கொரோனா மரணங்களில் 15 பேர் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – அதிர்ச்சித்தகவல்

டெல்லியில், சமூக பரவல் மூலம் இந்த தொற்று பரவவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

coronavirus india deaths nizamuddin, tablighi markaz, nizamuddin lockdown, , coronavirus india news updates, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
coronavirus india deaths nizamuddin, tablighi markaz, nizamuddin lockdown, , coronavirus india news updates, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

Astha Saxena , Sourav Roy Barman , Abantika Ghosh

தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் மாதம் தப்லிக் ஜமாத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மாநாடே, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு, இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களே ஆவர். நாட்டில் நிகழ்ந்துள்ள 53 மரணங்களில், 15 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மார்கஜ் நிஜாமுதீன் பகுதியிலிருந்து அப்பகுதி மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனர். அவர்களிடம் புதன்கிழமை நடத்திய சோதனையில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் (வியாழக்கிழமை) இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்ட புதிய 141 பேர்களில், 129 பேர் மார்கஜ் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் தலைமையகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர். இந்த மாநாட்டில் சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கடந்த மாதம் இறந்த இரண்டு பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது, அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மார்கஜ் நிஜாமுதீன் மற்றும் மேற்கு நிஜாமுதீன் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்களா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, டில்லியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் 293 பேரிடம் நடத்திய பரிசோதனையில், 182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ப்பட்டது. இனிவரும் நாட்களில், மேலும் பலரிடம் இந்த சோதனை நடைபெற உள்ளதாக டில்லி அரசு அறிவித்துள்ளது.
தேசிய அளவில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2,069 (155 பேர் குணமடைந்துள்ளனர், 53 பேர் மரணம்) ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 235 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உள்ளவர்களில் 400 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

53 பேர் மரணமடைந்துள்ள நிலையில், அவர்களில் குறைந்தது 15 பேர் டில்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேர் தெலுங்கானா, டெல்லி, குஜராத், கர்நாடகா, மும்பை, காஷ்மீர் மற்றும் தமிழகத்தில் இருந்து தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மாநாட்டில் 1,306 வெளிநாட்டினர்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் கேபினட் செயலாளர், தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பு கொண்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் டிஜிபிக்களுவன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் நிறைய பேருக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது நடத்தப்பட்டால், தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், தமிழகத்தில் 173 பேர், ராஜஸ்தானில் 11 பேர் , அந்தமான் நிகோபாரில் 9 பேர், டில்லியில் 47 பேர், புதுச்சேரியில் 2 பேர், ஜம்மு காஷ்மீரில் 22 பேர், தெலுங்கானாவில் 33 பேர், ஆந்திராவில் 67 பேர் மற்றும் அசாமில் 16 பேருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் 2 பேர் மரணம் அடைந்துள்ளதை உறுதி செய்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரினால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு வெண்டிலேட்டர் உதவியும், 5 பேருக்கு பிராண வாயு வசதியும் செய்து தரப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி மார்கஜ் நிஜாமுதீன் பகுதியிலிருந்து 2,300 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் துவக்கப்பட்டு புதன்கிழமை மாலை 4 மணிவரை பரிசோதனைகள் நடைபெற்றதாகவும். இவர்களில் 500க்கும் மேற்பட்டோருக்கு அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நிகழ்ந்த இரண்டு மரணங்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த 64 வயது முதியவர் மற்றவர் மேற்கு நிஜாமுதீன் பகுதியை சேர்ந்தவர். சிகிச்சைக்காக லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் தகுந்த பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்கஜ் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 51 பேர் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும், 29 பேருக்கு தொடர்பின் மூலமாகவே, இந்த தொற்று பரவியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது, மார்கஜ் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 2,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 536 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்னும் ஓரிரு நாட்களில் இவர்களிடமும் சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.இவர்களில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்ற விபரம் இன்னும் சில தினங்களில் தெரியும்.

சமூக பரிமாற்றம் மூலம் இந்த தொற்று பரவியதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. இதில் கவலைப்படத்தக்க அம்சம் யாதெனில், கொரோனா வைரஸ், மக்கள் அதிக நெருக்கமாக இருந்த இடங்களில் பரவியுள்ளது. எத்தனை பேர் இதில் மரணமடைந்துள்ளனர் என்பது துல்லியமாக தெரியவில்லை. தற்போது வரை வெளிநாட்டிலிருந்து வந்த 29 பேர் மட்டுமே மரணமடைந்துள்ள நிலையில், டெல்லியில், சமூக பரவல் மூலம் இந்த தொற்று பரவவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுவரை, தேசிய அளவில் 7,900 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus india deaths nizamuddin tablighi markaz nizamuddin lockdown

Next Story
PM Modi Speech : ஏப்ரல் 5ம் தேதிக்கு இரவு 9 மணிக்கு மக்கள் ஒளி ஏற்ற வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்PM Narendra modi, Corona update
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com