9 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு: தேவை மருத்துவ கட்டமைப்பில் கவனம்
மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 110 ஆக இருந்த நிலையில், நேற்று (மார்ச் 24) ல் இதன் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது
மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 110 ஆக இருந்த நிலையில், நேற்று (மார்ச் 24) ல் இதன் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது
coronavirus india, india lockdown, coronavirus india lockdown, coronavirus testing, healthcare, medical infrastructure, ventilators, indian express news
நோவல் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பு, 9 நாட்களில் 100லிருந்து 500 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 110 ஆக இருந்த நிலையில், நேற்று (மார்ச் 24) ல் இதன் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது, 39 பேர் குணமடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அவர் குறித்த விபரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை.
Advertisment
Advertisements
கேரள மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி இந்தியாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது. 45 நாட்கள் இடைவெளியில் அதாவது மார்ச் 15ம் தேதி இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்தது. இதன்மூலம் நாட்டில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், சமூகப்பரவலை தடுக்க நாட்டை முடக்க வேண்டியது உள்ளிட்டவைகள் அவசியமான ஒன்றாகிறது. கடந்த 2 மாத இடைவெளிகளில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், அவர்களின் வீடுகள் அல்லது முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
வெண்டிலேட்டர்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எய்ம்ஸ் நிபுணர்களின் புரோட்டோடைப் மாடலான வெண்டிலேட்டர்களை, மத்திய அரசு உறுதிப்படுத்தும் பட்சத்தில், தனியார் துறை நிறுவனங்களுடன் இந்த வகை வெண்டிலேட்டர்களை அதிகளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவில் மருத்துவமனைகள், பரிசோதனை ஆய்வகங்கள், ஐசோலேசன் வார்டுகள், மருத்துவ வசதிகளை விரிவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் வெண்டிலேட்டர்கள், பாதுகாப்பு உபகரணங்கள், முககவசங்கள், சிகிச்சைக்கு தேவையா மருந்துகள் உள்ளிட்டவைகள் போதிய அளவில் இருப்பில் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய கேபினட் செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமைச்செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவிட் 19 நோயாளிகளின் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களது கண்காணிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் எவ்வித தவறும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நோயாளிகளின் விபரங்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளோரது விபரங்கள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் ஹெல்த் ஆன்லைன் போர்டலில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தடுப்பு மருந்துகள், சானிடைசர்கள், முக கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கோவிட் - 19 தொற்று கொண்ட நபர்கள் பொதுவெளிகளில் சுதந்திரமாக உலவுவதை தடுக்கும் பொருட்டு, தன்னார்வ குழுக்கள் மூலமான நபர்களை கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இத்தொற்று மேலும் பரவாமல் தடுக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil