விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நிறுததப்படப்போவதாகவும், இதற்காகவே மின்மீட்டர்கள் பொருத்தப்படுவதாக தகவல் பரவியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்திருந்த நிலையில், விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ரயில், விமானங்களை இயக்க அரசு தயக்கம் காட்டுகிறது. ரயில் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணியர் வீடுகளுக்குச் செல்ல உதவும் பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியாததே இதற்குக் காரணம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. நோய் தொற்று குறையாமல் பொதுப் போக்குவரத்தை துவங்க சாத்தியமில்லை என்பதால் மத்திய அரசு அனுமதித்த போதிலும் மாநில அரசு மவுனம் காக்கிறது.
நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு முன் பொது போக்குவரத்தை அனுமதித்தால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இதை உணர்ந்து மக்களும் நோய் பரவலை தடுக்க உரிய விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் போக்குவரத்து சாதனங்களை இயக்க உதவியாக இருக்கும். மக்கள் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா ஊரடங்கிலிருந்து மீண்டு, இந்தியா இயல்புநிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான சேவைகள், நாளை துவங்க உள்ள நிலையில், ரயில் போக்குவரத்து, அடுத்த மாதம், 1ம் தேதி துவங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணைய செயலர் பிரதீப் சிங்குக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு விமானங்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 25 uள்நட்டு விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாளை முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், தமிழக அரசு விமானப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்டுள்ளது. அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருவோர் இ- பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் தங்களை வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை கொத்தவால்சாவடியில் கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொத்தவால்சாவடியில் காலை 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே கடைகளை திறக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்னர், மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது மின் கட்டண உயர்வு ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 5 முதல் 30 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வர்த்தக பயன்பாட்டிற்கு யூனிட்டுற்கு 10 இருந்து 20 காசுகள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்: ஊரடங்கு முடியும் வரை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருந்திருக்கலாம். மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 8 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொட்ர்ந்து மொத்த எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது.
நாகை மற்றும் மயிலாடுதுறையில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகை மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மத்தியபிரதேச தொழிலாளர்கள் 38 பேர் பேருந்து மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறப்பு ரயில் மூலம் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர்.
கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
மொத்தம் 847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
*53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளா வந்தவர்கள்
கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் முக கவசத்துடன் உணவு உண்ணும் வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
உணவு உண்ணும் வசதியுடன் முக கவசம் - சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ#COVID19 | #FaceMaskhttps://t.co/mvB3CtEG07
— Thanthi TV (@ThanthiTV) May 24, 2020
உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சிறிது காலம் அவகாசம் வேண்டும் என்று, மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் வலியுறுத்தி உள்ளதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வரும் 31-ம் தேதியுடன் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து சேவைகளும் அரசின் வழிகாட்டுதலோடு இயங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடேயே, மகாராஷ்டிராவில், கொரோனா பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக, உள்நாட்டு விமான போக்குவரத்தை இயக்க, கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் வலியுறுத்தியுள்ளதாக, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜுன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும், இதில் 7 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 41 புள்ளி 98 அடியாக உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறை கிணறுகளில் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நாளை மாலை 6 மணிமுதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 3 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்றும், நாளையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணிக்கடைகள் மற்றும் ரெடிமேட் ஷோரூம்கள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட உள்ளது. சமூக விலகல் மற்றும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவருடைய உறவினருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் பணியாற்றி வந்த அந்த பெண் உறவினர்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நத்தகரை சோதனைச்சாவடி மையத்தில் காரை நிறுத்திய அதிகாரிகள், அவருக்கு பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இருப்பினும், நிச்சயித்தபடி அவருக்கு எளிமையான முறையில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 989ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 43ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பலி 103 ஆக உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 71 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவமனையில் 5,815 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடித்தபடியாக கோடம்பாக்கத்தில் 1,391 பேரும், திருவிக நகரில் 1,133 பேரும், தேனாம்பேட்டையில் 1,0 54 பேரும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 59.99 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 39,99 சதவீதம் பேர் பெண்கள் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொழில்துறைக்கு கிடைக்கக் கூடிய எவ்விதமான உதவிகளும் தயாரிப்பாளர்களுக்கோ தொழிலாளர்களுக்கோ கிடைப்பதில்லை என்றார். சினிமாவை தொழில்துறை என்று அரசு கூறுவதால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய வீடு உள்ளிட்ட சலுகைகளும் கிடைப்பதில்லை என்றும், இதற்கு மத்திய மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். சின்னத்திரை படப்பிடிப்பிற்கு குறைந்தபட்சம் 40 நபர்கள் தேவைப்படும் என்பதால் அரசு சார்பில் 20 பேர் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். தற்போது தமிழ்திரைத்துறை முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோர் தாங்களாக தங்களது சம்பளத்தை குறைத்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மாநகரப் பேருந்து ஓட்டுனரின் மகனது திருமணம் வீட்டில் எளிய முறையில் நடைபெற்றது. சசிகுமார் மற்றும் கலையரசிக்கு தனியார் மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் வைத்து நடைபெற்ற திருமண நிகழ்வில் பத்து பேர் மட்டும் கலந்து கொண்டனர்
விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம்
இலவச மின்சார திட்டம் தொடர வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம்
முதல்வர் உத்தரவிட்டதால் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டது
தட்கல் திட்டத்தில் மட்டும் மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில் அதையும் வேண்டாம் என முதல்வர் கூறினார்
- அமைச்சர் தங்கமணி
நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2ம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 7,300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகள் திறப்பு எப்பொழுது என்பது, சூழ்நிலைக்கேற்ப விரைவில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்ட முடிவில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை அரசு சரியாக செய்யவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது. தி.மு.க. தோழர்கள் மற்றும் ஐ.டி. பிரிவினரை பொய் வழக்கு போட்டு கைது செய்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. அதனால், வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைப்பது என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும், கேரளா திறமையுடன் கையாளும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலத்தின் செயல்பாடு சிறப்புடன் விளங்கிய நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் எனறு தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்பதை அளவிடவே மின்மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை 2 ஆண்டுகளாகவே இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதப் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்! என்று முதல்வர் பழனிசாமி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதப் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்! #EidMubarak pic.twitter.com/piEwEgDHLu
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 24, 2020
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. திமுக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் - கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக, 11 லட்சம், பி.சி.ஆர்., கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டு, 2 லட்சம் கருவிகள் வந்துள்ளன. வாரத்திற்கு, 1 லட்சம் கருவிகள் என, அடுத்தடுத்து தமிழகத்திற்கு வர உள்ளன என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights