கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்?

கொரோனாவுக்கு இனம், மதம், மொழி பாகுபாடு ஏதும் இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் கூறி வருகிறார்.

By: Updated: April 10, 2020, 10:34:30 AM

Coronavirus Kerala fights COVID19 100th day special report in Tamil : கொரோனா வைரஸின் முதல் நோயாளி குறித்து அறிவிப்புகள் வெளியாகி இன்றோடு நூறு நாட்கள் ஆனது. ஆரம்பத்திலேயே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்திருக்கும். மருத்துவத்துறை, தூய்மை பணியாளர்கள், மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் குறித்து அதிக அக்கறையுடனும், துரிதமாகவும் இந்தியா செயல்பட்டிருக்கும். இந்தியாவில் இந்நோய் பரவாது என்று மேம்போக்காக இருந்ததன் விளைவு இன்று நாம் பொருளாதார சிக்கல்களை சந்திக்க வழி செய்துள்ளது.

கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் அம்மாநில நடந்து கொண்டது தான் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரமாக சென்றடைய காரணமாக அமைந்தது. மேலும் கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் முதல்வர் பினராயி விஜயனே நேரில் அறிவிக்கிறார். மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேட்டறிந்து அதனை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்பு காட்டுகிறது அம்மாநில அரசு.

மேலும் படிக்க : நள்ளிரவில் கேரள எல்லையில் தத்தளித்த 14 பெண்கள்… துரிதமாக மீட்ட பினராயி விஜயன்!

பொதுமக்களின் தேவையை உணர்ந்து முதலில் பாதுகாப்பான முறையில், சிறையில் மாஸ்க்குகள் செய்யும் பணியை தீவிரப்படுத்தியது கேரளா. அனைவரும் N95 மாஸ்க்குகள் தான் உதவும். இது  தேவைக்கு ஆகாது என்று பலரும் அப்போது கேலி செய்தனர். ஆனால் தற்போதையை இந்திய அரசின் சுகாதாரத்துறை “வீட்டிலேயே மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பருத்தி ஆடையையும் கூட 5 நிமிடங்களுக்கு உப்பு போட்ட நீரில் கொதிக்க வைத்து பின்னர் முக கவசம் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று  அறிவித்திருந்தது. அமெரிக்காவின் சி.டி.சி (Centers for Disease Control and Prevention)-ம் கூட பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் டி-சர்ட் அல்லது பாந்தனாவில் முக கவசங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க :கொரோனா தீவிரம் : எல்லாத்துக்கும் கேரளா முன்னோடி தான்… ”மாஸ்க்” தயாரிக்கும் கைதிகள்!

ரேப்பிட் டெஸ்ட்டுகள் கொண்டுவரப்பட்டு, மக்களுக்கு தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறது அம்மாநிலம். எபோலா போன்ற தொற்றுநோயை கண்ட அம்மாநிலம், அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை இங்கே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலை

இன்றைய நிலவரத்தின்படி (10/04/2020) கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 258. 97 நபர்கள் இதுவரை இந்நோயில் இருந்து பிழைந்த்துள்ளனர். (90 வயது, 88 வயது நோயாளிகளும் உயிருடன் வீடு திரும்பியுள்ளனர்). மொத்தமாக இந்நோயின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் 357. இதுவரையில் 12710 நபர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1251 கம்யூனிட்டி கிச்சன்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஒரு வேளை இந்நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் கூட மக்களை பாதுகாக்க திட்டங்களுடன் இயங்கி வருகிறது கேரள அரசு. 1.73 லட்சம் படுக்கை வசதிகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் 1.1 லட்சம் படிக்கை வசதிகள் இப்போது தயார் நிலையில் உள்ளது.

பரிசோதனைகளில் மாற்றம்

ஏப்ரல் 2ம் தேதி வரை, கொரோனா நோயின் மூன்றுக்கும் மேற்பட்ட, அல்லது அளவுக்கு அதிகமான நோய் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை என்ற நிலையை வைத்திருந்தது. ஆனால் ஏப்ரல் 3ம் தேதிக்கு பிறகு, இரண்டு நோய் அறிகுறிகள் இருந்தாலே சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கஞ்சிக்கோட்டில் ரெஸ்பிரேட்டர்கள், வெண்டிலேட்டர்கள், என்95 மாஸ்க்குகளை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று பேரிடர்கள்

கடவுளின் நாடு என்று அழைக்கப்படும் கேரளாவின் முக்கிய வருமானம் சுற்றுலாத்துறையில் இருந்து வருவது தான். லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் கேரளாவின் அழகை கண்டு ரசிக்க வெளிநாடுகளில் இருந்து படையெடுப்பது வழக்கம். 2018ம் ஆண்டு பெருவெள்ளம், 2019ம் ஆண்டு பெருவெள்ளம் என அனைத்திலும் சிக்கித் தவித்த மாநிலத்தின் சுற்றுலாத்துறை கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் வளர்ச்சி அடைய துவங்கியது. ஆனாலும் கொரோனாவால் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மத்திய அரசின் நிவாரண நிதி உதவியாக வெறும் 157 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. இருந்தாலும், அம்மக்களின் ஒற்றுமை, கடந்த  கால இயற்கை பேரிடர்களில் கற்றுக் கொண்ட பாடம், சகோதரத்துவம் தான் கொரோனாவிற்கு எதிராக தொடர்ந்து 100 நாட்கள் விடாமுயற்சியுடன் போராட உத்வேகம் அளித்துள்ளது.

மேலும் படிக்க : நாட்டிலேயே சிறந்த கொரோனா வைரஸ் சோதனை விகிதம் கேரளாவில்… ஆனால் அது போதுமா?

கொரோனா இன, மத பேதம் பார்ப்பதில்லை

ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று 232 வெளிநாட்டினரை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது அம்மாநிலம். வெளிநாட்டில் இருந்து வந்து தங்கியவர்கள் மீது தாக்குதல் நடைபெற, தாக்குதலுக்கு ஆளானவர்களை அணைத்துக் கொள்ளும் பொருட்டு, உலகமே கொரோனாவால் அழிந்து கொண்டு உள்ளது. இதில் துவேஷம் பார்க்க ஒன்றும் இல்லை. நம் மண்ணை நம்பி வந்தவர்களுக்கு நாம் தரும் வரவேற்பு இது தானா என்ற கேள்வியையும் முன் வைத்தார் பினராயி விஜயன். கொரோனாவுக்கு இனம், மதம், மொழி பாகுபாடு ஏதும் இல்லை என்பதை அவர் மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் கூறி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

புலம்பெயர் ஊழியர்கள்

தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றே, கேரளாவிலும் புலம்பெயர் ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வது முடியவே முடியாத காரியம் என்பதால், அவர்களின் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. வேலை மற்றும் வருமானம் இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்க கம்யூனிட்டி கிச்சன்கள் தயாரானது. மேலும் இந்த கம்யூனிட்டி கிச்சன்களில் பணியாற்ற இந்தி தெரிந்த கேரள ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மொழி புரியாமல் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க இந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus kerala fights covid19 100th day special report in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X