Advertisment

டாஸ்மாக் தடை: தமிழக அரசு அப்பீல் செய்யுமா? கட்சிகள் எதிர்ப்பு

Corona latest news updates : ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் திறக்கக் கூடாதென, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu, TN governement, Cm Palanichami., government servants, retiriement age, government order, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

TN governement

Covid-19 Cases Update : கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற எல்லா இடங்களிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதற்கு எதிர் கட்சிகள் பெரும் கண்டனத்தைத் தெரிவித்தன. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் திறக்கக் கூடாதென, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழகத்தில், 43 நாட்களுக்கு பின், நேற்று திறக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடைகளில், நீண்ட வரிசையில் காத்திருந்து, மது பிரியர்கள், மது வகைகளை வாங்கி சென்றனர். தமிழகத்தின் மொத்த மது விற்பனையில், சென்னையின் பங்கு, 25 -- 30 சதவீதம் உள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதால், சென்னையில் உள்ள மது கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில், 3,800 கடைகள் திறக்க திட்டமிடப்பட்டது. சில இடங்களில், அரசியல் கட்சியினர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டங்கள் நடத்தினர். இதனால், அந்த இடங்களில் இருந்த, மது கடைகள் மூடப்பட்டன. இதனால், 50 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் மட்டுமே விற்பனையாகின

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:26 (IST)08 May 2020

    தாற்காலிகம் என்றாலும் தார்மீக வெற்றி

    மக்கள் நீதி மய்யம் முயற்சியால் இன்று மக்களின் குரல் நீதிமன்றத்தில் கேட்டது. மக்களின் குரலை நீதிமன்றம் கேட்டது! தாற்காலிகம் என்றாலும் தார்மீக வெற்றி. தாய்மாருக்கு வெற்றி. சட்டபூர்வமாக சாதித்த மய்யத்தினருக்கு மனப்பூர்வமான நன்றி!

    - கஸ்தூரி ட்வீட்

    22:24 (IST)08 May 2020

    மாவட்டம் வாரியாக...

    மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

    22:05 (IST)08 May 2020

    தமிழக அரசுக்கு நன்றி

    போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி..!

    - ஆர்.கே.செல்வமணி, ஃபெப்சி

    22:04 (IST)08 May 2020

    சீனாவின் வூஹான் மார்க்கெட் முக்கிய காரணமாக உள்ளது - உலக சுகாதார நிறுவனம் அதிரடி

    கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவின் வூஹான் மார்க்கெட் முக்கிய காரணமாக இருந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் ஜூனோடிக் வைரஸ் வல்லுநர் டாக்டர் பீட்டர் பென் எம்பரேக் தெரிவித்துள்ளார். ஆனால் அது எப்படி பரவியது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை என்றார். மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அது நோய் பரவலுக்கு காரணமான இடமாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    21:47 (IST)08 May 2020

    நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்

    நாங்களெல்லாம் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தோம்; கமல் சார் நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்..! நன்றி!

    - ரவிகுமார், எம்.பி.

    21:45 (IST)08 May 2020

    உத்தரவை திமுக வரவேற்கிறது

    'உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது'

    மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும்

    - மு.க.ஸ்டாலின் ட்வீட்

    21:25 (IST)08 May 2020

    66 பேர் உயிரிழப்பு

    உத்தரப்பிரதேசத்தில் 155 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது!

    அங்கு இதுவரை 3,214 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்..

    21:13 (IST)08 May 2020

    மருந்து வல்லுநர் சிவநேசன் மரணம்

    கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிரபல நிறுவனத்தின் மருந்து வல்லுநர் சிவநேசன் சென்னையில் மரணம். தயாரித்த ரசாயனத்தை சுயபரிசோதனை செய்தபோது விபரீதம்.

    publive-image

    21:10 (IST)08 May 2020

    மேல்முறையீடு செய்யகூடாது

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதை தேமுதிக வரவேற்கிறது.மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராடிய தமிழக பெண்களுக்கும்,மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தமிழகஅரசு உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யகூடாது.

    21:08 (IST)08 May 2020

    மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா!

    மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 37 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; 1,089 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியானது;

    அம்மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 731ஆக உயர்ந்தது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,063ஆக அதிகரிப்பு!

    21:07 (IST)08 May 2020

    90 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு..

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,341 ஆக உயர்ந்தது; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,349ஆக உயர்ந்தது!

    200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல்

    21:07 (IST)08 May 2020

    காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு

    'தனிமைப்படுத்தும் விடுதியில் காவல் ஆணையர் ஆய்வு’

    சென்னையில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் இடத்தில் காவல் ஆணையர் ஆய்வு

    * சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு

    21:06 (IST)08 May 2020

    சூப்பர்மார்க்கெட் உரிமையாளர்கள் 2 பேருக்கு கொரோனா

    'பிரபல சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் 2 பேருக்கு கொரோனா'

    சென்னை ஜாபர்கான் பேட்டையில் பிரபல சூப்பர்மார்க்கெட் உரிமையாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

    * உரிமையாளர் 2 பேர் மற்றும் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

    20:30 (IST)08 May 2020

    விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்

    கொரோனா வைரஸ் தடுப்பு பணியின்போது, உயிரிழந்த ஓசூர் காவல் நிலைய தலைமை காவலர் சேட்டு குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒசூர் அடுத்த ஜூஜூவாடியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பணியில் இருந்த போது கண்டெய்னர் லாரி தடுப்பு மீது மோதியதால் சேட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேட்டுவின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    20:30 (IST)08 May 2020

    வெளிமாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் கிளாம்பாக்கத்தில் இறக்க ஏற்பாடு

    வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் வரும் காய்கறிகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதை அடுத்து, தற்காலிகமாக திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இறக்கப்படும் காய்கறிகளை அங்கிருந்து திருமழிசை மற்றும் சென்னையின் பல பகுதிகளுக்கு சரக்குவேன்களில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது

    20:04 (IST)08 May 2020

    அமெரிக்காவுக்கு சென்ற இந்திய விமானம்

    48 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவுக்கு சென்ற இந்திய விமானம்.

    இந்தியாவிலிருந்து 80 பயணிகளுடன் புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவன விமானம் தரையிறங்கியது

    19:55 (IST)08 May 2020

    நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் - கமல்ஹாசன்

    இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி'

    டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கமல்ஹாசன் ட்வீட்டரில் கருத்து

    19:53 (IST)08 May 2020

    இன்று ரூ.125 கோடிக்கு...

    தமிழகத்தில் இன்று ரூ.125 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    19:52 (IST)08 May 2020

    மின்சார திருத்த திட்டம் அமலுக்கு வராதவாறு நடவடிக்கை

    மின்சார திருத்த திட்டம் அமலுக்கு வராத வகையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய சரத்துக்களை நீக்க மத்திய அரசை வலியுறுத்த முடிவு

    - அமைச்சர் தங்கமணி

    19:30 (IST)08 May 2020

    மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்

    பொதுமுடக்கம் முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    18:52 (IST)08 May 2020

    தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு

    ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு

    * சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    * ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவு

    * நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    18:40 (IST)08 May 2020

    குணமடைந்தோர் விகிதம் 26.7%

    'தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605'

    தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 0.68% ஆக உள்ளது

    குணமடைந்தோர் விகிதம் 26.7% ஆக உள்ளது

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    18:33 (IST)08 May 2020

    பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது

    தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரிப்பு

    * சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

    * சென்னையில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது

    18:27 (IST)08 May 2020

    உயிரிழப்பு இன்று மட்டும் - 3

    கொரோனா பாதிப்பு (இன்று மட்டும்) - 600 (ஆண்கள் - 405, பெண்கள் - 195)

    உயிரிழப்பு (இன்று மட்டும்) - 3

    மொத்த பாதிப்பு - 6,009

    மொத்த உயிரிழப்பு - 40

    - சுகாதாரத்துறை

    18:17 (IST)08 May 2020

    600 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு.

    கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

    18:14 (IST)08 May 2020

    இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் - யூனிசெஃப்

    சென்னையில் அறிவிக்கப்பட்டிருந்த 419 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 40 பகுதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 28 நாட்கள் புதிய கொரோனா பாதிப்பு ஏற்படாததை தொடர்ந்து, அவைகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 379ஆக குறைந்துள்ளது.

    18:13 (IST)08 May 2020

    புதிய கொரோனா பாதிப்பு இல்லாத கட்டுப்பாட்டில் இருந்து 40 பகுதிகள் விடுவிப்பு

    சென்னையில் அறிவிக்கப்பட்டிருந்த 419 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 40 பகுதிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 28 நாட்கள் புதிய கொரோனா பாதிப்பு ஏற்படாததை தொடர்ந்து, அவைகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 379ஆக குறைந்துள்ளது.

    18:13 (IST)08 May 2020

    புதிய மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இந்த சட்டம் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை - நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் அடுத்த கட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மின்சாரத்தை "மத்திய அரசு மயமாக்கும்" இந்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    18:12 (IST)08 May 2020

    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

    ஜூன் மாத இறுதியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

    * அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல்

    18:11 (IST)08 May 2020

    காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் ஆய்வு

    திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் ஆய்வு

    * மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பார்வையிடுகின்றனர்

    * தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் குறித்து இருவரும் ஆய்வு செய்கின்றனர்

    17:58 (IST)08 May 2020

    படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி

    தயாரிப்புக்கு பிந்தைய டப்பிங், கிராபிக்ஸ் போன்ற பணிகளுக்கு அனுமதி அளித்தது அரசு.

    மே 11ம் தேதி முதல் பணிகளை தொடங்கலாம் என அறிவிப்பு

    பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி

    பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அவசியம்.

    கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    17:34 (IST)08 May 2020

    திரைத்துறையினருக்கு பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிப்பு

    திரைத்துறையினருக்கு தயாரிப்பு பிந்தைய பணிகளுக்கு (போஸ்ட் புரொடக்‌ஷன்) மட்டும் வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தகவல். 

    17:08 (IST)08 May 2020

    கொரோனாவோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்

    நாம் கொரோனா வைரசோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் தெரிவித்துள்ளார். 

    16:46 (IST)08 May 2020

    திருவள்ளூரில் ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

    16:29 (IST)08 May 2020

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் நிலை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,273 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை, என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    16:09 (IST)08 May 2020

    மதுரையில் 23 பேர் டிஸ்சார்ஜ்

    'மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியு:ள்ளனர். 

    15:45 (IST)08 May 2020

    தர்மபுரியில் கோயம்பேடு கொரோனா பாதிப்பு

    கோயம்பேடு சந்தை மூலம் தருமபுரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து தருமபுரி திரும்பிய 5 தொழிலாளர்களில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது

    15:18 (IST)08 May 2020

    திருப்போரில் குவிந்த குடிமகன்கள்

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், மதுபானம் வாங்குவதற்காக டாஸ்மாக்கில் கூடிய கூட்டம். மது வாங்கும் அவசரத்தில் சமூக விலகலை மறந்து விட்ட, குடிமகன்கள். 

    publive-image

    15:05 (IST)08 May 2020

    முதல்வர் ஆலோசனை

    திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து தற்போது தயார் நிலையில் உள்ளன. நாளை தற்காலிக சந்தையை இயக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    14:33 (IST)08 May 2020

    செங்கல்பட்டில் கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 8 பெண்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. 

    13:49 (IST)08 May 2020

    மதுக்கடைகளுக்கு எதிரான மநீம வழக்கு

    மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்திருக்கிறது. நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    13:43 (IST)08 May 2020

    2570 செவிலியர்கள் பணியமர்த்தல்

    கொரோனா தடுப்புப் பணிக்காக 2,570 செவிலியர்களை பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

    13:03 (IST)08 May 2020

    முதல்வர் பழனிசாமி இரங்கல்

    மகாராஷ்டிர மாநிலத்தில் சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    12:34 (IST)08 May 2020

    அவுரங்காபாத் ரயில் விபத்து – திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    12:09 (IST)08 May 2020

    டெல்லியில் அதிக கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது.

    12:06 (IST)08 May 2020

    சரியான திட்டமிடல் இல்லை - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    11:28 (IST)08 May 2020

    56 ஆயிரமாக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா பாதிப்பிற்கு 103 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    11:05 (IST)08 May 2020

    கொரோனா மண்டலமாக மாறிய கோடம்பாக்கம்

    சென்னையில் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மண்டலமாக கோடம்பாக்கம் மாறியது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    11:01 (IST)08 May 2020

    சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்

    சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் எந்தவித பாதுகாப்பும் இல்லை எனக்கூறி, பதிவாளரை சுற்றிவளைத்து கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம் நட்ததியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    10:27 (IST)08 May 2020

    சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னை பெரியமேடு பகுதியில்  8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    10:10 (IST)08 May 2020

    சென்னையில் கொரோனாே பாதிப்பு மண்டலவாரியாக பட்டியல்

    சென்னையில் கொரோனாே பாதிப்பு மண்டலவாரியாக பட்டியல்

    publive-image

    09:57 (IST)08 May 2020

    ஊரடங்கை மீறியதாக 4,37,061 பேர் கைது

    தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 4,37,061 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    09:42 (IST)08 May 2020

    அவுரங்காபாத்தில் ரயில் மோதி விபத்து – 14 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள் மீது ரயில் மோதிய விபத்தில், 14 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    09:06 (IST)08 May 2020

    28 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத பகுதிகள்

    சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத பகுதிகளின் பட்டியலை கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் வெளியிட்டுள்ளது.

    publive-image

    08:59 (IST)08 May 2020

    அமெரிக்காவில் 75,000-ஐ கடந்தது பலி எண்ணிக்கை

    அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 75,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,448 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  ஒரே நாளில் 29,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 12.92 லட்சம் பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

    கொள்ளை நோய் ஒரு பக்கம்; அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம்; தமிழகம் தாங்குமா' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Tamil Nadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment