Covid-19 Cases Update: சென்னை, கோவை, மதுரையில் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நாளை முதல் 28-ம் தேதி வரை முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளுக்கும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐந்து மாநகராட்சிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் இந்த மூன்று மாவட்டங்களிலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பஞ்சாயத்து தலைவர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தன்னம்பிக்கையுடன் இருக்க கொரோனா கற்று தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1700 கடந்தது. தமிழகத்தில் வைரஸ் தொற்றில் இருப்பவர்களை விட அதிலிருந்து மீண்ட வர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக, மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 1752 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. பிறை தென்பட்டதால், வளைகுடா நாடுகளில் ரம்ஜான் நோன்பு தொடங்கியது. வைரசால் வெறிச்சோடி காணப்பட்டது புகழ்பெற்ற மெக்கா மசூதி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
அமைச்சர் நிலோபர் கஃபில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் வந்துள்ளது.
இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் நாமும் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுது வருகின்றோம். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இஃப்தார் விருந்து அளித்து வந்தது. தற்போது இந்த ஆண்டு அதனை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்பட்டு இருப்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் இருந்து தொழுகைகளை வீட்டிலேயே நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Web Title:Coronavirus live updates complete lockdown chennai covid 19 india
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், இலங்கை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தனது தந்தையை காணொலி மூலம் பார்க்க கோரிக்கை விடுத்து முதல்வர் பழனிசாமிக்கு மனு அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதிருந்த நிலையில், முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூரில் 43 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படவேண்டிய அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக் கூடாது மத்திய அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும். மருத்துவரின் குடும்பத்திற்கு தேமுதிக சார்பில் எந்த உதவியும் செய்யத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
மதுரையில் ஆண்டுதோறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா மே மாதம் 3-ம் தேதி தொடங்கி நடைபெற இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது. மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மட்டும் மே 8-ம் தேதி நடைபெறும். அதனை இனையத்தில் நேரலையில் பக்தர்கள் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இன்று மேலும் 66 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். தமிழகத்தில் இதுவரை 1,821 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இன்று கொரோனா பாதிப்புக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கூறினார்.
காஞ்சிபுரம் செவிலிமேடு, ஓரிக்கை, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, அதே போல, ஆம்பூரில் மழை பெய்து வருகிறது.
சென்னை, தண்டையார் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அதிகபட்சமாக 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க வேண்டும் எனவும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் ஜூலைக்கு பதில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை திறக்க யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் ஜூலைக்கு பதில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை திறக்க யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாதம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பணியில் சேருமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜூன் 30வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு சூழலை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்கும் 4 நாள் முழு ஊரடங்கில் இருந்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 நாட்களிலும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் பெட்ரோல் நிலையங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் பணியும் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு.
கடலூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும், அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்துள்ளதாக ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை இறைச்சி கடைகள் மட்டும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன் கூறியுள்ளார்.
கோவை, குனியமுத்தூர் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே காவல் நிலையம் தற்காலிகமாக திருமண மண்டபத்தில் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 28 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இங்கு தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் நாளை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த மாநகராட்சிகளில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 24,506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 5,063 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.