Covid-19 Cases Update: 'தமிழகத்தில், வரும், 20க்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின் ஊரடங்கை, எப்படி படிப்படியாக தளர்த்தலாம் என, அரசுக்கு அறிக்கை அளிக்க, நிதித்துறை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கப்படுமா என, முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த முதல்வர், பழனிசாமி''இது பணக்காரர்களுக்கு வந்த நோய்; வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட நோய். இந்த நோய் ஏழைகளுக்கு வரவில்லை. ''ஏழைகளாக இருந்தால் பேசலாம். பணக்காரர்களை கண்டால் பயமாக இருக்கிறது. வெளிநாட்டிற்கு சென்று, நோயை இறக்குமதி செய்துள்ளனர். ''தமிழகத்தில் நோய் உருவாகவில்லை,'' என, தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் உள்ள, 325 மாவட்டங்கள், கொரோனா பாதிப்பில்லாதவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன; ஆனாலும், நாடு முழுதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது; பலி எண்ணிக்கையும், 414 ஆக அதிகரித்துள்ளது' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம், 720 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், 325 மாவட்டங்களில், ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம், 325 மாவட்டங்கள், கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த, 1,488 பேர், முழுமையாக குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 2 கோடிக்கு மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மட்டும் 52 லட்சம் பேர் வேலையின்மையால் கிடைக்கும் அரசு சலுகைக்காக விண்ணப்பித்த நிலையில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளது. வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரில் உணவு வங்கிகள் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வருகின்றன. நியூயார்க்கின் ரிஜ்வுட் குயின்ஸில் உள்ள உணவு வங்கி கடந்த 35 நாட்களில் 2000 குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு பணியாற்றும், வெளியூரை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் ஆகியோரது வீடியோக்களை வைத்து, அந்நாட்டு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் லாரன்ஸ். முன்னதாக 3 கோடி ரூபாய் நிவாரண தொகையை, பிரதமர், தமிழக முதல்வர், பெஃப்சி, நடன இயாகுநர்கள் சங்கம், அவர் பிறந்த ராயபுரம் மக்களுக்கு பிரித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்புகள் பணப்புழக்கத்தை பெரிதும் மேம்படுத்தும். கடன் வழங்குவதை அதிகரிக்கும். சிறு-குறு வணிகங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Today’s announcements by @RBI will greatly enhance liquidity and improve credit supply. These steps would help our small businesses, MSMEs, farmers and the poor. It will also help all states by increasing WMA limits.
— Narendra Modi (@narendramodi) April 17, 2020
சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இதுவரை 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் மூலம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஆர்டர் செய்த 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்து சேர்ந்துள்ளன. ஆர்டர் செய்துள்ள மீதமுள்ள ரேபிட் டெஸ்ட் கருவிகள் விரைவில் வரும் என எதிர்பார்ப்பு. அதிக சோதனை கருவிகள் வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்” என்றார்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,18,533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.1.85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.98.07 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைப்பு
2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்
கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது
ஆட்டோ மொபைல் தயாரிப்பு, விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது
சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை
கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு
இந்திய ஏற்றுமதி 34.57 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்திய அந்நிய செலாவணி இருப்பு 476.5 மில்லியன் டாலராக உள்ளது
இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பால் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தின் நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், இளைஞர்கள் கறி விருந்து நடத்திய சம்பவம் கும்பகோணத்தில் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, தியாகசமுத்திரத்தை சேர்ந்த சிவகுரு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கறி விருந்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். மக்களின் நலனுக்காகவும், வியாபாரிகள், நிறுவனங்களின் நலனுக்காகவும் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சந்திப்பின் போது, ஈஎம்ஐ சலுகை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டுகள் மூலமாக, வைரஸ் பரவியிருக்கலாம்' என, போலீசார் சந்தேகிப்பதால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என் பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஏற்கனவே, மக்கள் பதற்றத்திலும், பயத்திலும் இருக்கும்போது, போலீசாரின் இந்த நடவடிக்கை, மக்களின் பயத்தை மேலும் அதிகரித்து விடும் ஆந்திர மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights