Covid-19 Cases Update : கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற எல்லா இடங்களிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதற்கு எதிர் கட்சிகள் பெரும் கண்டனத்தைத் தெரிவித்தன. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் திறக்கக் கூடாதென, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில், 43 நாட்களுக்கு பின், நேற்று திறக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடைகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து, மது பிரியர்கள், மது வகைகளை வாங்கி சென்றனர். தமிழகத்தின் மொத்த மது விற்பனையில், சென்னையின் பங்கு, 25 -- 30 சதவீதம் உள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையில் உள்ள மது கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில், 3,800 கடைகள் திறக்க திட்டமிடப்பட்டது. சில இடங்களில், அரசியல் கட்சியினர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டங்கள் நடத்தினர். இதனால், அந்த இடங்களில் இருந்த, மது கடைகள் மூடப்பட்டன. இதனால், 50 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் மட்டுமே விற்பனையாகின
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மக்கள் நீதி மய்யம் முயற்சியால் இன்று மக்களின் குரல் நீதிமன்றத்தில் கேட்டது. மக்களின் குரலை நீதிமன்றம் கேட்டது! தாற்காலிகம் என்றாலும் தார்மீக வெற்றி. தாய்மாருக்கு வெற்றி. சட்டபூர்வமாக சாதித்த மய்யத்தினருக்கு மனப்பூர்வமான நன்றி!
- கஸ்தூரி ட்வீட்
மக்கள் நீதி மய்யம் முயற்சியால் இன்று மக்களின் குரல் நீதிமன்றத்தில் கேட்டது. மக்களின் குரலை நீதிமன்றம் கேட்டது! தாற்காலிகம் என்றாலும் தார்மீக வெற்றி. தாய்மாருக்கு வெற்றி.
சட்டபூர்வமாக சாதித்த மய்யத்தினருக்கு மனப்பூர்வமான நன்றி! @ikamalhaasan #noTASMAC #MNM @drmahendran_r pic.twitter.com/wfiFFGiToQ
— Kasturi Shankar (@KasthuriShankar) May 8, 2020
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் (08.05.2020) #COVID19 | #TNCorona pic.twitter.com/gSNavrRJuC
— Thanthi TV (@ThanthiTV) May 8, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவின் வூஹான் மார்க்கெட் முக்கிய காரணமாக இருந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் ஜூனோடிக் வைரஸ் வல்லுநர் டாக்டர் பீட்டர் பென் எம்பரேக் தெரிவித்துள்ளார். ஆனால் அது எப்படி பரவியது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை என்றார். மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அது நோய் பரவலுக்கு காரணமான இடமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாங்களெல்லாம் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தோம்; கமல் சார் நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்..! நன்றி!
- ரவிகுமார், எம்.பி.
பாராட்டுகள் @ikamalhaasan சார்! நாங்களெல்லாம் அடைத்துகிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்! மூச்சுத் திணறும்போது கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது! 👍
— Dr Ravikumar M P (@WriterRavikumar) May 8, 2020
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது.மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது.மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது.@CMOTamilNadu pic.twitter.com/1fzOMhg8UD
— Vijayakant (@iVijayakant) May 8, 2020
கொரோனா வைரஸ் தடுப்பு பணியின்போது, உயிரிழந்த ஓசூர் காவல் நிலைய தலைமை காவலர் சேட்டு குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒசூர் அடுத்த ஜூஜூவாடியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பணியில் இருந்த போது கண்டெய்னர் லாரி தடுப்பு மீது மோதியதால் சேட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேட்டுவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் வரும் காய்கறிகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதை அடுத்து, தற்காலிகமாக திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இறக்கப்படும் காய்கறிகளை அங்கிருந்து திருமழிசை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு சரக்குவேன்களில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது
இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி'
டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கமல்ஹாசன் ட்வீட்டரில் கருத்து
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
— Kamal Haasan (@ikamalhaasan) May 8, 2020
சென்னையில் அறிவிக்கப்பட்டிருந்த 419 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 40 பகுதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 28 நாட்கள் புதிய கொரோனா பாதிப்பு ஏற்படாததை தொடர்ந்து, அவைகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 379ஆக குறைந்துள்ளது.
சென்னையில் அறிவிக்கப்பட்டிருந்த 419 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 40 பகுதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 28 நாட்கள் புதிய கொரோனா பாதிப்பு ஏற்படாததை தொடர்ந்து, அவைகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 379ஆக குறைந்துள்ளது.
மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த சட்டம் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை - நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் அடுத்த கட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மின்சாரத்தை "மத்திய அரசு மயமாக்கும்" இந்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் மாத இறுதியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
* அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும்.
உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. #Corona #TNAgainstCorona #TNGovt #TNEducation
— K.A Sengottaiyan (@KASengottaiyan) May 8, 2020
தயாரிப்புக்கு பிந்தைய டப்பிங், கிராபிக்ஸ் போன்ற பணிகளுக்கு அனுமதி அளித்தது அரசு.
மே 11ம் தேதி முதல் பணிகளை தொடங்கலாம் என அறிவிப்பு
பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி
பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அவசியம்.
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
திரைத்துறையினருக்கு தயாரிப்பு பிந்தைய பணிகளுக்கு (போஸ்ட் புரொடக்ஷன்) மட்டும் வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தகவல்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,273 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை, என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோயம்பேடு சந்தை மூலம் தருமபுரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து தருமபுரி திரும்பிய 5 தொழிலாளர்களில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது
திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து தற்போது தயார் நிலையில் உள்ளன. நாளை தற்காலிக சந்தையை இயக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்திருக்கிறது. நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Pained and anguished to hear about the Aurangabad train accident.
On behalf of DMK, I express my condolences for the loss of lives.
I urge the Union and State governments to work together to help inter-state migrants reach their homes safely under the present circumstances.
— M.K.Stalin (@mkstalin) May 8, 2020
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
I am now addressing a video press conference taking LIVE questions on Covid19 and the economic crisis we find ourselves in. Please join me right now, LIVE at:https://t.co/4WBysS69uG
— Rahul Gandhi (@RahulGandhi) May 8, 2020
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் எந்தவித பாதுகாப்பும் இல்லை எனக்கூறி, பதிவாளரை சுற்றிவளைத்து கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் நட்ததியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில், 14 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Extremely anguished by the loss of lives due to the rail accident in Aurangabad, Maharashtra. Have spoken to Railway Minister Shri Piyush Goyal and he is closely monitoring the situation. All possible assistance required is being provided.
— Narendra Modi (@narendramodi) May 8, 2020
அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 75,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,448 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 29,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 12.92 லட்சம் பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொள்ளை நோய் ஒரு பக்கம்; அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம்; தமிழகம் தாங்குமா' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights