Advertisment

Coronavirus Updates: மே மாத ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

Coronavirus Latest Updates: கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus Updates: மே மாத ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

Covid-19 News Update: ராபிட் ஆன்டிபாடி பரிசோதனை செய்வதற்கான வரைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐசிஎம்ஆர் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே, பெரும்பாலும் இந்த ஆன்டிபாடி ராப்பிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஐசிஎம்ஆர் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ சி எம் ஆர் குறிப்பிட்டுள்ளபடி, கோவிட் 19 தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை முறைக்கு மாற்றாக, இந்த சோதனையைப் பயன்படுத்தப்பட முடியாது.

Advertisment

தேசிய தகவல் மையத்தின் மூலமாக 1921 என்ற எண்ணில் இருந்து, குடிமக்களுக்கு, அவர்களின் அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, அலைபேசி வாயிலான ஆய்வு ஒன்றை மத்திய அரசு நடத்தவிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளனவா, எங்கெங்கு பரவலாக உள்ளன என்பதைக் கண்டறிவதற்கான முறையான கருத்துக்கள் கிடைக்க உதவும் வகையில், நாட்டு  மக்கள் அனைவரும் இந்த ஆய்வில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

இதுவரை இந்தியாவில் 3870 நோயாளிகள் குணமடைந்திருக்கின்றனர். குணமடைவோர் விகிதம் 19.36 சதவீதமாக உள்ளது. நேற்று முதல் இதுவரை, 1383 பேருக்கு தொற்று இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,971 -ஆக உள்ளது.

மேலும், இதுபோன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Updates : கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்



























Highlights

    22:51 (IST)23 Apr 2020

    மே மாத ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

    மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியை 02.05.2020 மற்றும் 03.05.2020 ஆகிய இரண்டு நாட்களில் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    21:27 (IST)23 Apr 2020

    குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அரசானை வெளியீடு

    தமிழகத்தில் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    20:07 (IST)23 Apr 2020

    மதுரையில் 25-ம் தேதி முதல் க்யூ ஆர் கோட் அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி - ஆட்சியர் அறிவிப்பு

    மதுரையில் ஏப்ரல் 25-ம் தேதி முதல் க்யூ ஆர் கோட் அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி; மற்ற வாகனங்கள் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் அறிவித்துள்ளார்.

    19:26 (IST)23 Apr 2020

    சென்னையில் ஏப்ரல் 24, 25 தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்கும்

    சென்னையில் ஏப்ரல் 24,5 தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் 10.30 வரை திறக்கப்பட்டு இயக்கும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18:49 (IST)23 Apr 2020

    ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் - தமிழக அரசு

    தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புள்ள 19 மளிகைப்பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    18:14 (IST)23 Apr 2020

    தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி - சுகாதாரத்துறை

    தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. அதிகப் பட்சமாக சென்னையில் மட்டும் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    18:05 (IST)23 Apr 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,700 ஆக உயர்வு; மொத்தம் 686 பேர் பலி

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 686 பேர் பலியாகி உள்ளனர். கொரொனா பாதித்தவர்களில் 4,325 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    17:57 (IST)23 Apr 2020

    நீதிமன்றங்கள் மே மாதத்தில் செயல்படுவது பற்றி ஏப்ரல் 29-ல் தலைமை நீதிபதி ஆலோசனை

    தமிழகம், புதுச்சேரியில் மே மாதம் நீதிமன்றங்கள் செயல்படுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஏப்ரல் 29-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுடன் காணொலி முலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17:35 (IST)23 Apr 2020

    தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

    மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசணை வெளியிட்டுள்ளது. மேலும், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    17:10 (IST)23 Apr 2020

    மதுரையில் கோயில் பட்டரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணிபுரியும் பட்டரின் தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பட்டரின் குடும்பத்தினர் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவர்கள், கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டம்.

    17:06 (IST)23 Apr 2020

    சென்னையில் மீன்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வரும் - அமைச்சர் ஜெயக்குமார்

    மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்: சென்னையில் மீன்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வரும். www.meengal.com meengal என்ற செயலியில் மீன்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வரும். முதலில் சென்னையில் சாந்தோம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், ஆகிய பகுதிகளில் காலை 6.30 மணி முதல் 12.30 வரை மீன்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும். இந்த வசதியை நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது என்று கூறினார்.

    16:40 (IST)23 Apr 2020

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,409 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை

    மத்திய சுகாதாரத்துறை: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 14 நாட்களில் 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை. அதே போல, கடந்த 28 நாட்களில் 12 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோரின் விகிதம் 19.89% ஆக உள்ளது என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    16:29 (IST)23 Apr 2020

    செல்பொன் ரீசார்ஜ் கடைகள் இயங்கலாம் - உள்துறை அமைச்சகம்

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை பரிந்துரைத்துள்ளது

    செல்போன் ரீசார்ஜ் கடைகள், மின் விசிறி பழுதுபார்க்கும் கடைகள் இயங்கலாம்; நகர்புறங்களில் மாணவர்களுக்கான புத்தகக் கடைகளும் இயங்கலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    16:18 (IST)23 Apr 2020

    கபசுர குடிநீரை குடிக்கலாம் - தமிழக அரசு பரிந்துரை

    எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம்  என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இது கொரோனாவுக்கான சிகிச்சை அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறையே  என அரசு தெரிவித்துள்ளது.

    15:54 (IST)23 Apr 2020

    தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்...?

    ஊரடங்கில் தளர்வுகள்: தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்..என்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி

    நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி

    மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்

    குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி

    15:43 (IST)23 Apr 2020

    தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

    மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதியளித்தும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    15:23 (IST)23 Apr 2020

    முதல்வருக்கு செவிலியர்கள் சங்க தலைவர்கள் நன்றி

    கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்,செவிலியர், மருத்துவ பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50லட்சம் நிதி உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு கிளை, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்க தலைவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

    publive-image

    15:15 (IST)23 Apr 2020

    தமிழகத்தில் ‘ஆரோக்கியம்’ திட்டம் துவக்கம்

    மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘ஆரோக்கியம்’ திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சிகிச்சை பெற்ற பின் மக்கள் உடல் நலத்தை பேண ஆரோக்கியம் திட்டத்தை  முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    13:26 (IST)23 Apr 2020

    தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்புகுரியது - ஜி. கே. மணி

    கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ துறை (ம) பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்க நேரிட்டால், அறிவித்திருந்த ரூ10 லட்சம் நிவாரண தொகை ரூ50 லட்சமாக உயர்த்தியும், அவர்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணியும் வழங்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. 

    இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்   

    13:13 (IST)23 Apr 2020

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2021 வரை அகவிலைப்படி நிறுத்தம்

    13:07 (IST)23 Apr 2020

    இஸ்லாம் மதத்தை சேர்ந்த டெலிவரி நபரை வசைபாடியவர் கைது

    மளிகை பொருட்களை டெலிவரி செய்பவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் வாங்க ஒருவர் மறுத்துவிட்டார். 51 வயது நிரம்பிய அவரின் இஸ்லாம் விரோத கருத்துக்கள் சமூக ஊடகங்கில் பரவி வருகிறது.  தற்போது,  அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.      

    12:58 (IST)23 Apr 2020

    33 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு, இதுவரை ரூ .31,235 கோடி நிதியுதவி

    பிரதான் மந்திரி கரிப் கல்யான் திட்டத்தின் கீழ் 33 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு, இதுவரை ரூ .31,235 கோடி (22.04.2020 நிலவரப்படி) பணப் பரிவர்தனை செய்யப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வலுவான டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பு இருப்பதால், பிரதான் மந்திரி கரிப் கல்யான் திட்டம்  வெற்றி அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  

    12:52 (IST)23 Apr 2020

    சென்னை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

    12:48 (IST)23 Apr 2020

    சுகன்யா சம்ரிதி -செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிவிப்புக்கு: பயனாளிகள் வரவேற்பு

    சுகன்யா சம்ரிதி -செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்த வேண்டிய தவணைத்தொகையை செலுத்த ஜூன் 30 வரை கால அவகாசம் அளித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு பயனாளிகள் வரவேற்பு.

    12:25 (IST)23 Apr 2020

    கூட்டாச்சி தத்துவத்தை கடைபிடிப்பதே கொரோனா வெற்றியின் திறவுகோல் - மன்மோகன் சிங்

    காங்கிரஸ் காணொலி செயற்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "  கூட்டாச்சி தத்துவத்தை ஆக்கப்பூர்வமாக கடைபிடிப்பதது கொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பிப்பதற்கான திறவுகோல் என்று தெரிவித்தார். 

    12:12 (IST)23 Apr 2020

    பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் மோசமான விளைவுக்கு வழிவகுக்கும் - சோனியா காந்தி

    "மார்ச் 23 அன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, நான் பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.  நமது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் துன்பங்களைத் தணிக்க பல பரிந்துரைகளையும் கொடுக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, பரிந்துரைகள் அனைத்தும் ஓரளவு மற்றும் மோசமான முறையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டன.

    மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் டெஸ்டிங் குறைவாக உள்ளது என்றும், பொது மே மாதம் மூன்றாம் தேதிக்குப் பின்னரும் இதே போன்று பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் மோசமான விளைவுக்கு வழிவகுக்கும் என்று  செயற்குழுவில் காந்தி கூறினார் .  

     

    11:55 (IST)23 Apr 2020

    ஊரடங்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் தெளிவிலில்லை - சோனியா காந்தி

    பொது முடக்க காலத்திற்கு பின்பு, நிலைமையை எவ்வாறு கையாள்வது? என்ற கேள்விக்கு மத்திய  அரசுக்கு இன்னும் தெளிவான யோசனை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். காணொலி காட்சியின் மூலம் காங்கிரஸ் செயற்குழுவில் உரையாற்றிய காந்தி, கோவிட் -19  தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசிடம்  சமர்பித்த காங்கிரஸ் பரிந்துரைகள் ஓரளவு மட்டும் அதுவும் மோசமான வழியில் செயல்படுத்தப்பட்டதாக  தெரிவித்தார்.

    11:31 (IST)23 Apr 2020

    ஊரடங்கு காலம் வரை சென்னை அம்மா உணவகத்தில் இலவச உணவு : சென்னை மாநகராட்சி

    கொரோனா வரியாஸ்  ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கல்  இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 

    10:42 (IST)23 Apr 2020

    ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மக்கள் ஆர்வம்

    இந்தியாவில் பொது முடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சேருவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.   

    கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இலாகாவை வைத்திருக்கும் ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளிடம் கூறுகையில்,ஏப்ரல் 17 அன்று 62,000 ஆக இருந்த எண்ணிக்கை, ஏப்ரல் 22 அன்று 6.08 லட்சமாக அதிகரித்தது"  என்று கூறினார். மகாராஷ்டிரா மாநில, ஊரக வேலைவாய்ப்பு இயக்குனர் ரங்க நாயக் கூறுகையில், ஏப்ரல் 12 அன்று கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்  எண்ணிக்கை சுமார் 40,000 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 1 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.  

    10:16 (IST)23 Apr 2020

    கோவை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் இயங்க அனுமது

    சமூக விலகலுடன்  கோவை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் மீண்டும் இயங்க அம்மாவட்ட ஆட்சியர்  ராஜாமணி அனுமதி அளித்துள்ளார்.  மேலும், சமூக விலகலை கடைபிடிக்காத இறைச்சிக் கடைகள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

    10:11 (IST)23 Apr 2020

    கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 21,000 ஆக அதிகரிப்பு

    இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்றின் மொத்த எண்ணிக்கை 21393 ஆக உயர்ந்துள்ளது (16454 கண்காணிப்பில் உள்ளனர் , 4257 குணப்படுத்தப்பட்டனர்/ வீடு திரும்பியுள்ளனர், 681 உயிர் இழந்துள்ளனர் : 

    09:59 (IST)23 Apr 2020

    பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கான அறிவுரை

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்லும், செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர், நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும், நோய் பாதித்த பிற பகுதிகளுக்குச் செல்லும்போது, சுகாதாரம் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

    https://mib.gov.in/sites/default/files/Advisory%20to%20Print%20and%20Electronic%20Media.pdf

    09:17 (IST)23 Apr 2020

    ரூ.15,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஒதுக்கீடு :

    "இந்தியாவில் கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு"க்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான கணிசமான முதலீடுகளை ஒதுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    09:14 (IST)23 Apr 2020

    மருத்துவ பணியாளர்களை தாக்கினால் தண்டனை - சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

    கொரோனா வைரஸ்  தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை தாக்கினால் தண்டனை பெறும் வகையில் தொற்றுநோய் சட்டம் 1897 இல் இன்று கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். 

    09:10 (IST)23 Apr 2020

    கடந்த ஒரு வாரத்தில் குஜராத் மாநிலத்தில் மூன்று மடங்காக உயர்வு

    கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும்  நிலையில், குஜராத் மாநிலத்தின் தொற்று வளர்ச்சி சத்தமில்லாமல்  அதிகரித்து வருகிறது . கடந்த ஒரு வாரத்தில், குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 15 அன்று எண்ணிக்கை 766, ஏப்ரல் 22  எண்ணிக்கை  2407-க அதிகரித்துள்ளது. 

    publive-image

    08:57 (IST)23 Apr 2020

    இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 19.36 சதவீதமாக உயர்வு

    இந்தியாவில், இதுவரை 3870 நோயாளிகள் குணமடைந்திருக்கின்றனர். குணமடைவோர் விகிதம் 19.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.நேற்று முதல் இதுவரை,1383 பேருக்கு தொற்று இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,971 -ஆக உள்ளது.

    Coronavirus Live Updates : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 அக்டோபர் 15ஆம் தேதி வரை ஹோட்டல்கள் / உணவகங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கும் ஒரு போலி கடிதம் சுற்றுலா அமைச்சகத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்ததையடுத்து, சுற்றுலா அமைச்சகத்தினால் அத்தகைய கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்க, சுமார் 43,574 கோடி முதலீடு செய்வதாக ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று அறிவித்தது.

     

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment