இன்று சென்னையில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே ஓடும்: மெட்ரோ ரயில்கள் ரத்து

Janata curfew News : இன்று பொது மக்கள் கடைபிடிக்கும் ஊரடங்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.  

Janata curfew News : இன்று பொது மக்கள் கடைபிடிக்கும் ஊரடங்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.  

author-image
WebDesk
New Update
Tamil Nadu News Live Updates, MTC Bus strikes, MTC staff strike

Tamil Nadu News Live Updates

இந்தியாவில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு(Janata Curfew) உத்தரவை பின்பற்றுமாறு இந்திய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதாவது, தொடர்து 14 மணி நேரம், இந்தியா தன்னை பூட்டிக்கொள்கிறது. டெல்லியின் கொனாட் பிளேஸ், சரோஜினி நகர், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நிலையம், தமிழத்தின் கோயம்பேடு வணிக வளாகம் ஆகியவை வெறிச்சோடிய தோற்றத்தில்  காணப்படுகின்றன.  இந்த ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: India coronavirus Janata curfew LIVE Updates: As 14-hour lockdown begins, PM Modi makes fresh appeal to citizens

இந்த சுய ஊரடங்கு உத்தரவு நிகழ்வை வெற்றிகரமாக்கும் பொருட்டு மாநில அரசும் பல்வேறு நடவடியாகைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக, தமிழகத்தில் இன்று மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் இயங்காது என்றும், மெட்ரோ ரயில் சேவையும் இன்று ஒரு நாள் நிறுத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்திய ரயில்வே துறையும் இன்று ஒருநாள்  தனது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது, இருப்பினும் ஏற்கனவே பயணங்களைத் தொடங்கியுள்ள ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அதன் இலக்கை எட்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

இன்று பொது மக்கள் கடைபிடிக்கும் ஊரடங்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

 

Janata curfew News Updates : இன்று பொது மக்கள் கடைபிடிக்கும் ஊரடங்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Highlights

 

21:06 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாளை காலை 5 மணி முதல் சென்னையில் 50% பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துக் கழகம்

சென்னையில் பயணிகளின் நலன்கருதி நாளை காலை 5 மணி முதல் 50% மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

 


20:44 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நாளை முதல் ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட கூடாது என்றும் தினக்கூலி தொழிலாளர்கள், நடைபாதைவாசிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

 


19:55 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சென்னை மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையே தனியார் பேருந்து சேவை மார்ச் 31 வரை நிறுத்தம்

சென்னை நகரில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் ஆகியவை இன்று (22.3.2020) முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை நிறுத்தப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

 


19:39 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முக கவசம், கிருமிநாசினிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் - அமைச்சர் காமராஜ்

முக கவசம், கிருமிநாசினிகள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

 


18:29 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு

தனிமைப்படுத்தப்படும், தமிழகத்தின் 3 மாவட்டங்கள்

* சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை

* அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி

* பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டுவரப்படும்

* குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு

* 3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யும்

 

 


18:04 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விசு காலமானார்

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான விசு இன்று காலமானார். 

 

 


17:53 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை பின்பற்றுவோம்

ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், 'நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரஸ் வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

#IndiaFightsCoronavirus #StayAtHome #StaySafe pic.twitter.com/Jg2dgyuBh6

— Rajinikanth (@rajinikanth) March 22, 2020

 

 


17:39 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு

தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க உத்தரவு

* கொரோனா பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை முடக்க , மத்திய அரசு உத்தரவு

* டெல்லி , சத்தீஸ்கர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கம்

* புதுச்சேரியில் மாஹே மாவட்டம் முடக்கம்

 

 


17:24 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நன்றி தெரிவித்த முதல்வர்கள்....

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதல்வர் ஆகியோர் மருத்துவர்களுக்கு கரவொலி எழுப்பியும், மணியோசை மூலம் ஒலி எழுப்பியும் நன்றி தெரிவித்தனர். 

 

 


17:08 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முதல்வர், துணை முதல்வர் கரவொலி எழுப்பி நன்றி

முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் இணைந்து கரவொலி எழுப்ப, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன் குடும்பத்தாருடன் இணைந்து கரவொலி எழுப்பி மருத்துவர்களின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தார். அதுபோல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன் வீட்டின் பால்கனியில் நின்று கரவொலி எழுப்பினார். 

நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக முதலமைச்சர் பழனிச்சாமி கரவொலி எழுப்பி நன்றி தெரிவிப்பு#EdappadiPalaniswami | #COVID19 pic.twitter.com/1fMC69XS6j

— Thanthi TV (@ThanthiTV) March 22, 2020

 

 


17:04 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மருத்துவர்களுக்கு கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்த மக்கள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தன்னலமற்று கொரோனா வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்களை பாராட்டு விதமாக பொதுமக்கள் கைத்தட்டியும், ஒலி எழுப்பியும் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

 

 


16:56 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உயிரிழந்தவர்கள் – 12,755 பேர்

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 2,97,090

உயிரிழந்தவர்கள் – 12,755 பேர்

குணமடைந்தவர்கள் - 91,540 பேர்

அதிக உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்

இத்தாலி – 4,825
சீனா – 3,139
இரான் – 1,556

 

 


16:51 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நீர்த்திவலைகள் மூலம் பரவுகின்றன

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவாது, நீர்த்திவலைகள் மூலம் பரவுகின்றன - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

 

 


16:30 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அனைத்து செயல்பாடுகளையும் முடக்க உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புள்ள 75 மாவட்டங்களில் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க உத்தரவு

* அவசர தேவைகளை தவிர மற்றவற்றை மேற்கொள்ள தடை

* மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு

 

 


16:30 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

144 தடை உத்தரவு

டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு. வரும் 31ஆம் தேதி வரை அமல் என அறிவிப்பு.

 

 


16:30 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

7 மாவட்டங்களில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 


16:18 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

* குஜராத் மாநிலம், சூரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது முதியவர் பலி

* குஜராத் சுகாதாரத்துறை தகவல்

* இந்தியாவில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

 

 


15:54 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

17 காவலர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் இன்று நக்சலைட்டுகளுடனான மோதலில் 17 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

 


15:51 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரீடிங் எடுக்க முடியாத நிலை

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் மாத மின்சார கட்டண ரீடிங் எடுக்க முடியாத நிலை. ஜனவரி, பிப்ரவரி மாத மின்கட்டணத்தை கணக்கீடாக எடுத்து கட்டணத்தை செலுத்த மின்வாரியம் அறிவிப்பு

கவுன்டர்களுக்கு வருவதை தவிர்த்து இணையவழியில் மின்கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தல்

 

 


15:50 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேற்குவங்கத்தில், கொல்கத்தா மற்றும் 125 நகரங்களில் வரும் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

* மேற்கு வங்க அரசு அறிவிப்பு

 

 


15:27 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய மின் கட்டணம்

கொரோனா பாதிப்பு காரணமாக முந்தைய மின் கட்டணத்தையே இந்த மாதத்திற்கும் செலுத்தலாம்

- தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

 

 


15:21 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஊரடங்கு நள்ளிரவு 12 வரை நீட்டிப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு காலை 6 மணிவரை நீட்டிப்பு. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் ஊரடங்கு நள்ளிரவு 12 வரை நீட்டிப்பு

 

 


15:20 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

31ஆம் தேதி வரை ஊரடங்கு

உத்தரகண்ட் மாநிலத்தில் 31ஆம் தேதி வரை ஊரடங்கு

உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு. உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் கிடைக்கும் எனவும் அறிவிப்பு.

 

 


15:15 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளம் - திமுக அறிவிப்பு

#CoronaVirus பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக MLA-க்கள் & MP-க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்.

#TNGovt-ம் இதற்கென கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழகத் தொழிலதிபர்களும் உதவ வேண்டும்.

- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#CoronaVirus பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக MLA-க்கள் & MP-க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்.#TNGovt-ம் இதற்கென கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழகத் தொழிலதிபர்களும் உதவ வேண்டும். pic.twitter.com/pA0rxTi1KW

— M.K.Stalin (@mkstalin) March 22, 2020

 

 


14:45 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவுரை

இந்திய விடுதிகளில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவுரை. விடுதியிலேயே தங்கி இருக்குமாறு உத்தரவு

மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்

 

 


14:43 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 75 மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 


14:09 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை

தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு

மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு. இன்று இரவு 9 மணியுடன் ஊரடங்கு நிறைவடையும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது நீட்டிப்பு

மக்கள் நலன் கருதி, ஊரடங்கு காலை 5 மணி வரை தொடரும். அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை - தமிழக அரசு

மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள்

 

 


14:07 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வெளிமாநில வாகனங்களுக்கு தடை

புதுச்சேரியில் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்களுக்கு தடை - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை உத்தரவு. புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

 

 


13:45 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிகப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 


13:44 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விஜயகாந்த் தலைமையில் திருமணம்

விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்தியஅரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில்,மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது.

- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

விமல்-கமலி திருமணம் இன்று எனது தலைமையில் திருமணமண்டபத்தில் நடைபெறவிருந்தது. மத்தியஅரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில்,மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்,அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெற்றது.#MarriageOnJantaCurfew pic.twitter.com/6bETKJqXAj

— Vijayakant (@iVijayakant) March 22, 2020

 

 


13:40 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

’மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து’

மார்ச் 31 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நாடு முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் நிறுத்துவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்திய ரயில்வே நடவடிக்கை.

 

 


12:46 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு வரும் என நம்புகிறேன்: டாக்டர் ராமதாஸ் ட்வீட்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில்,"கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்காக உலகம் முழுவதும் 100 கோடிக்கும் கூடுதலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும். இதுபற்றிய அரசு அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.   

 

 


12:17 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதுபோன்ற நேரங்களில் டிஜிட்டல் பேமென்ட் உதவியாக இருக்கும் - பிரதமர் நரேந்திர மோடி

This is the time to ensure Social Distancing.

Digital Payments help you do that. Let’s listen to these stalwarts and adopt digital payments. #PaySafeIndia @NPCI_NPCIhttps://t.co/qsNcs0EhKIhttps://t.co/imtK8x98XThttps://t.co/yzKPHiXEvDhttps://t.co/TMuZdPqR2O

— Narendra Modi (@narendramodi) March 22, 2020

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாம் அனைவரும் சமூக தொலைவு கொள்கையை பின்பற்ற வேண்டிய நேரம். இது போன்ற சூழ்நிலையில் ஆன்லைன் பேமென்ட் உங்களுக்கு உதவியா இருக்கும். டிஜிட்டல் பேமன்ட் முறையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.   

 

 


12:12 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் அனைவரும் ஒரு மதிப்புமிக்க வீரர்- பிரதமர்

Quality family time, television and some good food.

Each of you is a valued soldier in this battle against COVID-19.

Your being alert and cautious can help lakhs of other lives. #JantaCurfew https://t.co/zuoocrP4Th

— Narendra Modi (@narendramodi) March 22, 2020

குடும்பத்திற்கான நேரம், தொலைக்காட்சி, சில நல்ல உணவு.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு  எதிரான இந்த போரில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மதிப்புமிக்க வீரர் .

நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது லட்சக்கணக்கான மக்களுக்கு  உதவும்

என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

 

 


12:06 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரயில் நிறுத்தத்தை மேலும் சில நாட்கள் நீட்டிக்க யோசனை

இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.  இந்த ரத்து நடவடிக்கையை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகால்கள் தெரிவ்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் தடுப்பு நடவடிக்கையில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கின்றது.   

 

 


10:40 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி : திருநெல்வேலி காவல்துறை ஏற்பாடு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்தது. மேலும், இன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவையும் மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். 

இந்நிலையில், மாணவர்களின் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றவும், வெளியில் நடமாடுவதை தவிர்க்கவும் திருநெல்வேலி காவல்துறை,மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஓவியப்போட்டி ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் NELLAICOPSMC@GMAIL.COM என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் ஓவியங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       

 

 


10:34 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உத்தரவு மீறிய 6 ஆட்டோக்கள், 1 சரக்கு வாகனம் பறிமுதல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ்  தொற்று பாதுகாப்பு நடைவடிக்கையாக  இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றனர். இன்னியாளியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உத்தரவை மீறி செயல்பட்ட ஆறு ஆட்டோக்களையும், ஒரு சரக்கு வாகனத்தையும் மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்துள்ளார்.        

 

 


10:04 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இத்தாலியில் இதுவரை 4,825 மக்கள் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தோற்றால் இதுவரை உலகளவில் 3 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்திற்கும் அதிகாமான மக்கள் பலியாகியுள்ளனர்.

இத்தாலி சோகம் : நேற்று ஒரே நாளில் மட்டும் 793 பேர் பலியாகியதையடுத்து, இத்தாலியின் இறப்பு எண்ணிக்கை  4,825  ஆக உயர்ந்துள்ளது.  

 

 


09:54 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வெறிச்சோடி காணப்படும் தஞ்சாவூர் மாவட்டம்

இன்று காலை 7 மணி முதல் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு(Janata Curfew) உத்தரவை பின்பற்றுவதை தொடர்து தஞ்சாவூர் மாவட்டம் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.   

 

 


09:51 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


We're taking some rest and social distancing ourselves today. #JantaCurfew pic.twitter.com/ieuk5o6cwD

— Delhi Metro Rail Corporation (@OfficialDMRC) March 22, 2020

இன்று மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தனது ட்விட்டரில்,"நாங்கள் இன்று கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம், எங்களை நாங்களே தனிமைபடுத்திக் கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது. 

 

 


09:42 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பஞ்சாப் மாநிலம் மார்ச் 31ம் தேடி வரை பூட்டப்படுகிறது.

இதுவரை 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, பஞ்சாப் அரசு நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை மாநிலத்தை முழுமையாக பூட்டப்படுவதாக அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் மட்டும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

 

 


09:06 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மக்கள் ஊரடங்கு உத்தரவு: சென்னை புறநகர் ரயில் நிலைய வாசிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு, திருவனந்தபுரம், சேலம், மதுரை, திருச்சி, பாலக்காடு ஆகிய ஐந்து பிரிவுகளிலிருந்தும் ரயில் இயக்கத்தை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.புரட்சி தலைவர் எம் ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையம், சென்னை எக்மோர், செங்கல்பட்டு, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் இயங்கும் அறுபத்து நான்கு இன்டர்சிட்டி ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும், மூர் சந்தை வளாகம் டூ அரக்கோணம், சென்னை கடற்கரை டூ வேளச்சேரி, சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு, மூர் சந்தை வளாகம் டூ  கும்மிடிபூண்டி நிலையங்களுக்கு இடையிலான எம்.ஆர்.டி.எஸ் சேவைகள் இன்று  ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவற்றிற்கு பதிலாக, சென்னை கடற்கரை டூ  செங்கல்பட்டு, மூர் சந்தை வளாகம் டூ அரக்கோணம்,  மூர் சந்தை வளாகம் டூ கும்மிடிபூண்டி நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் (காலை 6 மணி -11 மணி வரை, மாலை 6 மணி - இரவு 10 மணி வரை) ஒரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

 

 


08:45 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அனைத்து பயணிகள் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் ரத்து,மக்கள் சிக்கித்தவிப்பு

Janata Curfeu News Live:  இன்று இரவு 10 மணி வரை அனைத்து பயணிகள் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புது தில்லி ரயில் நிலையத்திற்கு வெளியே சிக்கியுள்ள பயணிகள்.

 

 


08:39 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மக்கள் ஊரடங்கு உத்தரவு: அமைதியான சென்னை

இன்று காலை 7 மணி முதல் சென்னை மக்கள் சுயமாக ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், வரும் 31ம் தேதி வரையில், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் முயற்சியாக, சென்னை கடற்கரைகள் பூட்டப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.   

   

 

 


08:29 (IST)22 Mar 2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வீட்டிற்குள் இருந்து, ஆரோக்கியம் பேணுங்கள் – பிரதமர் மீண்டும் வேண்டுகோள்

In a few minutes from now, the #JantaCurfew commences.

Let us all be a part of this curfew, which will add tremendous strength to the fight against COVID-19 menace. The steps we take now will help in the times to come.

Stay indoors and stay healthy. #IndiaFightsCorona pic.twitter.com/11HJsAWzVf

— Narendra Modi (@narendramodi) March 22, 2020

இன்று நடைபெறும் ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், " கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு, இன்று நடைபெறும் ஊரடங்கு உத்தரவு மிகப்பெரிய பலமாக இருக்கும். இப்போது நாம் எடுக்கும் படிகள் வரவிருக்கும் காலங்களில் உதவும். இன்று வீட்டிற்குள் இருந்து, உங்களின் ஆரோக்கியத்தை பேணுங்கள்" என்று பதிவு செய்துள்ளார்.    

 

 

 

Janata curfew News Updates : கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: