இணைந்து Our World in Data என்ற போர்டலை துவக்கியுள்ளனர். இந்த போர்டலில், ஒவ்வொரு நாட்டின் அரசும் மேற்கொள்ளும் சோதனைகள், மரணங்களின் எண்ணிக்கைகள் உள்ளிட்டவை, ஐரேப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் டேட்டாபேசில் சேகரிக்கப்படுகின்றன.

அதன்படி, சர்வதேச அளவில் ஜெர்மனி, இந்தியா, அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், பெல்ஜியம், மெக்ஸிகோ, ஈரான், துருக்கி உள்ளிட்ட 18 நாடுகளில், கொரோனாவால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

பிரேசில், சீனா, ஸ்பெயின் நாடுகளின் நிகழ்த்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை குறித்த தகவல் கிடைக்கப்பெறவில்லை

ஆயிரம் மரணங்கள் என்பதன் அடிப்படையில், நடந்த சோதனைகளின் அடிப்படையில் நிகழ்ந்த மரணங்களை ஒப்பிடும்போது ஜெர்மனியில் ( 1.3), அமெரிக்கா (1.5), துருக்கி (2.1) மற்றும் சீனா (2.4) ஆக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது.

சர்வதேச அளவில் 9 நாடுகள் இதுவரை 7,50,000 சோதனைகளை மேற்கொண்டுள்ளன. இதில் ரஷ்யா மற்றும் ஜெர்மனியில் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தியாவை ஒப்பிடும்போது, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், கனடா, துருக்கி மற்றும் அமெரிக்காவில் அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் தற்போதைய நிலையில், 32 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பெரு, சீனா, துருக்கி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜெர்மனியில் அதிகளவில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் அதிகளவில் சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

ஸ்பெயின், ஈரான், சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் நிகழ்த்தப்பட்ட சோதனைகள் குறித்த தகவல் கிடைக்கப்பெறவில்லை.

publive-image

இந்தியாவில் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ள மரணங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளபோதிலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மரண பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், இஸ்ரேல், ஈரான், ஸ்பெயின் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மரண பாதிப்பு விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 11 நாட்கள் இடைவெளியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. துருக்கி, கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 17 நாட்களுக்கு ஒருமுறையே மரணவிகிதம் இரட்டிப்பாவதாக அந்த போர்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா சோதனைகள், மரணங்கள், குணமடைவோரின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபடுகின்றன. எனவே அதனை கொண்டு ஒப்பிடுவதில் ஒரு வரையறை அவசியமாகிறது.

இந்தியாவில் குணமடைவோரின் எண்ணிக்கை, வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் 2 மாதங்களில் இருந்ததை போன்று தற்போதைய கடைசி இரண்டு வாரங்களில் இல்லை என்பது நினைவுகூரத்தக்கது. தொற்று கண்டறியப்பட்ட முதல் இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட பலர் குணமடைந்தனர். ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை இறங்குமுகமாக உள்ளது.

தொற்று உள்ளவர்கள், உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இடைவெளியே, மரண எண்ணிக்கையை நிர்ணயிக்கிறது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களை உடனடியாக சோதனைக்குட்படுத்தி அவர்களுக்கு தகுந்த சிகிச்சையை தகுந்த நேரத்தில் அளிப்பதன் மூலம், மரணமடைபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு நிபுணர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Lockdown Covid 19

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: