ரயில், பஸ், மெட்ரோக்களில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை – படத்தொகுப்பு

மத்திய மற்றும் மேற்கு ரயில்வே ஒவ்வொரு நாளும் துவைக்கப்படாத, போர்வைகள் மற்றும் திரைச்சீலைகளை ஏசி கோச்சில் இருந்து திரும்பப் பெற உத்தரவிட்டன.

Coronavirus disinfectant trains, metro, buses
Coronavirus disinfectant trains, metro, buses
disinfecting trains, metro and buses, coronavirus
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 114-ஆக உயர்ந்தது. படத்தில்: புது டெல்லி ரயில் நிலையத்தில் டெல்லி-ஜம்மு இடையேயான ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை, கிருமி நீக்கம் செய்யும் ஊழியர். 
disinfecting trains, metro and buses, coronavirus
50-க்கும் மேற்பட்டோர் கூடும் கூட்டங்கள் அனைத்தையும் தடை செய்வதாக டெல்லி அரசு அறிவித்தது. ஒரிஷாவில் ஒருவருக்கு பாஸிட்டிவ் ரிசல்ட் வெளியானதைத் தொடர்ந்து, கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் உள்ள அனைத்து மால்களும் மார்ச் 31 வரை மூடுமாறு ஒடிசா அரசு உத்தரவிட்டது. படத்தில்: பாதுகாப்பு உடை அணிந்த ஒரு தொழிலாளி ராஞ்சி ரயில்நிலையத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் கிருமிநாசினியை தெளிக்கிறார்.
disinfecting trains, metro and buses, coronavirus
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை மூடுவதாக திரிபுரா அரசு திங்களன்று அறிவித்தது.
disinfecting trains, metro and buses, coronavirus
இதற்கிடையில், மத்திய மற்றும் மேற்கு ரயில்வே ஒவ்வொரு நாளும் துவைக்கப்படாத, போர்வைகள் மற்றும் திரைச்சீலைகளை ஏசி கோச்சில் இருந்து திரும்பப் பெற உத்தரவிட்டன. பெட்ஷீட்கள், துண்டுகள் மற்றும் தலையணை கவர்கள் உள்ளிட்டவைகள் தினமும் துவைக்கப்படுகின்றன. 
disinfecting trains, metro and buses, coronavirus
 கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஹூப்ளியில், மாநில போக்குவரத்து பேருந்தின் நடத்துனர் பயணிகளுக்கு இலவச முகமூடிகளை விநியோகிக்கிறார். 
disinfecting trains, metro and buses, coronavirus
ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவி மும்பை முனிசிபல் டிரான்ஸ்போர்ட்டின் ஊழியர்கள், நவி மும்பையில் உள்ள டர்பே பஸ் டிப்போவுக்கு வந்து, அங்கிருந்து புறப்படும் ஒவ்வொரு பஸ்ஸும் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்கிறார்கள். 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus disinfectant trains buses metro in india

Next Story
இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com