Covid-19 Cases Update: ''தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை, 67 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவலை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, 1.50 கோடி முக கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர், பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருவதால், 21 நாள் ஊரடங்கு உத்தரவு, மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து, மத்திய அரசு, இதற்கு விளக்கம் அளித்துள்ளது. 'ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை' என, மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
* அதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
* ஏற்கனவே 74 பேர் பாதிப்பு. தற்போது 124ஆக உயர்வு
* டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131
* 515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம்
* மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும்
* நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் - கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்
* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது
* டெல்லி மாநாடு சென்றவர்கள் தயவு செய்து தாங்களாக வந்து தகவல் கூறுங்கள்
* டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர்
* உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம்
கிருமி நாசினி தெளிப்பது மட்டுமல்லாமல், தமிழக தீயணைப்புத் துறை கொரோனா விழிப்புணர்வை பாடல் மூலமாகவும் மக்களிடையே பரப்பி வருகிறது.
தமிழக தீயணைப்புத்துறையின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு#Song | #Policehttps://t.co/fpHcXBR6KO
— Thanthi TV (@ThanthiTV) March 31, 2020
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131.
515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம். மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும். நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்
- பீலா ராஜேஷ்
தமிழகத்தில் இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.
இந்த 50 நபர்களில், 45 பேர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்காக, பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவினர், மத்திய அரசின் மருத்துவர்களோடு இணைந்து ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் செயற்கை சுவாசம் அளிக்கும் நிலையில் ஒருவர் கூட இல்லை என தெரிவித்தார்.
பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்களின் 2 நாள் ஊதியம் உள்பட 100 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவால் புலம் பெயரும் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி வழக்கறிஞர்கள் 2 பேர் தாக்கல் செய்த பொது நல மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது. நிலவர அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் குறித்த வழக்கில் நிலவர அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் நான்கு கோடியே 14 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளனர் என்றும், நாடு முழுவதும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 22 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். கொரோனாவைவிட பயம் தான் மக்களை அதிகம் பாதித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மாலை 4.30 மணி அளவில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார். அதைத் தொடர்ந்து இருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தங்கு தடையில்லாமல் நடைபெறுவது பற்றி ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி
மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மாதந்தோறும் 32,45,000 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
வட்டாட்சியர், வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவு
அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Zone 4 - கொடுங்கையூர் , வியாசர்பாடி , புது வண்ணாரப்பேட்டை
அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Zone 4 - கொடுங்கையூர் , வியாசர்பாடி , புது வண்ணாரப்பேட்டை#COVID19 | #Chennai | @ChennaiCorp pic.twitter.com/wWRqqogLbr
— Thanthi TV (@ThanthiTV) March 31, 2020
அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Zone 3 - மாதவரம்
அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Zone 3 - மாதவரம் #COVID19 | #Chennai | @ChennaiCorp pic.twitter.com/WWoCbLI2rP
— Thanthi TV (@ThanthiTV) March 31, 2020
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் பெரு நகராட்சி ஆணையரிடம் அவசர பாஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர மாநாகராட்சி பகுதியில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல மண்டல அதிகாரியிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்திற்குள் பயணிப்பவர்கள் வட்டாட்சியரிடம் பாஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால், எங்கிருந்து பயணம் தொடங்குகிறதோ, அந்த மாவட்ட ஆட்சியரிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தமிழக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. நெருங்கிய உறவினர் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ தேவை ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே அவசர பாஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது - தனியார் பள்ளிகள் இயக்குனர்
ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது. மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கும் கொரோனா சிறப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து திருச்சியில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கொரோனா சிறப்பு பிரிவுக்கு ஒப்படைத்தார்.
தமிழகத்தில் வந்து வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வாடைகை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி தொல்லை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர்களின் சிரமம் கருதி தமிழகத்தில் வந்து வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வாடகை கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம். அதே போல, தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்றுடன் ஓய்வு பெற இருந்த மருத்துவர்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மக்கள் நலன் கருதி அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, இன்றுடன் ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களிடம் பேசிய தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், “அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. வட்டி வசூலிக்கப்படாது. ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளின் இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆலோசனை நடைபெற்றுவருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், “நமது நாட்டை மீண்டும் அதே நிலைக்கு கொண்டுவருவது அவசியம். நான் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.45 லட்சம் எனது சிறிய நன்கொடையை அளிக்கிறேன். ரூ.25 லட்சம் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கும் ரூ.5 லட்சம் ஃபீடிங் இந்தியா திட்டத்துக்கும் ரூ.5 லட்சம் தெருநாய்கள் பராமரிப்பதற்கும் அளிக்கிறேன். நம்முடைய தலைவர்கள் பின்னால் இருப்போம். அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.வி.சண்முகம், “விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், “வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது சவாலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
திருமணம், மருத்துவ சிகிச்சை, துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட அவசர பயணங்களுக்கான அனுமதி பெற உங்கள் பகுதி தாசில்தார்களை அணுகலாம்... உரிய காவல்துறை ஆய்வுக்கு பிறகு அனுமதி தரப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்குக்கு முன்பு 14,500 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. தற்போது 4,500 மெகாவாட் தேவை குறைந்து 10 ஆயிரம் மெகாவாட் மட்டுமே தேவைப்படுகிறது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.கரோனா தடுப்பு நடவடிக் கையில் உள்ள அரசு மருத்து வமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு எக்காரணம் கொண்டும் மின்தடை ஏற்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்தைச் சேர்ந்த 99 மீனவர்கள், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவோ, தங்குமிட வசதியோ இன்றி தவித்து வருகின்றனர். எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குப் போதுமான இடவசதி மற்றும் உணவு ஏற்பாடு செய்து, அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் கோரிக்கை விடுத்தார்.
Dear @PawanKalyan ,
Our team of officers met Andhra Pradesh fishermen representatives and distributed food, water & other essential commodities. They are safe and secure now! Let their families not worry! Thank you! https://t.co/kL1dAiAY15 pic.twitter.com/fhYp1fxGh9— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 30, 2020
பவன் கல்யாணின் இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளார். அவரது பதிவில், “இதுகுறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வோம்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
#TN has 7 new #COVID19 ve cases. 43 Y M,travel History to Tvm at #RGGH. 28 Y M coworker of earlier ve Pt at Tiruvannamalai MC, 3 Male Pts, at #Vilupuram MC with Travel Hist to Delhi, 2 Male Pts at # Madurai Rajaji,Trav.Hist to Delhi.All Pts in isolation & stable. @MoHFW_INDIA
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN) March 31, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தாண்டில் உலகமே மந்தநிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியா, சீனாவை தவிர்த்து மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. சர்வதேச அளவில் 3 டிரில்லியன் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு 7வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் சேகரமாகும் குப்பைகளின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாரத்திற்கு இருமுறை நான் இந்த யோகா முத்திரையை செய்து வருகிறேன். இதன்மூலம், எனது மனம் அமைதிப்படுகிறது என்று பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Whenever I get time, I practice Yoga Nidra once or twice a week.
It furthers overall well-being, relaxes the mind, reduces stress and anxiety. You will find many videos of Yoga Nidra on the net. I’m sharing a video each in English and Hindi. https://t.co/oLCz3Idnro
— Narendra Modi (@narendramodi) March 31, 2020
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனைத்தொடர்ந்து கேரளாவில், கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. கொச்சியில் முதல் நபர் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights