கொரோனா அச்சுறுத்தல் – முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி முடிவு

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்களது சென்னை யூனிட்டில், கார் உற்பத்தி மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவதாக ஹூண்டாய் மோட்டார் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

By: March 23, 2020, 3:04:09 PM

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தங்களது சென்னை யூனிட்டில், கார் உற்பத்தி மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவதாக ஹூண்டாய் மோட்டார் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார் இ்ந்தியா லிமிடெட் நிறுவனம் விளங்கி வருகிறது. சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் வெகுவேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் தரப்பில் வெளியிப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தங்களது நிறுவன சென்னை கார் தயாரிப்பு யூனிட்டில் கார்கள் உற்பத்தி மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்து கார் உற்பத்தி எப்போது துவங்கும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

நோய் தொற்று பரவுதலை தடுக்க தனிமைப்படுத்துதலை மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் நலன் கருதி, வாகன தயாரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைககளை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மற்றும் ரோதக் யூனிட்டில் கார் உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டுள்ளது

இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடெட் நிறுவனம், நாட்டில் உள்ள தங்களது உற்பத்தி யூனிட்களில் வாகன உற்பத்தியை நிறுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது அண்டை நாடுகளாவ கொலம்பியா மற்றும் வங்கதேச நாடுகளில் உள்ள தயாரிப்பு யூனிட்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.

எப்சிஏ இந்தியா பிரைவேட் லிமிடெடட், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் வாகன உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus impacthyundaihyundai motor indiacoronavirus pandemic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X