பொது முடக்கம் பகுதியில் தளர்வுகள்: இதற்கான அடிப்படை அளவுகோல் என்ன?

Lockdown 4.0 : ஊரடங்கை தளர்த்தும் உரிமையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போது தான் மாநிலத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்

கொரோனா தொற்று பரவல் பாதிப்பை வைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில், ஊரடங்கு உத்தரவில் பெரும்பாலான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் அனைத்தும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில முதல்வர்கள், மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள் உள்ளிட்டோர்களிடையே நடத்திய ஆலோசனைகளை தொடர்ந்து பின்விளைவுகளை ஆராய்ந்தே தளர்வு குறித்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சம் மக்கள்தொகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், 7 நாட்களில் பாதிப்பு இரட்டிப்பு விகிதம், மரண விகிதம், லட்சம் மக்கள்தொகையில் நிகழ்த்தப்பட்ட சோதனைகள், மாதிரிகளின் சோதனைகள் உள்ளிட்டவைகளை அளவுகோலாக கொண்டு இந்த தளர்வு முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுத், மாநில அரசுகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில், மாநில அரசுகள் வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து மாவட்டங்கள், நகராட்சிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக பிரிக்க வேண்டும். இந்த மண்டலங்களில் அதிக பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் அதனினுள்ளும் உட்பிரிவை ஏற்படுத்த வேண்டும். வைரஸ் தொற்று பரவல் அதிகம் காணப்படும் பகுதிகளை தனித்து பிரித்து எடுக்க வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த நெறிமுறைகள் குறித்து மாநில அரசுகள் முன்னரே, மத்திய அரசுடன் கலந்தாலோசித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் உள்ள 30 நகராட்சி பகுதிகளிலேயே, தேசிய அளவில் 80 சதவீத கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களை சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு வெளிநபர்கள் அனுமதி மறுக்கப்பட்டதன் விளைவாக வைரஸ் தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு மண்டலங்களில், தொடர்ந்து 28 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு, வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை, தொடர்பு தடமறிதல், தனிநபர் இடைவெளியை தீவிரமாக கடைப்பிடித்தல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வலர்களை இனங்கண்டறிந்து அவர்களுக்கான உஉதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கைகழுவுதல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தற்காத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தவைகள் அவர்களுக்கு கற்றுத்தரப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தேசிய அளவில், கடந்த 24 மணிநேரத்தில், 4987 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் இவ்வளவு அதிகமான பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 120 மரணங்கள் பதிவாகியுள்ளன. 34108 பேர் குணமடைந்துள்ளனர். 2872 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது.

மே 11ம் தேதி, பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், ஊரடங்கை தளர்த்தும் உரிமையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போது தான் மாநிலத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்பது மட்டுமல்லாமல், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த இயலும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus india lockdown health ministry covid 19 lockdown 4 narendra modi

Next Story
கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது? இந்தியா உட்பட 62 நாடுகள் தீர்மானம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express