Advertisment

Corona Updates: கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்; எண்ணிக்கை 124-ஆக உயர்வு

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates: கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்; எண்ணிக்கை 124-ஆக உயர்வு

Covid-19 Cases Update: ''தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை, 67 ஆக உயர்ந்துள்ளது. நோய் பரவலை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, 1.50 கோடி முக கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது,'' என, முதல்வர், பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருவதால், 21 நாள் ஊரடங்கு உத்தரவு, மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து, மத்திய அரசு, இதற்கு விளக்கம் அளித்துள்ளது. 'ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை' என, மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:45 (IST)31 Mar 2020

    40 ஆயிரத்தை தாண்டியது

    உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 40, 731 பேர் இறந்துள்ளனர்.

    22:13 (IST)31 Mar 2020

    கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம்

    கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது.

    கொரோனாவால் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    22:12 (IST)31 Mar 2020

    எண்ணிக்கை 1,397 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,397 ஆக அதிகரிப்பு

    124 பேர் குணமடைந்துள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

    22:12 (IST)31 Mar 2020

    ஒரே நாளில் கொரோனாவால் 72 பேர் பாதிப்பு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை நகரில் மட்டும் 59 <பேருக்கு கொரோனா தொற்று

    21:32 (IST)31 Mar 2020

    சுகாதாரத் துறை செயலாளர் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு

    * அதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்

    * ஏற்கனவே 74 பேர் பாதிப்பு. தற்போது 124ஆக உயர்வு

    * டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131

    * 515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம்

    * மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும்

    * நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் - கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்

    * தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியது

    * டெல்லி மாநாடு சென்றவர்கள் தயவு செய்து தாங்களாக வந்து தகவல் கூறுங்கள்

    * டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர்

    * உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம்

    21:30 (IST)31 Mar 2020

    தமிழக தீயணைப்புத்துறையின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு

    கிருமி நாசினி தெளிப்பது மட்டுமல்லாமல், தமிழக தீயணைப்புத் துறை கொரோனா விழிப்புணர்வை பாடல் மூலமாகவும் மக்களிடையே பரப்பி வருகிறது.

    20:52 (IST)31 Mar 2020

    கம்யூனிட்டி கிச்சன்

    குமுளியில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, கேரள அரசு சார்பில் கம்யூனிட்டி கிச்சன் தொடங்கப்பட்டுள்ளது

    20:06 (IST)31 Mar 2020

    டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்

    டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131.

    515 பேரை மட்டுமே இதுவரை கண்டறிந்து உள்ளோம். மீதம் உள்ளவர்கள் தயவு செய்து தாங்களாக முன்வர வேண்டும். நாமக்கல்லில் 18 பேர், நெல்லையில் 22 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்

    - பீலா ராஜேஷ்

    19:54 (IST)31 Mar 2020

    124 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று காலை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது. 

    இந்த 50 நபர்களில், 45 பேர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

    19:41 (IST)31 Mar 2020

    செயற்கை சுவாசம் பெறும் நிலையில் யாரும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனா சிகிச்சைக்காக, பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவினர், மத்திய அரசின் மருத்துவர்களோடு இணைந்து ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் செயற்கை சுவாசம் அளிக்கும் நிலையில் ஒருவர் கூட இல்லை என தெரிவித்தார்.

    19:37 (IST)31 Mar 2020

    பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் நிதியுதவி

    பிரதமரின் கொரோன ​நிவாரண நிதிக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் 2 நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்களின் 2 நாள் ஊதியம் உள்பட 100 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

    19:37 (IST)31 Mar 2020

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4.14 கோடி பேர் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    ஊரடங்கு உத்தரவால் புலம் பெயரும் தொழிலாளர்களைப் பாதுகாக்கக் கோரி வழக்கறிஞர்கள் 2 பேர் தாக்கல் செய்த பொது நல மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது. நிலவர அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. கொரோனா வைரஸ் காரணமாக புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் குறித்த வழக்கில் நிலவர அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடு முழுவதும் நான்கு கோடியே 14 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளனர் என்றும், நாடு முழுவதும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 22 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். கொரோனாவைவிட பயம் தான் மக்களை அதிகம் பாதித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.

    18:53 (IST)31 Mar 2020

    ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதலமைச்சர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

    தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மாலை 4.30 மணி அளவில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரவேற்றார். அதைத் தொடர்ந்து இருவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தங்கு தடையில்லாமல் நடைபெறுவது பற்றி ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

    18:34 (IST)31 Mar 2020

    தடுப்பு நடவடிக்கைகள் மகிழ்ச்சி

    முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆளுநர் பாராட்டினார்

    * கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது - தலைமை செயலாளர்

    18:25 (IST)31 Mar 2020

    கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

    நாளை முதல் 6 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளது - தலைமை செயலாளர்

    * இறைச்சிக் கடைகளை நகருக்கு வெளியே அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

    * கடைகளை மாற்ற கடைக்காரர்கள் மறுப்பு தெரிவித்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

    18:00 (IST)31 Mar 2020

    ஒருபடி மேலே சென்ற முதல்வர்

    மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் ஒரு மாத வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது; முதல்வர் ஒருபடி மேலே போய் இரண்டு மாத வாடகையை காலம் தாழ்த்தி வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறார்

    - தலைமைச் செயலர் சண்முகம்

    17:59 (IST)31 Mar 2020

    உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும்

    முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி

    மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    மாதந்தோறும் 32,45,000 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது

    வட்டாட்சியர், வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவு

    17:57 (IST)31 Mar 2020

    கொரோனா வைரஸ் மரணங்கள்

    இத்தாலி: 11,591

    ஸ்பெயின்: 7,716

    சீனா: 3,304

    யுஎஸ்: 3,172

    பிரான்ஸ்: 3,018

    ஈரான்: 2,757

    யுகே: 1,408

    நெதர்லாந்து: 864

    ஜெர்மனி: 645

    பெல்ஜியம்: 513

    17:43 (IST)31 Mar 2020

    ரூ.220 கோடி நிதி

    இந்திய நிலக்கரி நிறுவனம் ரூ.220 கோடியும், என்.எல்.சி ரூ.25 கோடியும் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ளது - மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி

    17:23 (IST)31 Mar 2020

    3 மாதம் அவகாசம்

    கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம்

    * சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்

    - தமிழக அரசு

    17:21 (IST)31 Mar 2020

    Zone 4 - கொடுங்கையூர் , வியாசர்பாடி , புது வண்ணாரப்பேட்டை

    அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    Zone 4 - கொடுங்கையூர் , வியாசர்பாடி , புது வண்ணாரப்பேட்டை

    17:20 (IST)31 Mar 2020

    Zone 3 - மாதவரம்

    அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    Zone 3 - மாதவரம்

    17:20 (IST)31 Mar 2020

    திருமணம், இறப்பு, அவசர மருத்துவம் என மூன்று காரணங்களுக்கு மட்டுமே அவசர பாஸ் - பாஸ் எங்கு பெற வேண்டும்?

    சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் பெரு நகராட்சி ஆணையரிடம் அவசர பாஸ் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர மாநாகராட்சி பகுதியில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல மண்டல அதிகாரியிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்திற்குள் பயணிப்பவர்கள் வட்டாட்சியரிடம் பாஸ் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால், எங்கிருந்து பயணம் தொடங்குகிறதோ, அந்த மாவட்ட ஆட்சியரிடம் அவசர பாஸ் பெற வேண்டும் என தமிழக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. நெருங்கிய உறவினர் திருமணம், இறப்பு, அவசர மருத்துவ தேவை ஆகிய மூன்று காரணங்களுக்காக மட்டுமே அவசர பாஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    17:19 (IST)31 Mar 2020

    முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது

    தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது - தனியார் பள்ளிகள் இயக்குனர்

    ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது. மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    17:08 (IST)31 Mar 2020

    ரேஷன் கடை விற்பனையாளர்கள், உதவியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் - தமிழக அரசு

    தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2,500-ம், உதவியாளர்களுக்கு ரூ.2,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    17:01 (IST)31 Mar 2020

    சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சென்னை கிண்டி ராஜ்பவனில் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.

    16:24 (IST)31 Mar 2020

    திருச்சி திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயம் கொரோனா சிறப்பு பிரிவுக்கு ஒப்படைப்பு

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கும் கொரோனா சிறப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து திருச்சியில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கொரோனா சிறப்பு பிரிவுக்கு ஒப்படைத்தார்.

    15:48 (IST)31 Mar 2020

    வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்க தடை; மீறினால் நடவடிக்கை - தமிழக அரசு

    தமிழகத்தில் வந்து வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வாடைகை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி தொல்லை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர்களின் சிரமம் கருதி தமிழகத்தில் வந்து வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வாடகை கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம். அதே போல, தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    15:07 (IST)31 Mar 2020

    இன்றுடன் ஓய்வு பெற இருந்த மருத்துவ ஊழியர்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு

    இன்றுடன் ஓய்வு பெற இருந்த மருத்துவர்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    மக்கள் நலன் கருதி அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, இன்றுடன் ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    14:55 (IST)31 Mar 2020

    கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திக்கேயன் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.25 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் நிதியளித்தார்.

    14:44 (IST)31 Mar 2020

    கொரோனா நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார்.

    14:38 (IST)31 Mar 2020

    மதுரையில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வதந்தி பரப்பிய 7 பேர் மீது வழக்குப்பதிவு

    மதுரை மாவட்டம், களிமங்கலத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வதந்தி பரப்பிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    14:33 (IST)31 Mar 2020

    3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ., வட்டி வசூலிக்கப்படாது - தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பேட்டி

    ஊடகங்களிடம் பேசிய தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன், “அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. வட்டி வசூலிக்கப்படாது. ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளின் இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

    14:16 (IST)31 Mar 2020

    தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆலோசனை

    சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆலோசனை நடைபெற்றுவருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

    13:37 (IST)31 Mar 2020

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ரோஹித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், “நமது நாட்டை மீண்டும் அதே நிலைக்கு கொண்டுவருவது அவசியம். நான் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ.45 லட்சம் எனது சிறிய நன்கொடையை அளிக்கிறேன். ரூ.25 லட்சம் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கும் ரூ.5 லட்சம் ஃபீடிங் இந்தியா திட்டத்துக்கும் ரூ.5 லட்சம் தெருநாய்கள் பராமரிப்பதற்கும் அளிக்கிறேன். நம்முடைய தலைவர்கள் பின்னால் இருப்போம். அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

    13:02 (IST)31 Mar 2020

    விழுப்புரத்தில் கொரோனா பாதித்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்

    அமைச்சர் சி.வி.சண்முகம், “விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

    12:59 (IST)31 Mar 2020

    வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் - வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன்

    வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், “வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது சவாலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

    12:54 (IST)31 Mar 2020

    ராணிப்பேட்டையில் கொரோனாவுக்கு மருத்துவம் பார்த்ததாக போலி மருத்துவர் கைது

    ராணிப்பேட்டை அருகே அம்மூரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவம் பார்த்ததாக போலி மருத்துவர் மாதவன் என்பவர கைது செய்யப்பட்டுள்ளார்.

    12:36 (IST)31 Mar 2020

    அவசர பயணங்களுக்கான அனுமதி பெற உங்கள் பகுதி தாசில்தார்களை அணுகலாம்

    திருமணம், மருத்துவ சிகிச்சை, துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட அவசர பயணங்களுக்கான அனுமதி பெற உங்கள் பகுதி தாசில்தார்களை அணுகலாம்... உரிய காவல்துறை ஆய்வுக்கு பிறகு அனுமதி தரப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    publive-image

    12:10 (IST)31 Mar 2020

    கொரோனா தனிமை முகாமாக கலைஞர் அரங்கம் – திமுக அனுமதி

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனுவை மாநகராட்சி ஆணையரிடம் எம்எல்ஏ சேகர்பாபு வழங்கினார்.

    publive-imagepublive-image

    11:50 (IST)31 Mar 2020

    பெங்களூரு கல்யாண் நகரில் போலி முக கவசங்கள் கண்டுபிடிப்பு

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கல்யாண் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் போலி முக கவசங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    publive-image

    11:44 (IST)31 Mar 2020

    தமிழகத்தில் 4,500 மெகாவாட் மின்சார பயன்பாடு குறைந்தது

    தமிழகத்தில் ஊரடங்குக்கு முன்பு 14,500 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. தற்போது 4,500 மெகாவாட் தேவை குறைந்து 10 ஆயிரம் மெகாவாட் மட்டுமே தேவைப்படுகிறது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.கரோனா தடுப்பு நடவடிக் கையில் உள்ள அரசு மருத்து வமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு எக்காரணம் கொண்டும் மின்தடை ஏற்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    11:19 (IST)31 Mar 2020

    பவன் கல்யாண் கோரிக்கை - களமிறங்கிய முதல்வர் பழனிசாமி

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்தைச் சேர்ந்த 99 மீனவர்கள், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவோ, தங்குமிட வசதியோ இன்றி தவித்து வருகின்றனர். எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குப் போதுமான இடவசதி மற்றும் உணவு ஏற்பாடு செய்து, அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் கோரிக்கை விடுத்தார்.

    பவன் கல்யாணின் இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளார். அவரது பதிவில், “இதுகுறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வோம்” என்று கூறப்பட்டுள்ளது.

    11:15 (IST)31 Mar 2020

    தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 

    11:10 (IST)31 Mar 2020

    24 பேருக்கு கொரோனா பாதிப்பு

    டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மர்கஸ் கட்டடத்தில் மத கூட்டத்தில் கலந்து கொண்ட 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    10:57 (IST)31 Mar 2020

    கொரோனாவில் மந்தநிலை அபாயம் - ஐக்கிய நாடுகள் சபை ஆரூடம்

    கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தாண்டில் உலகமே மந்தநிலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியா, சீனாவை தவிர்த்து மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. சர்வதேச அளவில் 3 டிரில்லியன் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    10:43 (IST)31 Mar 2020

    சென்னையில் குப்பையின் அளவு குறைந்தது

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு 7வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் சேகரமாகும் குப்பைகளின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    10:15 (IST)31 Mar 2020

    பிரதமர் மோடியின் யோகா நித்திரை வீடியோ

    வாரத்திற்கு இருமுறை நான் இந்த யோகா முத்திரையை செய்து வருகிறேன். இதன்மூலம், எனது மனம் அமைதிப்படுகிறது என்று பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    09:50 (IST)31 Mar 2020

    டாக்டர்களுக்கு பைவ் ஸ்டார் ஓட்டல்களில் அறைகள்

    டெல்லி மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், தனிமையில் தங்குவதற்காக, 'பைவ் ஸ்டார்' ஓட்டல்களில், அரசு செலவில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    09:44 (IST)31 Mar 2020

    அசாமில் தேயிலை தோட்ட பணிகள் நிறுத்தம்

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அசாம் மாநிலத்தில் கட்டுமான ப்ணிகள், தேயிலை தோட்ட பணிகள், பண்ணை பணிகள் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

    09:29 (IST)31 Mar 2020

    மகாராஷ்டிரா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்வு

    மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பாதிப்பு. இதனையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.

    09:23 (IST)31 Mar 2020

    கொரோனா - கேரளாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனைத்தொடர்ந்து கேரளாவில், கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. கொச்சியில் முதல் நபர் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    09:14 (IST)31 Mar 2020

    இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 33 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி இதுவரை 33 பேர் மரணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : பொது மக்களிடம் கருணையுடன், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி, போலீசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஊரடங்கின் போது, தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர அவசியமில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருந்து வாங்கவும், நோடல் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். அவரது உதவி, அனுமதி பெற்று செல்லலாம். எனவே, ஒவ்வொரு குறு வட்டத்துக்கும், துணை தாசில்தார் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை, அரசு நியமிக்க வேண்டும். அவரது மொபைல் போன் எண், போன் எண் வெளியிட வேண்டும்.உரிய காரணங்கள் இன்றி, வீட்டை விட்டு வெளியில் வந்தால், அதை தடுக்க, அரசு பாதுகாப்பு வழிமுறைகளை கையாளலாம்.இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது

    Tamil Nadu Chennai India Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment