Covid-19 Cases Update: கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த பதற்றம் இந்திய மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த 21 நாட்களில் மளிகை, காய்கறி, பால், இரைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் கொரோனா மரணம்: மதுரையில் பலியானவர் பற்றிய உருக்கமான தகவல்
கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாடு போய்வராத மதுரை நபரும் அடக்கம். ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் வீடுகளில் 15 ஆயிரத்து 298 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 116 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் 743ல், 608 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது. 120 மாதிரிகளின் முடிவுகள் வரவிருக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக இருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. துபாயிலிருந்து இந்தியா வந்த 63 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வாலாஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெருந்துறையில் தாய்லாந்து நாட்டவருடன் தொடர்பில் இருந்தவருக்கு கொரொனா பாதிப்பு உறுதியானது.” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்வு.
முதல்வர் பழனிசாமி: அன்பான சகோதார சகோதரிகளே இச்சமயத்தில் நான் தமிழக முதல்வராக இல்லாமல் உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தில் ஒருவானாக பேசுகிறேன். உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி காட்டுத் தீ போல பரவி வருவதை நாம் எல்லோரும் அறிவோம். மத்திய அரசின் வேண்டுகோளின்படி, 21 நாட்கள் நாம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். இந்த வைரஸ் நோய் எப்படி பரவுகிறது. நாம் ஒவ்வொருவரும் அதை தடுப்பதற்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வாரனாசி மக்களிடம் பிரதமர் மோடி காணொலி மூலம் பேச்சு: கொரோனா வைரஸை சுற்றி வளைத்துக் கொல்வோம். உடலால் தனித்திருப்போம். உள்ளத்தால் இணைந்திருப்போம்.இக்கட்டனான சூழலில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். 21 நாட்கள் வீட்டிலிருந்து கொரோனா வைரஸை விரட்டுவோம்.
எனது வீட்டை பொது மருத்துவமனையாக்கத் தயார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சார்லஸுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மேலும் புதியதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்தவர். இவர்கள் 22-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு சேலம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் தமிழகத்தில் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மாலை 6 மணியுடன் டீ கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளுடன் ரேஷன், காய்கறிகள் மட்டுமே ஹோம் டெலிவரி செய்ய அனுமதி என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழக்கூடும் என்ற நிலையில் உள்ள 1482 கர்ப்பிணிகள் தொடர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆன்-லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்கவும் மாநகராட்சி தடை விதித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமூக விலகலை மேற்கொள்ளும் விதமாக சேர்கள் இடைவெளி விட்டு போடப்பட்டிருக்கின்றன.
புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் “ஆல் பாஸ்” என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தாக்குதலால், அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களும் தேர்வெழுத முடியாத நிலை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சாலையில் சுற்றிய 4 வாகன ஓட்டிகளை போலீசார் தோப்புக்கரணம் போடவைத்தனர்
ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை, தாம்பரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் தனி மருத்துவமனை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய 3 நபர்கள், அரசு உத்தரவை மீறி வெளியே சென்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஒருவர் மீதும், கோயம்பேடு பகுதியை சேர்ந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு.
சென்னையில் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
”மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும். மேலும் தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது வரை 562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பயம் காரணமாக, 12-ம் வகுப்பு கடைசி தேர்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்கவில்லை. போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று நடந்த பிளஸ்-2 தேர்வை 34,000 மாணவர்கள் எழுதவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல்
கொரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் 27 மற்றும் 28-ஆம் தேதி விடுமுறை என காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளனர்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இத்தாலி, அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொத்து கொத்தாக உயிர் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது உலகளவில் கொரானாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,810 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 16000-மாக இருந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.