Covid-19 Cases Update: தமிழகத்தில் ஊரடங்கை தொடர, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் முடிவை அறிந்த பின், தேதி அறிவிக்கப்படும்,'' என, தமிழக அரசின், தலைமை செயலர் சண்முகம் தெரிவித்தார். பிரதமர் அறிவிக்கும் முடிவின் அடிப்படையில், தமிழக அரசு, ஊரடங்கு முடிவை எடுக்கும். கொரோனா தொற்றுக்கான, பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய, போதுமான உபகரணங்கள் நம்மிடம் உள்ளன. ஓரிரு நாட்களில், பரிசோதனை செய்ய வேண்டிய அனைவருக்கும், சோதனை நடத்தப்படும். அதன்பின், புதிதாக தொடர்புடைய நபர்களை கண்டறிந்து, சோதனை செய்யப்படும். அப்போது, நோய் கட்டுக்குள் வரும் என, நம்புகிறோம் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஊரடங்கை, நாளை மறுநாளுக்குப் பின்னும், மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கும்படி, பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள், பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, ஏப்., 30 வரை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, தினக்கூலி தொழிலாளர்கள், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் பணியாற்றியவர்கள் வேலை இழந்துள்ளனர். இது போன்ற நிலையில், ஊரடங்கை நீட்டித்தால், மிகவும் மோசமான சூழல் உருவாகும் என, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்த திமுக சார்பில் ஏப்ரல்15-ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்த திமுக சார்பில் ஏப்ரல்15-ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தித் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் துன்ப துயரத்தை அனுபவித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்குவது தவறு என்றும், மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது.
இத்தகைய உத்தரவு போட்ட ஈவு இரக்கமற்ற அந்த உள்ளத்தை கேட்கிறேன்; தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது, செய்ய முன்வந்தால் தடுப்பேன் என்பதுதான், இந்த ஆட்சியின் வஞ்சக எண்ணமா?
தனிமனித இடைவெளி இல்லாமல் கூடுவது தவறாக இருக்கலாம். அப்படி கூட்டம் சேர்வதை காவல் துறையினர் ஒழுங்குபடுத்தலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியே செய்யக்கூடாது, உணவுப் பொருள் தரக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்?
கருணை உள்ளத்தோடு, கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது; இது ஜனநாயக நாடு; யாரும் எவருக்கும் உதவி செய்யலாம்; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்!
கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதற்கான செலவை அரசே ஏற்கும்.
- பீலா ராஜேஷ்
கொரோனா பாதிப்பால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2020ஆம் நிதியாண்டில் 5 சதவீதமாகவும், 2021ஆம் நிதியாண்டில் 2.8 சதவீதமாகவும் சரிவடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வர்த்தகம், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் முடங்கி, பொருளாதார சுழற்சி தடைபட்டுள்ளது.
இதனால், பொருட்கள் உற்பத்தியும், ஏற்கெனவே உற்பத்தியான பொருட்கள் கிடைப்பதிலும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாகவே இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
மேலும் நடப்பு 2021ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக சரிவடையும் என்றும், தெற்காசிய நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மனிதாபிமான பணிகளை தடுத்து நிறுத்த வேண்டாம் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தன்னார்வலர்கள், அரசியல்கட்சிகள் உணவோ அல்லது பொருட்களை வழங்குவதை முறைப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறை, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
1,86,906 ரத்த மாதிரிகள் இன்று வரை சோதனை செய்யப்பட்டுள்ளன. 7,953 மாதிரிகள் - 4.3% கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில், ஒரு நாளைக்கு சராசரியாக 15,747 ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன.
சராசரியாக ஒரு நாளைக்கு 584 மாதிரிகள் கொரோனா இருப்பது கண்டறியப்படுகிறது
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்
மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய மோடி பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி உள்ளார். கொரோனா தாக்கத்தை அறிவதற்கு அடுத்த 3 முதல் 4 வாரங்கள் முக்கியமான கட்டமாகும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் - மத்திய அரசு
அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் நெல்லினை தங்கு தடையின்றி கொள்முதல் செய்ய தமிழக அரசு தயார்
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகள் டோக்கன் பெறலாம்
நெல் கொள்முதலில் சிரமம் ஏற்பட்டால் 044-26426773 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்
- அமைச்சர் காமராஜ்
சென்னை ஜெமினி மேம்பாலத்தில் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.
#JUSTIN | சென்னை: தேனாம்பேட்டை அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் படுகாயம் | #Chennai pic.twitter.com/6stjyhCMPs
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 12, 2020
ஜப்பானில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 714 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் அபாயகரமான பாதையில் இந்தியா சென்று கொண்டு இருப்பதாக மதுரை தொகுதி வெங்கடேசன் எம்.பி. முகநூலில், ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் முதல் 9 நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்த நிலையில், 149 பேர் உயிரிழந்தனர் என்றும், இந்த எண்ணிக்கையை அமெரிக்கா 6 நாட்களில் அடைந்த போதும், அங்கு உயிரிழப்பு 100 ஆகவே, இருந்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
கொரோனாவால் இறந்தவர்களின் உடலை கையாளும் வழிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை
இறந்தவரின் உடலை அதற்கென உள்ள பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாக சுற்றி வைக்க வேண்டும்
பையின் மேற்புறத்தில் 1% சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
பணியாளரைத் தவிர வேறு யாரும் உடலை தொடக் கூடாது
- சுகாதாரத்துறை
சென்னையில் இதுவரை 182 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னை முழுவதும் வீடுவீடாக சென்று 86 லட்சம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 775 நபருக்கு அறிகுறிகள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் 10 இடங்களில் "கொரோனா மாதிரிகள் சேகரிப்பு மையம்" அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுக்கலாம். இங்கிருந்து, இந்த மாதிரிகள் ஆய்வகங்களுக்கு எடுத்துச் சென்று பரிசோதித்து முடிவுகள் தெரிவிக்கப்படும்.
குஜராத் மாநிலம் மோர்பியில் டுரோன் மூலம் பான்பராக் டெலிவரி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
This is just epic- Two detained after video of delivering 'pan masala' via drone goes viral in Morbi, Gujarat @GujaratPolice #COVID__19 pic.twitter.com/p0vW9KyJx4
— Anubhav Khandelwal (@_anubhavk) April 12, 2020
திருச்சியில் கொரோனா பாதித்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்தது, மருத்துவர்கள் மீது கொரோனா பாதித்த நபர் எச்சில் துப்பி, முக கவசத்தை வீசியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அம்பேத்கர் (ஏப். 14) பிறந்தநாளில் பொதுமக்கள் கூட தடை; ஏப்ரல் 17ல் தீரன் சின்னமலை பிறந்த நாளிலும் மக்கள் வெளியே வரவேண்டாம்; அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்!" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில், கொரோனா பாதிப்பு காரணமாக, பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.5 முதல் 2.8 சதவீதம் வரை அளவே இருக்கும். இது முனன்தாக 4.8 முதல் 5 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலையடுத்து, கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்க வேண்டாம் என தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கிருமிநாசினி சுரங்கங்கள் தவறான பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கை கழுவும் பழக்கத்திலிருந்து மக்களை கிருமிநாசினி சுரங்கம் திசை திருப்புவதாகவும் தெரிவித்துள்ளார். கிருமிநாசினி சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ஹகால், குளோரின், லைசால் ஆகியவற்றை மனிதர்கள் மீது தெளிப்பது பயனற்றது எனவும் அது தீங்கு விளைவிக்கும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே கிருமிநாசினி சுரங்கங்களை ஏற்படுத்தவும், அதனை பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை வென்று ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க ஈஸ்டர் கூடுதல் பலத்தை அளிக்கட்டும்; இயேசு பிரானின் உன்னதமான எண்ணங்களை நாம் நினைவில் கொள்வோம். இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Best wishes to everyone on the special occasion of Easter. We remember the noble thoughts of Lord Christ, especially his unwavering commitment to empowering the poor and needy. May this Easter give us added strength to successfully overcome COVID-19 and create a healthier planet.
— Narendra Modi (@narendramodi) April 12, 2020
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போர், கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து தப்பிக்க, ஊரடங்கிற்கு முன், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், அவர்கள் உள்ளிட்ட பலர், மார்ச் மாத ரேஷன் பொருட்களை வாங்கவில்லை. அவற்றை, தற்போது வாங்க, அரசு அனுமதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், ரேஷன் பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தை, உடனே செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால், ரேஷன் கார்டுதாரர்கள், தற்போது, எந்த ஊரில் உள்ளனரோ, அங்குள்ள ரேஷன் கடையில், தங்களின் ஆதார் எண் அல்லது மொபைல் போன் எண் பயன்படுத்தி, உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்துவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights