Advertisment

Coronavirus Updates : இந்தியாவில் 7,529 பேருக்கு கொரோனா பாதிப்பு; 242 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்

Coronavirus Lockdown Latest Updates: கொரோனா வைரஸ் தொடர்பான பல முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.        

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus Updates : இந்தியாவில் 7,529 பேருக்கு கொரோனா பாதிப்பு; 242 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்

Covid-19 Lockdown Updates: 21  நாட்கள் பொது முடக்க காலநிலை வரும் ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருக்கும் சூழ்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி  காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். முடக்க நிலை தொடரலாமா அல்லது தளர்வு கொண்டுவரப்படுமா போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் இன்று உறுதியாகிவிடும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், பஞ்சாப், ஒடிசா போன்ற மாநிலங்கள் தங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளன.

Advertisment

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 7,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக அளவிலான பரவல் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

Live Blog

Coronavirus Updates : கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.



























Highlights

    22:50 (IST)11 Apr 2020

    இந்தியாவில் 7,529 பேருக்கு கொரோனா பாதிப்பு; 242 பேர் உயிரிழப்பு - சுகாதாரத்துறை தகவல்

    இந்தியாவில் கொரோனா வைரஸால் 7,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 242 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    21:03 (IST)11 Apr 2020

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதில்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு, அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒளிவு மறைவின்றி தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.

    ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வுகானில் கொரோனா பாதிப்பு உள்ளது அறிந்த உடனேயே மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. கொரொனா தொடர்பான புள்ளிவிவரங்களை அரசு எவ்வித ஒளிவுமறைவுமின்றி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. ஸ்டாலின் கருத்து கொரோனா தடுப்பு பணியில் தன்னலமற்று செயல்படுவோரை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.” என்று முதல்வர் பதிலளித்துள்ளார்.

    18:53 (IST)11 Apr 2020

    தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வரவில்லை - தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி

    தமிழகத்தில் 47, 056 பேர் கண்கானிப்பில் உள்ளனர்.

    தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி:

    தமிழகத்தில் இதுவரை 9,525 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட 485 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

    தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளில் முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேரும். தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் டெஸ் கிட் கருவிகள் அமெரிக்காவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

    கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது.

    18:36 (IST)11 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 969 ஆனது - தலைமைச் செயலர்

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி:

    தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கை பொருத்தவரை நாடு தழுவிய அளவில் பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று செயல்படுத்துவோம்.

    18:29 (IST)11 Apr 2020

    2 வாரம் ஊடங்கை நீட்டிக்க பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார் - தலைமைச் செயலாளர் பேட்டி

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி:

    இன்று காலை 11 மணி முதல் பிரதமர் மோடி பல்வேறு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.

    பல்வேறு முதல்வர்களும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும் நீட்டிக்காவிட்டால் எடுத்த முயற்சிகளில் வெற்றிபெற முடியாது என்று வலியுறுத்தினர்.

    தமிழக முதல்வர் பழனிசாமி வல்லுனர்களுடன் பேசி, பிரதமரிடம் குறைந்தது 2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

    இதனிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

    இது போன்ற ஊரடங்கு உத்தரவு ஒரு மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தினால் முழு பலனை அளிக்காது.

    ஊரடங்கு பற்றி பிரதமர் அறிவிக்கும் முடிவை முழுமையாக செயல்படுத்துவது என்று அமைச்சரவையில் முடிவு.

    21 நாட்களாக நடைபெறும் ஊரடங்குக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு அமைச்சரவை பாராட்டு தெரிவித்தது.

    17:42 (IST)11 Apr 2020

    தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அமைச்சரவை ஆலோசனை

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் ஆலோசித்து வருகிறது.

    17:22 (IST)11 Apr 2020

    மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு - முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு

    கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிராவில் அம்மாநில முதல்வர் உத்தரவ் தாக்கரே ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளார்.

    17:13 (IST)11 Apr 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து விவாதிக்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

    இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    16:52 (IST)11 Apr 2020

    கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மண்டல வாரியாக சிறப்புக்குழு அமைப்பு

    கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மண்டல வாரியாக சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மண்டல வாரியாக

    ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக்க் குழு அமைத்து அரசாணை வெளியீடு

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை சிறுப்புக்குழுவினர் உறுதி செய்வார்கள்.

    மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை சிறப்புக் குழுவினர் கண்கணிப்பார்கள்.

    16:41 (IST)11 Apr 2020

    கொரோனா தடுப்பு: முதல்வர் பழனிசாமி சற்று நேரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி சற்று நேரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலகத்தில், டிஜிபி, தலைமைச் செயலாளர், பெருநகர ஆணையர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்.

    16:26 (IST)11 Apr 2020

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ரூ.2,000 வழங்க முதல்வர் கோரிக்கை

    பிரதமர் மோடி காணொலி மூலம் நடத்திய ஆலோசனையின்போது முதல்வர் பழனிசாமி வைத்தை கோரிக்கைகள்:

    பருப்பு மசாலா பொருட்களை லாரிகள் மூலம் மாநிலங்களுக்கு இடையே விநியோகிக்க வேண்டும்.

    வேளாண், தோட்டக்கலைத் துறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2,000 வழங்க வேண்டும்.

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் தொழிலாளர்கள், விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2,000 வழங்க வேண்டும்.

    16:18 (IST)11 Apr 2020

    கொரோனா மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு - மத்திய அரசு

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.

    16:02 (IST)11 Apr 2020

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்க முதல்வர் கோரிக்கை

    பிரதமர் மோடி, முதல்வரிடம் காணொலி மூலம் ஆலொசனை நடத்தியபோது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடிய ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    15:35 (IST)11 Apr 2020

    ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

    ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட் செய்துள்ளார்.ஊரடங்கை நீட்டிக்கும் பிரதமர் மோடியின் முடிவு சரியானது - அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் சரியான முடிவை எடுத்துள்ளார். நாம் ஆரம்பத்திலேயே ஊரடங்கை அமல்படுத்தியதால், இன்று, பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது. இப்போது ஊரடங்கை நிறுத்தினால், பெற்ற அனைத்து நன்மைகளையும் இழக்க நேரிடும். மேலும் ஒருங்கிணைப்பதற்கு ஊரடங்கை நீட்டிப்பது முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

    14:30 (IST)11 Apr 2020

    பொது முடக்க காலம் நீட்டித்தால் வரவேற்போம் - மாயாவதி அறிவிப்பு

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய பொது முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தால்,அதை பகுஜன் சமாஜ் கட்சி  வரவேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று தெரிவித்தார். இதுபோன்ற தேசிய நெருக்கடி காலத்தில் சாதி, மதம், கட்சி அரசியலைத் தாண்டி, ஏழைகள், பின்தங்கிய மக்கள்,தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோரின் நலன்களை மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும் என்று  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    14:30 (IST)11 Apr 2020

    பொது முடக்க காலம் நீட்டித்தால் வரவேற்போம் - மாயாவதி அறிவிப்பு

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய பொது முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தால்,அதை பகுஜன் சமாஜ் கட்சி  வரவேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி இன்று தெரிவித்தார். இதுபோன்ற தேசிய நெருக்கடி காலத்தில் சாதி, மதம், கட்சி அரசியலைத் தாண்டி, ஏழைகள், பின்தங்கிய மக்கள்,தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோரின் நலன்களை மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டும் என்று  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    12:48 (IST)11 Apr 2020

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி : 1.37 லட்சம் கோரிக்கைகள் ஏற்பு

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதையடுத்து, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎப்ஓ), நாடு முழுவதுமிருந்து பெறப்பட்ட 1.37 லட்சம் கோரிக்கைகளை ஏற்று 279.65 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இத்தொகையை வாடிக்கையாளர்களின் கணக்கில் செலுத்தும் நடவடிக்கைகளும் துவங்கப்பட்டுள்ளன. முற்றிலும் கே.வை.சி (KYC) முறைப்படி உள்ள அனைத்து விண்ணப்பங்களும், 72 மணி நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு விடுகின்றன என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

     

    12:46 (IST)11 Apr 2020

    பொது முடக்கம் ஏப்ரல்.30 வரை நீட்டிக்கப்பட வேண்டும் – கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியலவிலான பொது முடக்கத்தை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கன்றன. பிரதமர் மோடி, தற்போது காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் கோவிட்- 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை  குறித்த பேசி வருகிறார். கோவிட் -19 பரவலை மாநிலங்களால் தனித்தனியாக கட்டுப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாளும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நீட்டிப்பு நாடு தழுவியதாக இருக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் பிரதமரிடம் தெரிவித்தார். முன்னதாக,துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பொது முடக்கம் நீட்டிக்கப்பட வேண்டுமா என்று மத்திய அரசு முடிவு செய்யும் வரை டெல்லி காத்திருக்கும் என்று கூறியிருந்தார்.

    12:04 (IST)11 Apr 2020

    மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில் மேற்கொள்பவர்களுக்கு தளர்வு

    மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில் மேற்கொள்பவர்களுக்கு, இந்த 21 நாட்கள் பொது முடக்கத்தில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.   மத்திய உள்துறை அமைச்சகம், மார்ச் 24  வெளியிட்டஒருங்கிணைந்த பொது முடக்க வழிகாட்டுதல் சுற்றிக்கை, இதற்காக ஐந்தாவது முறையாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.     

    11:49 (IST)11 Apr 2020

    ஊரடங்கை விரைந்து விலக்க உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    ஊரடங்கு உத்தரவை விரைந்து விலக்கிக்கொண்டால் கோவிட்-19 தொற்று மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

    11:47 (IST)11 Apr 2020

    கோவிட்-19 தொடர்பாக தமிழக முதல்வர், பிரதமருடன் ஆலோசனை செய்து வருகிறார்

    கோவிட்- 19 பெருந்த்தொற்று தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். இன்று 4 மணிக்கு புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. 

    11:38 (IST)11 Apr 2020

    கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட எட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் டிஸ்சார்ஜ்

    கடந்த மாதம் கேரளாவில், எட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும்  கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தங்கவைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இந்நிலையில்,  இவர்கள் அனைவரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கேரளா அரசு உறுதிபடுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளில் ஏழு பேர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும்,அவர்களில் ஆறு பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

    11:30 (IST)11 Apr 2020

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் : ஆயுஷ் அமைச்சகம்

    ஆயுர்வேதத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான பல்வேறு வழிமுறைகளை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது...

    11:26 (IST)11 Apr 2020

    மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய டிப்ஸ்

    கோவிட்-19 தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டிலிருந்தே பணிபுரிவோருக்கு இணையவழி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சில டிப்ஸ்களை  மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

    11:22 (IST)11 Apr 2020

    ஏழைகளின் வாழ்வாதாரத்தின் முக்கியத்துவத்தை இன்று பிரதமரிடம் சொல்லுங்கள் – சிதம்பரம் வேண்டுகோள்

    இந்தியா  பாராளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் இன்று தனது ட்விட்டரில்,"  உயிர்கள் காக்கப்படுவது போல, ஏழைகளின் வாழ்வாதாரமும் காக்கப்படவேண்டும் என்பதை இந்திய பிரதமரிடம் சொல்லுங்கள் என்று மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்,ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், புதுவை முதல்வர் நாராயணசாமி, மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தனது ட்வீட்டை இணைத்துள்ளார்.  

    11:12 (IST)11 Apr 2020

    பொது முடக்க நிலை நீட்டிக்கப்ப்படுமா? இன்று மாநில முதவர்களுடன் பிரதமர் ஆலோசனை

    21  நாட்கள் பொது முடக்க காலநிலை வரும் ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருக்கும் சூழ்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி  காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.  பொது முடக்க நிலை தொடரப்படுமா? அல்லது தளர்வு கொண்டுவரப்படுமா? போன்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் இன்று உறுதியாகிவிடும் என்று நம்பப்படுகிறது

    Coronavirus Updates : 2020 ஏப்ரல் மாதத்தில் திருவிழாக்கள் வரும் நிலையில், கோவிட்-19 நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடக்கநிலை அறிவிப்பை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எந்த சமூக / மத கூட்டங்கள் / ஊர்வலங்களுக்கும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஆன்லைன் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளை பெறும் நோக்கத்தில் `பாரத் பதே ஆன்லைன்' என்ற ஒரு வார கால இயக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' நேற்று புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். இப்போதுள்ள டிஜிட்டல் கல்வி தளங்களை பிரபலப்படுத்துவதுடன், ஆன்லைன் கல்விச் சூழலில் இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் / தீர்வுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு, நாட்டில் உள்ள சிறந்த அறிவாளிகளுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில், இந்த ஒருவார கால இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுதொடர்பான கருத்துக்களை bharatpadheonline.mhrd@gmail.com என்ற இமெயில் முகவரியிலோ, #BharatPadheOnline என்ற ஹாஸ்டேக்கை போட்டு ட்விட்டர் கணக்கு மூலமாகவோ 2020 ஏப்ரல் 16 ஆம் தேதி வரையில் தெரிவிக்கலாம்.ட்விட்டர் இணைப்பைப் பயன்படுத்தும்போது @HRDMinistry மற்றும் @DrRPNishank என்ற கணக்குகளுக்கும் டேக் (tag) செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment