Covid-19 Cases Update : மாநில நிதி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ1928 கோடி நிதியை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில், 688 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.82 லட்சமாக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,56,361 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,24,535 ஆகவும் உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் ஒன்றாம் தேதி, தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல், நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி, இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
மாணவர்கள் நலன் கருதி ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவிப்பு. முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தல். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களிலும் தேர்வு நடத்தலாம். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பேருந்து வசதி, தெர்மல் ஸ்கிரீனிங், கிருமி நாசினி பயன்பாடு கட்டாயம்.
கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தப்பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார் - உதயநிதி ஸ்டாலின்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி ஒதுக்கீடு. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகையில் இருந்து அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.816 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், ம.பி.க்கு ரூ.330 கோடியும் ஒதுக்கீடு
- மத்திய அரசு
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
#JUSTIN | உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!https://t.co/5wMBD3FLqB #Usilampatti #COVID19 pic.twitter.com/UKI0Fy807H
— News7 Tamil (@news7tamil) May 20, 2020
தமிழ்நாடு கைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் வழங்குவார் என செய்திகுறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பம் செய்து பயன் அடையுமானு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி
* விரிவான பதில் மனுவை 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் - நீதிபதிகள்
* பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் - நீதிபதிகள்
Here's the zone wise breakup of Covid-19 positive cases in #Chennai.#Covid19Chennai#GCC #ChennaiCorporation pic.twitter.com/iXzEnhXKaE
— Greater Chennai Corporation (@chennaicorp) May 20, 2020
பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139-லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174-லிருந்து 42,298 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163-லிருந்து 3,303 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights