கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் இடையே தூக்கமின்மை, மறதி, மனக் கவலை – லான்செட் ஆய்வு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடையே தூக்கமின்மை, மறதி மற்றும் மனக்கவலை ஆகியவை மிகவும் பொதுவாக காணப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Coronavirus, covid-19, Coronavirus impact on mental health, Coronavirus impact on brain, Coronavirus depression, கொரோனா வைரஸ், கோவிட்-19, மனக்கவலை, தூக்கமின்மை, மறதி, லான்செட் ஆய்வு, lancet study, Coronavirus insomania, Coronavirus anxiety, Coronavirus mental health issues

100 நோயாளிகளில் ஐந்தில் 1 பங்கு அல்லது 18 பேர்களுக்கு கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட்டு 14 முதல் 90 நாட்களுக்குள் மனநல பிரச்னைகளை அளிக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிட் -19 பாதிக்கப்பட்ட 62,354 பேர்களிடம் நடத்திய ஆய்வில் இது அதன் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்த ஆய்வு லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில், கோவிட்-தொடர்புடையவர்களுக்கு மனநலப் பிரச்சினை நிகழ்வுகள் மற்ற சுவாசக் குழாய் தொற்றுகளான இன்ஃபூயன்சா, எலும்பு முறிவு அல்லது தோல் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவரக்ளைவிட அதிகமாக இருந்தன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடையே தூக்கமின்மை, மறதி மற்றும் மனக்கவலை ஆகியவை மிகவும் பொதுவாக காணப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நபர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அவர் மறதியால் அகடுமையாக பாதிக்கப்படுவார்.

“மனக்கவலை, மன அழுத்தக் கோளாறு, பொதுவான மனக்கவலை பிறழ்வு, மன உளைச்சலுக்கு பிந்தைய பாதிப்பு, அச்சம், ஆகியவை அடிக்கடி காணப்பட்டது” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தற்போதுள்ள மனநல பிரச்சினைகள் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துமா என்பதையும் ஆய்வு செய்துள்ளது. இதற்கு ஆமாம் என்று பதில் கிடைத்துள்ளது. “கோவிட் -19 பரவலுக்கு முந்தைய ஆண்டில் மனநல பிறழ்வு இருந்ததைக் கண்டறிதல் கோவிட் -19 இன் 65% அதிகரிப்பதற்கான ஆபத்துடன் தொடர்புடையது” என்று தெரிவித்துள்ளது.

மற்ற குழுக்களும் கோவிட்டுக்கு பிந்தைய மனநலத்தை ஆய்வு செய்து வருகின்றன.

இங்கிலாந்தைச் சேர்ந்த கோரோநெர்வ் குழு இப்போது ஒரு பெரிய தரவுத்தளத்தை வழங்க கோவிட் தொற்று நோயாளிகளில் நரம்பியல் மற்றும் நரம்பியல் மனநல பிரச்னைகளின் வரைபட மருத்துவ அறிக்கைகள் மூலம் தரவைத் தொகுத்து வருகிறது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் (பி.எம்.ஜே) அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இறந்த கோவிட் -19 நோயாளிகளின் பிரேத பரிசோதனைகளில் மூளையில் அழற்சி ஆதாரங்களைக் காட்டுகின்றன. நியூரோஇமேஜிங் ஆய்வுகள் சிக்கலான நோயாளிகளுக்கு லுகோயென்ஸ்ஃபாலோபதி மற்றும் மைக்ரோ இரத்தப்போக்கு எனப்படும் ஒரு நரம்பியல் கோளாறைக் கண்டறிந்துள்ளன.

கொரோனா வைரஸ் முதல் அலைக்குப் பிறகு, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட 99 நோயாளிகளில் 9 சதவீதம் பேர் குழப்ப நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஜமா நரம்பியல் ஆய்விதழ் சீனாவில் 214 நோயாளிகளின் மற்றொரு ஆய்வை வெளியிட்டது. குறைந்தது 78 நோயாளிகளுக்கு நரம்பியல் வெளிப்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. சில ஆய்வுகள் ஸ்டீராய்டுகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளன.நோயாளிகளிடையே நரம்பியல் மனநல பிரச்சினைகளை ஏற்படுவதற்கு காரணமாகி அவை இரு முனைகள் கொண்ட கத்தியாக செயல்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus insomnia dementia anxiety most common among those infected by covid 19 lancet study

Next Story
பிற்போக்குதனமான அத்துமீறல்களை இந்தியா வலுவாக எதிர்க்கும் – பிரதமர் மோடி உரைPM Modi greets nation on Diwali, to spend the day with soldiers in Jaisalmer
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com