ஏப். 20 முதல் தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கும்: அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

By: Oct 7, 2020, 1:35:52 PM

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது. 16 நாட்களில் 1 லட்சம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்புகள் இல்லாத நிலையில், ஒரே நாளில் 103 பேர் குனமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரிசோதனைக்காக முதல் கட்டமாக 24000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் தமிழகம் வந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தேவையான உபகரணங்களை வாங்கி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,835லிருந்து 14,378 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 452-லிருந்து 480 ஆகவும் உயர்வு. அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,767லிருந்து 1,992ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பாதிப்பு 7,09,735ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 37,154ஆக அதிகரிப்பு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
22:57 (IST)18 Apr 2020
மே 4ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம் - ஏர் இந்தியா

ஊரடங்கால் அனைத்து விமான சேவைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், மே 4-ம் தேதிக்கு பிறகு முதல் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்க முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா நிறுவனம்.

அதே போல, ஜூன் 1 முதல் சர்வதேச விமான பயணத்திற்கான முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21:39 (IST)18 Apr 2020
ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக 9 பேர் கைது - ஏடிஜிபி ரவி

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

19:56 (IST)18 Apr 2020
ஏப்ரல் 20 முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க அனுமதி

ஏப்ரல் 20-ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், 1 மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

18:54 (IST)18 Apr 2020
ஒரு ரேபிட் டெஸ்ட் கிட் ரூ.600-க்கு வாங்கப்பட்டது - தமிழக அரசு

கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு ரேபிட் டெஸ்ட் கிட் கருவி ரூ.600-க்கு வாங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நிர்ணையித்த விலையான ரூ.600 என்ற விலைக்கே ரேபிட் டெஸ்ட் கிட் கருவி வாங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

18:22 (IST)18 Apr 2020
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 82 பேர் டிஸ்சார்ஜ் - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை கொரொனா பாதிப்பில் இருந்து 365 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் குணமடைந்த 82 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

18:15 (IST)18 Apr 2020
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 1,372 ஆனது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை விஜயபாஸ்கர்: தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் மொத்த எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் விகிதம் 1.1% நிலையிலேயே உள்ளது என்று கூறினார்.

17:56 (IST)18 Apr 2020
கடலூரில் ஏப்ரல் 20-க்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படாது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்: கடலூரில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என்றும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும். ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

17:44 (IST)18 Apr 2020
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளைக்கு கோடைக்கால விடுமுறை ரத்து

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு கோடைக்கால விடுமுறை ரத்து செய்யபட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. மேலும், மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

16:58 (IST)18 Apr 2020
கடந்த 24 மணிநேரத்தில் 991 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்:

இந்தியாவில் இதுவரை 1992 பேர் குணமடைந்துள்ளனர். (ஒட்டுமொத்த குணமடைவோர் சதவீதம் 13.85)

ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 14,378

உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 480

கடந்த 24 மணிநேரத்தில் 43 பேர் உயிரிழப்பு, 991 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.   

16:06 (IST)18 Apr 2020
தேசிய விண்வெளி ஆய்வகம் சுகாதாரப் பணியாளர்களுக்காக கவச உடையைத் தயாரித்துள்ளது (2/2)

இந்த கவச உடைகள் கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தில் (SITRA) கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு தகுதி பெற்றன. CSIR-NAL மற்றும் MAFம், நான்கு வார காலத்திற்குள் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு சுமார் 30,000 உடைகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.- பத்திரிகை தகவல் அலுவலகம்

16:05 (IST)18 Apr 2020
தேசிய விண்வெளி ஆய்வகம் சுகாதாரப் பணியாளர்களுக்காக கவச உடையைத் தயாரித்துள்ளது

பெங்களூருவில் உள்ள CSIR ஆய்வகத்தின் ஒரு பகுதியான, தேசிய விண்வெளி ஆய்வகம் (CSIR-NAL), MAF ஆடை நிறுவனத்துடன் இணைந்து, முழு பாதுகாப்பு கவச உடையை உருவாக்கி சான்றளித்துள்ளது. கொவிட்-19 காரணமாக இரவு பகலாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பல அடுக்கு பாலிப்ரொப்பிலீன் (Polypropylene) துணி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த கவச உடையைப் பயன்படுத்தலாம்.

15:54 (IST)18 Apr 2020
21 இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மேற்குக் கடற்படை ஆணைப் பிரிவில் பணிபுரியும்  குறைந்தது 21 இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு கடற்படை ஆணைப் பிரிவில் கரையோர தளவாடங்கள் நிலையமாக கருதப்படும் ஐ.என்.எஸ் ஆங்கரில் இவர்கள்  தங்கியிருந்தனர். இதன் மூலம் மகாராஷ்ட்ராவில் எண்ணிக்கை அதிகாமாகும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

15:43 (IST)18 Apr 2020
கேரளாவில் 'குணமடைந்த நோயாளி' என்று வகைப்படுத்தப்பட்டவர் மரணம்:

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட ஒருவர், தீவிர கண்காணிப்புக்கு பிறகு குணமானதாக  அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை அவர் இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டது. 

  இது குறித்து கேரளா சுகாதார அமைச்சர் கூறுகையில் "அவரது வயது மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே உடல் ரீதியாக சோர்ந்து போயிருந்தார். இருப்பினும், அவருக்கு மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களால் சிறந்த கவனிப்பு வழங்கப்பட்டது. காலப்போக்கில், அவர் குணமடைந்து தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசத் தொடங்கினார். கொரோனா வைரஸ் பரிசோதனை மூன்று முறை அவருக்கு நடத்தப்பட்டது. அனைத்தும் நெகடிவ் என்று திரும்பி வந்தது.  எனவே நாங்கள் அவரை குணமடைந்த நோயாளி என்று வகைப்படுத்தினோம், ”என்று கூறினார்.

15:31 (IST)18 Apr 2020
உலகளவில் கொரோனா வைரஸ் இறப்புகள் விவரம்:

15:28 (IST)18 Apr 2020
கரிப் கல்யாண் திட்டம் பேருதவியாக உள்ளது.

மத்திய அரசின் கரிப் கல்யாண் திட்டம் மூலம் பெற்றுள்ள உதவித்தொகை தங்களுக்கு பேருதவியாக இருப்பதாக கோயம்புத்தூர் குரும்பாவளை பகுதியை சேர்ந்த பிரியா கூறியுள்ளார்.

15:19 (IST)18 Apr 2020
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் துறையினருக்கும் கோவிட் -19 பரிசோதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறையினரும் கோவிட் -19 பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வி.களத்தூர் காவல் நிலையத்துடன் தொடர்புடைய ஒரு காவலாளிக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

14:47 (IST)18 Apr 2020
ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால், ஆப்பிரிக்கா கண்டத்தில் இதுவரை 1,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 54 நாடுகளில் 52-ல் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,800 க்கும் அதிகமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால், நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரியின் தலைமை தளபதி அப்பா கியாரி கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

14:38 (IST)18 Apr 2020
16,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ஜெட் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் பரவலையடுத்து , உலகளவில் 16,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ஜெட் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. உலகின் 62% விமானங்களின் நிறுத்திவைக்க தேவைப்படும் காற்றோட்டமான  இடத்தை கண்டுபிடிப்பதும் தற்போது முன்னுரிமைகளாக மாறிவிட்டன என்று சிரியம்  என்ற தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது. 

14:30 (IST)18 Apr 2020
ரேபிட் டெஸ்ட்’ கருவிகளின் விலையை வெளிப்படையாக அரசு தெரிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகள் எத்தனை - என்ன விலை- எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்! என்று மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

14:14 (IST)18 Apr 2020
500 ரூபாய் உதவித்தொகை மகிழ்ச்சியளிக்கிறது.

ஜன் தன் வங்கி கணக்கு மூலம் மத்திய அரசு வழங்கியுள்ள 500 ரூபாய் உதவித்தொகை தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக திருவண்ணாமலை மாவட்ட பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

14:10 (IST)18 Apr 2020
தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகை இன்று காலை 9 மணி நிலவரப்படி இதுவரை மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சத்து 94 ஆயிரத்து மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே நேற்று மாலை 4 மணிவரை 28 ஆயிரத்து 285 இருசக்கர வாகனங்களும் 134 மூன்று சக்கர வாகனங்களும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

13:58 (IST)18 Apr 2020
தபால்துறை ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

கொரோனா காலத்தில் தபால் ஊழியர்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்குகின்றனர். ஆகையால் பணியில் இருக்கும் தபால் ஊழியர்களுக்கு கொரோனா ​தொற்றினால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

13:34 (IST)18 Apr 2020
கர்நாடகாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 371ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 92 பேர் குணமடைந்துள்ளனர். 

13:22 (IST)18 Apr 2020
சென்னையில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

12:41 (IST)18 Apr 2020
சேலத்தில் 18 பேருக்கு கொரோனா இல்லை

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சேலத்தில் முதல்முறையாக நடந்த சோதனையில் 18 பேருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. ரேபிட் டெஸ்ட் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா முடிவை வெளியிட்டது சேலம் அரசு மருத்துவமனை

12:27 (IST)18 Apr 2020
மு.க.ஸ்டாலின் ட்வீட்

நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்! 

12:03 (IST)18 Apr 2020
விசிக எம்பி ரவிக்குமார் கேள்வி
11:55 (IST)18 Apr 2020
மதுரை மக்களே நாளைக்கும் உங்களுக்கு சைவம் தான்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மதுரை மாவட்டத்தில் நாளை மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்

11:24 (IST)18 Apr 2020
ரேபிட் கிட் பரிசோதனை தொடக்கம்

தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் "ரேபிட் டெஸ்ட் கருவி" மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. நேற்று தமிழகத்துக்கு 24000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்த நிலையில், இன்று பரிசோதனை தொடங்கியுள்ளது. 

10:57 (IST)18 Apr 2020
சென்னையில் கொரோனா நிலவரம்

சென்னையின் கொரோனா பாதிப்பு நிலவரம் மண்டல வாரியாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

10:33 (IST)18 Apr 2020
ராஜஸ்தான் கொரோனா நிலவரம்

ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,270ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ள நிலையில், ராஜஸ்தானில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

10:16 (IST)18 Apr 2020
கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட ஆந்திர முதல்வர்

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டார். 10 நிமிடத்தில் இதற்கான ரிசல்ட் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. 

09:49 (IST)18 Apr 2020
20% சுங்கக் கட்டணமாகவே செல்கிறது

நெருக்கடியான காலத்தில் நஷ்டத்துடன் அத்தியாவசியப் பொருட்களை லாரி உரிமையாளர்கள் ஏற்றி வருகின்றனர்; லாரிகளின் இயக்கச் செலவில் 20% சுங்கக் கட்டணமாகவே செலுத்தப்படுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தெரிவித்துள்ளது..

09:30 (IST)18 Apr 2020
ஒரே நாளில் 290 பேர் சீனாவில் பலி

கொரோனா நோய் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 241 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சீனாவில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது.

09:18 (IST)18 Apr 2020
14 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,835லிருந்து 14,378-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 452-லிருந்து 480-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,767லிருந்து 1,992-ஆகவும் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Coronavirus Latest Updates: கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 2 கோடிக்கு மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 52 லட்சம் பேர் வேலையின்மையால் கிடைக்கும் அரசு சலுகைக்காக விண்ணப்பித்த நிலையில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளது. வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரில் உணவு வங்கிகள் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வருகின்றன. நியூயார்க்கின் ரிஜ்வுட் குயின்ஸில் உள்ள உணவு வங்கி கடந்த 35 நாட்களில் 2000 குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

Web Title:Coronavirus live updates india lockdown rapid test kits tamil nadu184937

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X