ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவர், பரிசோதனை முடிவுகளுக்காக காத்துக்கொண்டுள்ளார். இவர்கள் சமீபத்தில் ஈரான் மற்றும் தென்கொரியா நாட்டிற்கு விஜயம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கேரளா சுகாதரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.இவர்கள் சமீபத்தில், இத்தாலி சென்று கத்தார், தோஹா வழியாக கேரளா திரும்பியுள்ளனர்.
சீனாவில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 233 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
coronavirus latest news updates : கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
கர்நாடகா அமைச்சர் சுதாகர்: பெங்களூருவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ சங்கத்தலைவர் சி.என்.ராஜா, தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ வசதிகள் உள்ளன. கொரோனா குறித்து தமிழகத்தில் 37,000 மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தோப்பூர், தாம்பரம், திருச்சி, கோவை ஆகிய 4 இடங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பலரும் முக கவசங்களை அணிந்து வருகின்றனர். இதனால், முக கவசங்களின் விலை அதிகரித்துள்ளதாக செய்தி வெளியான நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “முக கவசங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை. வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் நிலவிவரும் சூழலில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் திறந்தவெளியில் பயன்படுத்தப்பட்ட முகமூடிகளை வீசியதாக ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர். சில தொலைக்காட்சி சேனல்கள் சனிக்கிழமையன்று பிவாண்டி டவுன்ஷிப்பில் ஒரு கோடவுனில் சேமித்து வைக்கப்பட்ட முக கவசங்களின் துணுக்குகளைக் காட்டிய பின்னர் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆரோக்கியமற்ற நிலையில் முக கவசங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் காவல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மருந்துகள் பிரிவு ஜாயிண்ட் கமிஷனர் விராஜ் பவுனேகர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். முக கவசங்களை அவர்கள் கைப்பற்றப்படுவதற்குள் கொட்டப்பட்டதால் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புள்ள நிலையில் உம்ரா சென்ற தமிழகத்தை சேர்ந்த 26 பயணிகள் சவுதியில் சிக்கித் தவித்துவருகின்றனர்.
ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் சவுதியில் சிக்கித் தவித்துவரும் 26 பயணிகளையும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவில் வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லும் நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகம்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 7 நாட்கள் வரை பயன்படுத்தக் கூடிய நானோ சில்வர் முகக் கவசங்களை சீனாவில் உள்ள ஸூஹாயைச் சேர்ந்த அன்ஸின் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த முகக் கவசத்தை அணியும்போது அதிலுள்ள நானோ சில்வர் துகள்கள் வெளியிடும் அயனிகளால் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கொல்லப்படும் என அன்ஸின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த, தேவஸ்தான நிர்வாகி தர்மா ரெட்டி, சுவாமி தரிசனம் செய்வதற்கான வைகுண்டம் காத்திருப்பு அறை, மொட்டை அடிக்கும் கல்யாண கட்டா, அன்னதான கூடம் ஆகிய பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால், காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதேபோன்று பக்தர்கள் கூடும் இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் இயங்கி வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பீதியால், இந்தியா உள்பட 14 விமானத் தொடர்பினை கத்தார் அரசு துண்டித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து பாதுகாத்துகொள்ள முன்னெச்சரிக்கையாக இந்தியா உள்பட 14 நாட்டு பயணிகள் விமானச் சேவைகளுக்கு கத்தார் அரசு தடை விதித்துள்ளது. அதாவது, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து நாடுகளுடனான விமானத் தொடர்பினை கத்தர் அரசு துண்டித்துள்ளது. இதன்மூலம், இன்று அதிகாலை முதல், மேற்கண்ட நாடுகளில் இருந்து கத்தாருக்குச் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தென்பட்ட 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று தெரியவந்துள்ளது. இந்த சிறுவன், அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இருந்து சமீபத்தில் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பீதி தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக ரூ.35 ஆயிரம் மதிப்பிலான என்95 வகை முக கவசங்கள் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தடுப்பு பொருட்களை திருடிய பார்மசிஸ்டை புனே போலீசார் கைது செய்துள்ளனர். இவர் முன்னணி மருத்துவமனையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட ரெசார்ட்களில் படிப்படியாக செயல்பட துவங்கியுள்ளன. கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக கடந்த ஜனவரி 25ம் தேதியிலிருந்து அந்த ரெசார்ட்கள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் 3 வயது குழந்தைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கலாமசேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளைப் புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரசின் பாதிப்பின் உச்சமாக, வடக்கு இத்தாலியின், 14 மாகாணங்களில் வசிக்கும், 1.6 கோடி மக்களை தனிமைப்படுத்தி இருக்கிறது இத்தாலி அரசு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights