Covid-19 Cases Update: தமிழகத்தில், கொரோனாவை விரட்ட, அரசின் அதிரடி நடவடிக்கைகள், வேகமெடுக்க துவங்கி உள்ளன. பாரம்பரிய இயற்கை மருத்துவமான, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை, மக்களுக்கு வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க, கட்டுப்பாட்டு பகுதிகளில், போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில், சில தொழில்களை துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை, அதிகரித்து வருவது, மக்களிடம் கவலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அரசு தன் நடைமுறையில் மாற்றம் செய்ததுடன், பல அதிரடி நடவடிக்கைகளை துவக்கி உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஊரடங்கை மீறி, வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை அண்ணாசாலை, முற்றிலும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்; அத்தியாவசிய பொருட்களை, அரசு அனுமதித்துள்ள, காலை, 6:00 மணியில் இருந்து, மதியம், 1:00க்குள் வாங்கிக் கொள்ள வேண்டும் என, போலீசார் எச்சரித்துஉள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Corona latest news updates : நம் நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் விகிதம், 20 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், 78 மாவட்டங்களில், கடந்த, 14 நாட்களாக, புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த ஊரடங்கு நடவடிக்கையால், நான்கு கோடி வெளி மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
Web Title:Coronavirus live updates india lockdown covid 19 tamilnadu
தமிழகத்தில் தெரிந்தது பிறை - ரமலான் நோன்பு தொடங்கியது.
வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் ரமலான் மாதம் நாளை தொடங்குகிறது என தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் நரேலா நோய்க்கட்டுப்பாடு பகுதியில் கண்காணிப்பில் உள்ள 9 மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
டெல்லியில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு..
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,514ஆக உயர்ந்தது..
பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்தது.
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மேலும் 18 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ள நிலையில் புதிதாக 394 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது..
இதுவரை 6,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மொத்தம் 310 பேர் பலி, 957 பேர் குணமடைந்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே தேவையின்றி சுற்றுகிறார்களா என்பதை கண்டறிய ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று சிக்கிய காதல் ஜோடி,
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு
* ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு
புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் உட்பட 15 கிராம ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை மாநகர எல்லைக்குள் வரும் பகுதிகளில் முழு ஊரடங்கு
அமைச்சர் நிலோபர் கஃபில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் வந்துள்ளது.
இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் நாமும் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுது வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இஃப்தார் விருந்து அளித்து வந்தது. தற்போது இந்த ஆண்டு அதனை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்பட்டு இருப்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் இருந்து தொழுகைகளை வீட்டிலேயே நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரம்பலூரில் ஏப்.27 வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு
காய்கறி உட்பட எந்த கடைகளும் திறக்கத் தடை
பொதுமக்கள் 3 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தல்
- மாவட்ட நிர்வாகம்
* பெரம்பலூர் பகுதியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நடவடிக்கை
"ஊரடங்கு காலத்தில் பொறியியல் கல்லூரிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கல்விக் கட்டணத்தை செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது!"
- அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை.
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 298 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 5 மாவட்டங்கள்
சென்னை - 452, கோவை - 141, திருப்பூர் - 110, திண்டுக்கல் - 80, ஈரோடு - 70
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவினால் இன்று மேலும் 7 உயிரிழப்புகள்; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்தது..
75 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானதால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,846 ஆக உயர்வு..
Zomato, Dunzo நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு
ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட உபப்பொருட்களை ஆர்டர் செய்து பெறலாம்
- ஆவின் நிர்வாகம்
ஆவின் முகவர் நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு..
14 உயிரிழப்புகள் உட்பட இதுவரை தாராவியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 220ஆக உயர்ந்தது!
டெல்லியில் முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும்
* டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று?
மாவட்ட வாரியான நிலவரம்..
பெட்ரோல் பங்க் காலை 8 முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கலாம்
* அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தளர்வு
* 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
வேலூரில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம்
ஊரடங்கு நேரத்தில் பார்சல் உணவுகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய உணவகங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ரம்ஜான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
* கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,755 ஆக உயர்வு
* தமிழக சுகாதாரத்துறை தகவல்
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;
அங்கு இதுவரை 474 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18 பேர் உயிரிழந்துள்ளனர்..
152 பேர் குணமடைந்துள்ளனர்; 5 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவு வந்துள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கடைசியாக கடந்த 9 ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. தமிழகத்தை சேர்ந்த கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டும் நேற்று 700க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழைந்ததாகவும், இதனால் மாநில எல்லைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் மோகன்குமார் தெரிவித்தார்.
கடந்த 28 நாட்களில் 15 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை
14 நாட்களில் 80 மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை
- மத்திய சுகாதாரத்துறை
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா தொற்று
மொத்தம் 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு.
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 20.57% ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் நிலைக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது
- மத்திய சுகாதாரத்துறை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் 94 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது;
மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 1,604 பேருக்கு நோய்த்தொற்று உறுதி..
திருச்சியில் ஏப்.26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் செயல்படத் தடை
- மாவட்ட நிர்வாகம்
அமெரிக்காவில் மேலும் 44 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லை எனப் பதிவு செய்துள்ளதால் அங்கு வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது.
144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் இதுவரை சுமார் 2 லட்சத்து 99 ஆயிரத்து 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித் திரிந்த 2 லட்சத்து 52 ஆயிரத்து 943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
கோவையில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 3 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, ஒரே நாளில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
‘பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்...’ என நடிகரும், மநீம தலைவருமான கமல் ட்வீட் செய்துள்ளார்.
”முழு ஊரடங்கு காலத்தில் ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம். நோய்த்தடுப்பு பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். முழு ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு காலத்தில் அந்தந்த மாநகராட்சிகளில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
"சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு" கடைப்பிடிக்கப்பட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல் 29-ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உத்தரவு. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுதான ரேபிட் டெஸ்ட் கிட் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்பட்டு வந்த தனியார் பாக்கு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை, 3 வாரங்களுக்கு கைது செய்ய தடை விதித்தும், 3 வார காலத்தில் அர்னாப், முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. FIR தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அர்னாப் ஒத்துழைக்க வேண்டும் என்று உ்ததரவிட்டுள்ளது.
கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என திமுக MLA கார்த்திக் சுட்டிக்காட்டியதை வெளியிட்ட 'சிம்ப்ளிசிட்டி' இணைய இதழின் பதிப்பாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரை விடுவித்து, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திடுக என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பீதி நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிராமங்கள் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி, கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் ஊரடங்கு நேரத்தின்போது அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல கலெக்டர் அலுவலகத்ல் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை பெற ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். அவர்கள் தனிமனித இடைவெளி உள்ளிட்ட ஊரடங்கு விதிகளை பின்பற்றாத நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகமானோர் குவிந்ததால், மேலும் பலர் நுழையாமல் இருக்கும் பொருட்டு, வாயிற்கதவு அடைக்கப்பட்டது.
அமெரிக்காவில் இதுவரை 886,709 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,243 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,99,108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.2,91,38,654 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான நடமாடும் ஆய்வகத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரு கிறது. இந்நிலையில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க உத வும் செயற்கை சுவாசக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு கவச உடை கள், கிருமி நாசினிகள், வைரஸ் நோயாளிகளிடமிருந்து மாதிரி களைப் பெறுவதற்கான கருவி களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஏற் கெனவே தயாரித்து வழங்கி யுள்ளது.
முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம், விழிப்புணர்வு புகைப்படத்தை மே3ம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியாக(DP)வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கேரளாவில், கொரோனா பாதிப்பிற்கு 4 மாத குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில், உறவினர் ஒருவரிடமிருந்து இந்த தொற்று குழந்தைக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.