Covid-19 Cases Update: ‘தமிழகத்தில், வரும், 20க்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின் ஊரடங்கை, எப்படி படிப்படியாக தளர்த்தலாம் என, அரசுக்கு அறிக்கை அளிக்க, நிதித்துறை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கப்படுமா என, முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த முதல்வர், பழனிசாமி”இது பணக்காரர்களுக்கு வந்த நோய்; வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட நோய். இந்த நோய் ஏழைகளுக்கு வரவில்லை. ”ஏழைகளாக இருந்தால் பேசலாம். பணக்காரர்களை கண்டால் பயமாக இருக்கிறது. வெளிநாட்டிற்கு சென்று, நோயை இறக்குமதி செய்துள்ளனர். ”தமிழகத்தில் நோய் உருவாகவில்லை,” என, தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் உள்ள, 325 மாவட்டங்கள், கொரோனா பாதிப்பில்லாதவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன; ஆனாலும், நாடு முழுதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது; பலி எண்ணிக்கையும், 414 ஆக அதிகரித்துள்ளது’ என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம், 720 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், 325 மாவட்டங்களில், ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம், 325 மாவட்டங்கள், கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த, 1,488 பேர், முழுமையாக குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Corona latest news updates : கொரோனா நோயால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைமையில், நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ரூபாய் நோட்டுகள் மூலமாக, வைரஸ் பரவியிருக்கலாம்' என, போலீசார் சந்தேகிப்பதால், ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என் பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஏற்கனவே, மக்கள் பதற்றத்திலும், பயத்திலும் இருக்கும்போது, போலீசாரின் இந்த நடவடிக்கை, மக்களின் பயத்தை மேலும் அதிகரித்து விடும் ஆந்திர மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Web Title:Coronavirus live updates india lockdown tamilnadu modi
‘உலகளவில் 1.50 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு’
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,50,597
ஆக அதிகரிப்பு
* உலகளவில் 22,26,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 5,63,670 பேர் குணமடைந்துள்ளனர்
கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 2 கோடிக்கு மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.
கடந்த வாரத்தில் மட்டும் 52 லட்சம் பேர் வேலையின்மையால் கிடைக்கும் அரசு சலுகைக்காக விண்ணப்பித்த நிலையில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளது. வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரில் உணவு வங்கிகள் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வருகின்றன. நியூயார்க்கின் ரிஜ்வுட் குயின்ஸில் உள்ள உணவு வங்கி கடந்த 35 நாட்களில் 2000 குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
'மே மாத ரேசன் பொருட்கள் வழங்க அரசாணை வெளியீடு'
குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்க ரூ.184.30 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
நாடு முழுவதும் வரும் 20ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும்; 20ம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஊரடங்கில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் 7,000 மாணவர்களை மீட்க ராஜஸ்தானிற்கு 250 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு அனுப்பியுள்ளது.
5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், 1 லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகளையும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது இந்தியா.
கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருந்த சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
’திருவள்ளூரில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்’
திருவள்ளூரில் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றால் ரூ.200 அபராதம்
- ஆட்சியர் மகேஷ்வரி
மும்பை தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;
அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்;
maduraimeenakshi.org எனும் இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு.
மும்பையில் இன்று ஒரே நாளில் கொரோனாவினால் 5 பேர் உயிரிழப்பு, புதிதாக 77 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
மும்பையில் மொத்த பாதிப்பு - 2,120
மொத்த பலி - 121
கேரளாவில் இன்று புதிதாக ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு..
இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
ஒட்டுமொத்தமாக இதுவரை 255 பேர் குணமடைந்துள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர், அர்ச்சகர்களுடன் ஆலோசனை.
ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, திருவிழா குறித்து முடிவை தமிழக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் இன்று மேலும் 847 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு..
மொத்த பலி எண்ணிக்கை 14,576ஆக அதிகரித்துள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தகவல்.
தஞ்சையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகளவாக தஞ்சையில் 17, சென்னையில் 11, தென்காசி, திருவள்ளூரில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்:
சென்னை - 228
கோவை - 127
திருப்பூர் - 80
ஈரோடு - 70
நெல்லை - 66
தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்று அதிகளவாக தூத்துக்குடியில் 17, சென்னையில் 11, தென்காசி, திருவள்ளூரில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 283ஆக உயர்ந்தது..
மொத்த பாதிப்பு - 1,323
இன்று ஒரே நாளில் 56 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
உயிரிழப்பு - 15
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு!
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்தை கடந்தது.
இதுவரை 1.47 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5.58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்..
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் உயிரிழப்பு..
ஸ்பெயின் நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா பலி எண்ணிக்கை 19,500 ஆக அதிகரித்தது..
நாடு முழுவதும் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 452ஆக அதிகரித்தது.
13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை!
100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்வு
* மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியீடு
நாமக்கல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்
* கடந்த 15ஆம் தேதி மோகனூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற 2 பேருக்கு கொரோனா உறுதி
வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும்"
பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும் - தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு
பணியாளர்கள் முகக்கவசம் அணிந்துவருவது கட்டாயம்
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே முகாமிட்டுள்ள 13 காட்டு யானைகள்
மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல்
கொரோனாவை தடுப்பதில் கேரள மாநிலம் முன்னிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் எனவும், சென்னையில் 90% வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்துள்ளது எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,007பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்துள்ள இசைக் கலைஞர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு பணியாற்றும், வெளியூரை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் ஆகியோரது வீடியோக்களை வைத்து, அந்நாட்டு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் லாரன்ஸ். முன்னதாக 3 கோடி ரூபாய் நிவாரண தொகையை, பிரதமர், தமிழக முதல்வர், பெஃப்சி, நடன இயாகுநர்கள் சங்கம், அவர் பிறந்த ராயபுரம் மக்களுக்கு பிரித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என புகழாரம்!
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 34 வயது மருத்துவர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம்மூடப்பட்டது
ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்புகள் பணப்புழக்கத்தை பெரிதும் மேம்படுத்தும். கடன் வழங்குவதை அதிகரிக்கும். சிறு-குறு வணிகங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இதுவரை 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் மூலம் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஆர்டர் செய்த 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்து சேர்ந்துள்ளன. ஆர்டர் செய்துள்ள மீதமுள்ள ரேபிட் டெஸ்ட் கருவிகள் விரைவில் வரும் என எதிர்பார்ப்பு. அதிக சோதனை கருவிகள் வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும்” என்றார்.
இஞ்ஜினியரிங் மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நேற்று அறிவித்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக, தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர். பரிசோதனைகளை அதிகப்படுத்தி, உபகரணங்களை வாங்கி, எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள் என்று முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் மே மாதத்தின் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடையும் எனவும் அதன்பின் பாதிப்பு படிப்படியாகக் குறையும் எனவும் அரசு மதிப்பிட்டுள்ளது
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,18,533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.1.85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ.98.07 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள முதற்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக குறைப்பு
2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்
கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது
ஆட்டோ மொபைல் தயாரிப்பு, விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது
சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை
கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளில் 9 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பாதிப்பு
இந்திய ஏற்றுமதி 34.57 சதவிகிதம் குறைந்துள்ளது.
இந்திய அந்நிய செலாவணி இருப்பு 476.5 மில்லியன் டாலராக உள்ளது
இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பால் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தின் நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், இளைஞர்கள் கறி விருந்து நடத்திய சம்பவம் கும்பகோணத்தில் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக, தியாகசமுத்திரத்தை சேர்ந்த சிவகுரு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கறி விருந்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் வசந்த உற்சவ திருவிழா, கொரோனாே பாதிப்பு எதிரொலியாக, இந்தாண்டு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். மக்களின் நலனுக்காகவும், வியாபாரிகள், நிறுவனங்களின் நலனுக்காகவும் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சந்திப்பின் போது, ஈஎம்ஐ சலுகை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - 34,562
இத்தாலி - 22,170
ஸ்பெயின் - 19,516
பிரான்ஸ் - 17,920
பிரிட்டன் -13,729
ஜெர்மனி - 4,052
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. 1,749 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.