Advertisment

Coronavirus Updates: தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்? - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

Coronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, tamil nadu, delhi congregation, corona test, health deapartment, beela rajesh, coronavirus cases in india, coronavirus cases globally,coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

Covid-19 Cases Update : கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளப்படக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சேவ் தி சில்ட்ரன் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளால், இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளக்கூடும். இதனால், வறுமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்து, 67.2 கோடியாக இருக்கும். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா பரவலை தடுக்க, இந்தியாவில் மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்' என, காங்., - எம்.பி., ராகுலிடம், சுவீடன் பேராசிரியர், ஜோஷன் ஜீசெக் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்














Highlights

    22:30 (IST)28 May 2020

    மாநில முதல்வர்களின் கருத்து

    கொரோனா வைரஸ் காரணமாக 4 ஆம் கட்ட பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து மாநில முதல்வர்களின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    22:01 (IST)28 May 2020

    மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் காலை 9 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21:46 (IST)28 May 2020

    சல்யூட் போடு - சலாம் போடு பாடல் வெளியீடு

    சென்னை மாநகர காவல்துறை சார்பில், 'சல்யூட் போடு - சலாம் போடு' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் பாடல்

    21:06 (IST)28 May 2020

    1,024 பேருக்கு கொரோனா

    ’டெல்லியில் ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா

    டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,024 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,281 ஆக உயர்வு

    * கொரோனாவிலிருந்து குணமடைந்து ஒரே நாளில் 231 பேர் டிஸ்சார்ஜ்

    21:06 (IST)28 May 2020

    கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்

    மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில், மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில், வாழ வழியில்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

    20:52 (IST)28 May 2020

    மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

    மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு, தேவையான மதுபான வகைகளை ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி.

    * மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    20:22 (IST)28 May 2020

    கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும் - மு.க.ஸ்டாலின்

    கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய - மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை.

    தினமும் மாலையில் ஏதோ எண்ணிக்கையைச் சொல்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கக் கூடாது. எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என எச்சரிக்க விரும்புகிறேன். வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு இரையாகி விடாதீர்கள் என்பதே எனது அனைத்துக் கோரிக்கைகளுக்குமான உண்மையான அர்த்தம் என்பதை முதலமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    20:01 (IST)28 May 2020

    சோகமான சாதனை

    அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.

    19:38 (IST)28 May 2020

    சென்னையில் 100ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு

    சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    * மொத்த பாதிப்பு - 12,768
    * குணமடைந்தவர்கள் - 6,304
    * சிகிச்சையில் உள்ளவர்கள் - 6,351
    * உயிரிழப்பு - 106

    19:28 (IST)28 May 2020

    45 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    19:27 (IST)28 May 2020

    கர்நாடகா வர தடை

    தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து விமானம், ரயில் மற்றும் வாகனங்கள் மூலம் கர்நாடகாவிற்கு வர தடை.

    19:08 (IST)28 May 2020

    அரசு போராடி கொண்டிருக்கிறது

    'கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து அரசு போராடி கொண்டிருக்கிறது’

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்குமே கொரோனா பாதிப்பு உள்ளது

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    18:46 (IST)28 May 2020

    தமிழக கொரோனா நிலவரம்!

    மொத்த பாதிப்பு - 19,372
    * குணமடைந்தவர்கள் - 10,548
    * சிகிச்சையில் உள்ளவர்கள் - 8,676
    * உயிரிழப்பு - 145
    * மொத்த பரிசோதனைகள் - 4,55,216
    * இன்றைய பரிசோதனை - 12,246
    * பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் - 12,219 | பெண்கள் - 7,148 | திருநங்கை - 5

    18:36 (IST)28 May 2020

    தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,548 பேர்

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த 639 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுளனர். இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    18:35 (IST)28 May 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    18:27 (IST)28 May 2020

    தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 19,000ஐ தாண்டியது

    தமிழகத்தில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    18:16 (IST)28 May 2020

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியீடு

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை. வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம். வெளியூரில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும்.
    மாணவர் விடுதிகளை ஜூன் 11ஆம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் போன்ற வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    16:49 (IST)28 May 2020

    இந்தியாவின் டாப் உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியல்; அண்ணா பல்கலைக்கழகத்துகு 5வது இடம்

    இந்தியாவில் உள்ள தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது.

    16:46 (IST)28 May 2020

    மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக புகார்; செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட் உத்தரவு

    கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    16:42 (IST)28 May 2020

    புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்வு

    கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, புதுச்சேரியில் மது பானங்களைத் தொடர்ந்து பெட்ரோல் டீசலுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும் டீசலுக்கு 3.65 சதவீதமும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    16:39 (IST)28 May 2020

    திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது - அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

    இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொது முடக்கத்தால் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் அனுமதித்த பிறகே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    15:51 (IST)28 May 2020

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க கூடாது; உச்ச நீதிமன்றம்

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான ஒரு வழக்கில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்தைக் கண்டு நீதிமன்றம் வேதனை அடைகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் உணவு அளிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் தங்கும் இடம் என அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசுகள் செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணக் கட்டணத்தை அவர்களிடம் வசூலிக்க கூடாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    15:24 (IST)28 May 2020

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது - டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

    திமுக தலைமை நிலைய செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்: ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுக 16 லட்சம் பேருக்கு உதவி செய்துள்ளது. ஒன்றிணைவோம் வா திட்டத்தில் திமுக 1 லட்சம் மனுக்களைப் பெற்றுள்ளது. அரசு செய்ய வேண்டிய உதவியை திமுக முன்வந்து செய்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் பணி என்று கூறினார்.

    14:44 (IST)28 May 2020

    கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமானது நீலகிரி!

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 14 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமானது.

    14:17 (IST)28 May 2020

    தூத்துக்குடியில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 19 பேர் டிஸ்சார்ஜ்

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

    14:05 (IST)28 May 2020

    சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன்கள் திறக்க அனுமதிக்க முடியும் - தமிழக அரசு ஐகோர்டில் பதில்

    தமிழகம் முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கள நிலவரத்துக்கு ஏற்பவே சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

    13:32 (IST)28 May 2020

    2 ஆயிரத்தை தாண்டியது

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது

    13:13 (IST)28 May 2020

    சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் மூடல்

    சென்னை சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் கொரோனா நோய் தொற்றுப் பாதிப்புக் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    12:31 (IST)28 May 2020

    தமிழகத்தில் உணவுப்பஞ்சம் என்ற நிலை வரவே இல்லை

    தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் உணவுப்பஞ்சம் என்ற நிலை வரவே இல்லை. 65 நாட்கள் உணவுப்பொருள் தேவையை முறையாக பூர்த்தி செய்திருக்கிறோம் . ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

    12:07 (IST)28 May 2020

    திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம் : மக்கள் பீதி

    திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், பல்லடம், அருள்புரம், மங்களம், அவினாசிபாளையம், பொங்கலூர், கொடுவாய், அனுப்பர்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(மே 28) காலை 10: 30 மணியளவில் வெடிவெடிப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். பூகம்பம் ஏதும் ஏற்பட்டிருக்கலாமோ எனவும் அச்சம் தெரிவித்தனர். சத்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    11:48 (IST)28 May 2020

    9 பேர் மரணம்

    உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களிடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் பயணிித்த பயணிகளில் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 9 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் உ.பி. மாநிலத்தவர் என்றும், 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    11:28 (IST)28 May 2020

    இயல்புநிலைக்கு திரும்புகிறது சென்னை

    கடந்த 2 மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை இயல்பு நிலைக்கு திரும்புகிறது

    publive-image

    11:15 (IST)28 May 2020

    3 மதிப்பெண்கள் போனஸ்

    பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால், தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் போனஸ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    11:10 (IST)28 May 2020

    சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    publive-image

    10:50 (IST)28 May 2020

    டெல்லியில் தக தகக்கும் சூரியன்

    தலைநகர் டெல்லியில் சூரியன் சுட்டெரிப்பதால், அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    10:22 (IST)28 May 2020

    அண்ணாநகர் மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

    சென்னை அண்ணாநகர் மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. ராயபுரம் - 2252 பேர், கோடம்பாக்கம் - 1559 பேர், திரு.வி.க நகர் - 1325 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 6 மண்டலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    10:02 (IST)28 May 2020

    கேரளாவில் துவங்கியது மதுவிற்பனை

    கொரோனா ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுபான விற்பனை, இன்றுமுதல் கேரளாவில் மீண்டும் துவங்கியுள்ளது. BenQ செயலியின் உதவியால் தங்களுக்கு தேவையான மதுபானங்களை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரிசையில் 5 நபர்கள் மட்டுமே ஒருநேரத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    publive-image

    09:48 (IST)28 May 2020

    தலைமை செவிலியர் கொரோனாவால் உயிரிழப்பு

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தலைமை செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் மாதத்துடன் பணி நிறைவு பெற்ற அவருக்கு, கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்.

    09:43 (IST)28 May 2020

    டெல்லி - காஜியாபாத் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியை மற்ற பகுதிகளோடு இணைக்கும் எல்லைப்பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, டெல்லி - காஜியாபாத் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    publive-image

    09:18 (IST)28 May 2020

    அமெரிக்காவில் லட்சத்தை கடந்தது கொரோனா மரணம்

    கொரோனா தாக்கத்தின் காரணமாக சர்வதேச நாடுகளில் மரணங்கள் பெருமளவில் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில், கொரோனா மரணம், 1 லட்சம் எ்னற அளவை கடந்துள்ளது.

    அமெரிக்கா - 102,107

    இங்கிலாந்து - 37,460

    இத்தாலி - 33,072

    பிரான்ஸ் - 28,596

    ஸ்பெயின் - 27,118

    பிரேசில் - 25,697

    ஜெர்மனி - 8,533

    09:10 (IST)28 May 2020

    1,58,333 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426லிருந்து 67,692ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337லிருந்து 4,531ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Corona latest news updates ஊரடங்கு உத்தரவு அமலால் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. அதைவிட 'கொரோனா' வைரஸ் பரவல் வேகம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பல்வேறு நாடுகளை சேர்ந்த, 17 தொழில் நிறுவனங்கள், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தொழில்கள் துவங்க, முதல்வர் பழனிசாமி முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    Tamil Nadu Corona Virus Narendra Modi Lockdown
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment