coronavirus kerala SSLC HSC school board postponed again : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் இந்தியா முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான அட்டவணைகள் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு அட்டவணைகளில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கேரளாவில் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விரும்பாத அம்மாநில அரசு, தேதிகள் ஏதும் குறிப்பிடாமல் அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளது. இந்தியாவிலேயே குறைவான கொரோனா பரவல் மற்றும் இறப்பு விகிதத்தை கொண்டிருக்கிறது கேரளா. மே 26ம் தேதி தேர்வுகள் நடைபெற இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக தேர்வுகள் வருகின்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு பேருந்துகள் மூலம் மாணவர்களை அழைத்து வந்து தேர்வு எழுத வைக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மே 31ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“