இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் 80 சதவீத கொரோனா தொற்று, 62 மாவட்டங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
நசடு முழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், 505 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனையடுத்து பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 3,577 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மார்ச் 30ம் தேதி நிலவரப்படி, 1251 பாதிப்புகளும், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தின்படி, கடந்த 4.1 நாட்களில், கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தப்லிக் மாநாட்டினால், பாதிப்பு எண்ணிக்கை 7.4 நாட்களில் இரண்டு மடங்காக அதிகரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, 80 சதவீத கொரோனா தொற்று பாதிப்பு 62 மாவட்டங்களில் தான் உள்ளது. தொற்று பரிசோதனை எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் எண்ணிக்கையை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்வாரா மாதிரியின் அடிப்படையில், அதிக பாதிப்புகள் கொண்ட பகுதிகளை, மற்ற பகுதியிலிருந்து பிரிக்கும் வகையில், பாதிப்பு பகுதிகள் சீல் வைக்கப்படுகின்றன. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் அதிக தொற்று ஏற்பட்ட நிலையில், அது தொற்று மையமாக மாறிவிடக்கூடாது என்பதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலான செயல்பாடுகள் தற்போது நாடு முழுமைக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ ஆய்வு கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுவதாக இருந்தால், இந்நேரம் இதன் தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருக்கும். மருத்துவமனைகளில் உள்ள எல்லோருக்கும் இந்த தொற்று பரவியிருக்கும். அதிர்ஷ்டவசமாக அவ்வாறு இதுவரை நிகழவில்லை, இதுவே, கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவவில்லை என்பதற்கு ஆதாரம் என்று இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் தொற்று நோயியல் துறை தலைவர் டாக்டர் ஆர் ஆர் கங்காகேத்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று சோதனை போதுமான அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி நிலவரப்படி, 5,800 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 4 ம்தேதி அதன் எண்ணிக்கை 10,034 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 5ம் தேதி மட்டும் 9.369 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக இதுவரை 89,534 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, ஐசிஎம்ஆர், ஆன்ட்டிபாடி விரைவு சோதனையை, சில இடங்களில் பரீட்சித்து பார்த்தது. இந்த சோதனையின் மூலம், முடிவுகள் உடனுக்குடன் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, சுகாதார ஆராய்ச்சித்துறை செயலாளர் டாக்டர் பல்ராம் பார்கவா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத் சுதானிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பிசிஆர் அடிப்படையிலான கொரோனா சோதனைகளே தற்போது பெருமளவில் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகளின் எண்ணிக்கையை வருங்காலத்தில் போதிய அளவுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் உடனடியாகவும், துல்லியமாகவும் முடிவுகளை தெரிவிக்கும் ஆன்ட்டிபாடி விரைவு சோதனைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் உடன் கேபினட் செயலாளர் ராஜிவ் கவுபா நடத்திய ஆலோசனக்கு பிறகு, மாவட்டங நிர்வாகங்களுக்கு கவுபா அறிவுறுத்தியுள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், இந்த விவகாரத்தில், நாட்டில் உள்ள 274 மாவட்ட நிர்வாகங்களும் ஒருமித்த பாதையில் நின்று இந்த கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு CBNAAT (cartridge based nucleic acid amplification test) இதை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை, இறக்குமதியால் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு நிறுவனங்களும் இந்த உபகரணங்களை அதிகளவில் தயாரிக்க முன்வர வேண்டும். தனி மனித இடைவெளி மற்றும் ஊரடங்கு உத்தரவு, கொரோனா தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாக்கும் முக்கிய காரணிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 24 மாநிலங்களில் உள்ள 399 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 14,522 தன்னார்வ குழுக்கள், தற்போது முக கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பு அபாயம் பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.