Covid-19 Cases Updates: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி கலந்தாலோசிக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் இன்று ஆலோசனை நடத்துகிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனை இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.
'கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியில் செல்வோர், 'மாஸ்க்' எனப்படும் முக கவசத்தை கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். கைக்குட்டையை கூட, முக கவசமாக அணிந்து செல்லலாம்' என, பொதுமக்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட முக கவசத்தைத் தான் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முக கவசங்களை கூட அணியலாம். குறிப்பாக, சுகாதாரமான கைக்குட்டைகளை முக கவசமாக அணிவது மிகவும் நல்லது. இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 135 தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 'தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெற விரும்புவோர், அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். 'மேலும், கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் குறித்த விபரங்களை, தினமும், பொது சுகாதாரத்துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும்' என, அரசு தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்
| #CoronaVirus | #LightsOfHope | #NarendraModi #AkshayKumar pic.twitter.com/970kU9nC2l
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றிய இந்திய ராணுவத்தினர்
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றிய இந்திய ராணுவத்தினர்
| #CoronaVirus | #LightsOfHope | #NarendraModi | #IndianArmy pic.twitter.com/4Lm6dW487Y
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
மனைவி லதாவுடன் ரஜினிகாந்த்...
#StayHomeStaySafe #Solidarity #Unity #IndiaFightsCoronavirus 🙏🏻 pic.twitter.com/4LSSsfpVFa
— Rajinikanth (@rajinikanth) April 5, 2020
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் நடிகை நயன்தாரா
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம்பிக்கை ஒளியேற்றினார் நடிகை நயன்தாரா
| #CoronaVirus | #LightsOfHope | #NarendraModi #Nayanthara pic.twitter.com/f1ch9rGLV3
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
தமிழகத்தில் எதிர்ப்பார்த்ததை விட 1,000 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது. எந்த இடத்திலும் பிரச்னை ஏற்படவில்லை
அரசின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி.
- அமைச்சர் தங்கமணி
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விளக்கேற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் சச்சின் ஆதரவு
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விளக்கேற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் சச்சின் ஆதரவு
#CoronaVirus | #LightsOfHope #SachinTendulkar #NarendraModi pic.twitter.com/jpVQ9pwcoF
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றினார் தொழிலதிபர் ரத்தன் டாடா
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றினார் தொழிலதிபர் ரத்தன் டாடா#Tata #CoronaVirus | #LightsOfHope #RatanTata #NarendraModi pic.twitter.com/6GRmgR9wpE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றினார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றினார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து #CoronaVirus | #LightsOfHope #pvsindhu #NarendraModi pic.twitter.com/RMxd0vOm77
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் அமைச்சர் விஜயபாஸ்கர் #Vijayabaskar | #COVID19 pic.twitter.com/FZfvaaGNk9
— Thanthi TV (@ThanthiTV) April 5, 2020
டெல்லியில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் விளக்கேற்றினார்
டெல்லியில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் விளக்கேற்றினார்#PMModi | #COVID19 pic.twitter.com/iFPep4lBWV
— Thanthi TV (@ThanthiTV) April 5, 2020
கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி #COVID19 | #EdappadiPalanisamy pic.twitter.com/XwpIdmM4kk
— Thanthi TV (@ThanthiTV) April 5, 2020
பிரதமரின் வேண்டுகளை ஏற்று டெல்லியில் விளக்கேற்றினார் அமித்ஷா
பிரதமரின் வேண்டுகளை ஏற்று டெல்லியில் விளக்கேற்றினார் அமித்ஷா #CoronaVirus | #LightsOfHope #Delhi #AmitShah #NarendraModi pic.twitter.com/Xa1wxICpe4
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
கொரோனாவுக்கு எதிராக ஒளியேற்றினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் #OPanneerselvam | #COVID19 pic.twitter.com/RCyO7VyWpB
— Thanthi TV (@ThanthiTV) April 5, 2020
சென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு ஒளியேற்றினார் நடிகர் ரஜினிகாந்த்.
#JUSTIN: சென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு ஒளியேற்றினார் நடிகர் ரஜினிகாந்த்#Rajinikanth #LightsOfHope #Chennai #NarendraModi pic.twitter.com/OdctjAZiD2
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2020
அமெரிக்காவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது நாளோன்றுக்கு இருபதாயிரம் பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் .
இத்தாலியின் வடக்கு பகுதி கொரோனாவுக்கு அதிகம் பாதித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இடமில்லாததால் நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறும் அவல நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு முன்னரே மக்கள் உயிரிழந்து வருவது அதிகரித்துள்ளது.
இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற கூட்டம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனை முன், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல் துறையினர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கலந்துகொண்டு காவல் துறையினர்களூக்கு உதவிகளை வழங்கினர்.நிகழ்ச்சியில், இடைவெளியை பின்பற்றாமல் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நின்றனர்.
இன்று இரவு 9 மணிக்கு ஒளியேற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
* மின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும், மற்ற மின்சாதனங்களை அணைக்க தேவையில்லை. தெரு விளக்குகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் மின்விளக்குகளை அணைக்க தேவையில்லை
நாடு முழுவதும் உள்ள 27,661 நிவாரண முகாம்களில், 12.50 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முறையாக பின்பற்றுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - உள்துறை அமைச்சகம்
இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணா சாலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பிரதமர் அறிவுறுத்திய 9 நிமிட நேரத்தில் தெருவிளக்குகள் மருத்துவமனை விளக்குகளை அணைக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் மேலும், எட்டு கொரோனா ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மாநிலத்தில் 17 கொரோனா ஆய்வகங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று என்ற விதத்தில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
நாடு முழுவது கொரோனா பாதிப்பால் 79 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய அசுகாதாரத்துறை
கொரோனா பாதிக்கப்பட்ட 267 இதுவரை குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்: “பள்ளிகள் கல்லூரிகளை திறப்பது குறித்து ஏப்ரல் 14-ம் தேதி மத்திய அரசு முடிவெடுக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மத்திய அரசு முடிவெடுக்கும். ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டபின், தேர்வுகள் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது குறித்த திட்டம் அரசிடம் தயாராக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு விலக்கலுக்கு பிறகு நீதிமன்ற பணிகளை துவங்குவது குறித்து ஏப்ரல் 7ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்த உள்ளது.
மாவட்ட நீதிபதிகள் தங்களின் கருத்துகளை நாளைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலைகளை குறித்து கேட்டறிந்தார்.
ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்க இருப்பதாக, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று ( ஏப்ரல் 5ம் தேதி) இரவு 9 மணி்ககு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகளை ஏற்றி இந்திய மக்களின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
PM @narendramodi has a special request for everyone! #9pm9minute https://t.co/kbnFvvoXtK
— narendramodi_in (@narendramodi_in) April 5, 2020
தர்மபுரி, ஈரோடு, பெரம்பலூர் மருத்துவ கல்லூரிகளுக்கு தற்காலிக டீன்கள் நியமிக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பூவதி, தருமபுரி மருத்துவக்கல்லூரி டீனாக நியமனம்
கோவை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் மணி, ஈரோடு மருத்துவக்கல்லூரி டீனாக நியமனம்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் தீரணிராஜன், பெரம்பலூர் மருத்துவக்கல்லூரி டீனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசும், நிர்வாகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மக்கள் அதை கேட்பதாக தெரியவில்லை என்பதற்கு இதுவே சாட்சி
சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்
தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருப்பதும், இந்த எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 4 அதிகரித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கொரோனாவின் கொடிய தன்மை இதுதான். அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருப்போம்!#COVID2019 #TN_Together_AgainstCorona #CoronaAlert
— Dr S RAMADOSS (@drramadoss) April 5, 2020
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தனது டிவிட்டர் பதிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விதிமுறைகளை மீறினால், 3 மாதங்களுக்கு கடையை திறக்க முடியாது என்றும் அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை முதல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். மாநகராட்சியின் இறைச்சிக் கூடங்களில் இருந்து வரும் இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அனைத்து கடைகளும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 1/2
— SP Velumani (@SPVelumanicbe) April 4, 2020
Actress #Meena requests ppl to follow Govt instructions on #Lockdown21 #coronavirusindia pic.twitter.com/6YZN747Q2Z
— Ramesh Bala (@rameshlaus) April 5, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஏப்ரல், 15ம் தேதி முதல், ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க, ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஏப்ரல், 15ம் தேதிக்குப் பின், மீண்டும் ரயில் சேவைகளை தொடங்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. ரயில்வே பாதுகாப்பு பணியாளர்கள், ரயிலை இயக்கும் ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், காவலர்கள் என, அனைத்து ஊழியர்களிடமும், பணிக்கு திரும்ப தயாராக இருக்குமாறு, ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டது. எனினும், மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின் தான், ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights