பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கொரோன தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களும்…

By: Updated: April 2, 2020, 02:04:00 PM

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கொரோன தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களும் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர். 1764 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

தமிழக முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடனும் தமிழக அரசின் செயலாளர்கள் சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

முன்னதாக, பிதமர் நரேந்திர மோடி, சமூக விலகலைப் பின்பற்றி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி ஆலோசனை நடத்தினார். மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிஎம் கேர்ஸ் நிவாரண நிதிக்கு குடிமக்கள், நிறுவனங்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று, பிரபலங்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோன தடுப்பு பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். காணொலி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் உடனான காணொலி  ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus covid19 pm narendra modi video conferencing meeting with all state chief ministers cm edappadi k palaniswami

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X