Advertisment

சென்னை புழல் சிறைக் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை: 30 கைதிகளுக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா தொற்று 20000 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona live news

corona live news

Coronavirus live updates latest tamil nadu and India breaking news : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Advertisment

Coronavirus updates :

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து விடுபட்டவர்கள் குறித்த முழுமையான தகவல். தற்போது கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 987 ஆகும். நோயில் இருந்து முழுமையாக குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 105 ஆகும். கொரோனா நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4,706 ஆக உயர்ந்துள்ளது.

கேரள எம்.பி. மரணம்

முன்னணி மலையாள நாளேடான மத்ருபூமியின் நிர்வாக இயக்குநரும், பி.டி.ஐ இயக்குநர்கள் குழுவின் உறுப்பினருமான எம் பி வீரேந்திர குமார்,  கார்டியாக் அரெஸ்ட் காரணமாக வியாழக்கிழமை தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:17 (IST)29 May 2020

    நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

    இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுத உள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த கடிதம் வெளியாகும் எனவும், இந்த கடிதம் நாளை காலை அனைத்து செய்தி தாள்களிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22:13 (IST)29 May 2020

    ஹரியானாவில் நிலநடுக்கம் - டெல்லியில் நிலஅதிர்வு

    ஹரியானா மாநிலத்தின் ரோடக் பகுதியில் இரவு 9.08 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. இந்தாண்டில் இங்கு 7வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, டெல்லி என்சிஆர் பகுதியில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.

    21:35 (IST)29 May 2020

    முதல்வர் பழனிசாமி கடிதம்

    தமிழகத்தில் தொழில் துவங்க  வருமாறு ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட 13 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர்பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    21:05 (IST)29 May 2020

    மீரா மொஹந்தி ஐஏஎஸ், பிரதமர் அலுவலக இயக்குநராக நியமனம்

    மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான கோபால கிருஷ்ணன் ஐஏஎஸ், பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவை செயலகத்தின் இயக்குநரான மீரா மொஹந்தி ஐஏஎஸ், பிரதமர் அலுவலக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    20:27 (IST)29 May 2020

    30 கைதிகளுக்கு கொரோனா தொற்று

    சென்னை புழல் மத்திய சிறையில் 94 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    20:14 (IST)29 May 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - ஹெச்.ராஜா

    இந்தியாவில் சரியான நடவடிக்கை எடுத்ததால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    19:51 (IST)29 May 2020

    கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

    சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 57 வயது நபருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதே போல சேத்துப்பட்டை சேர்ந்த 63 வயது ஆண் கொரோனா நோயாளி தப்பி ஓடிவிட்டார். இவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    19:36 (IST)29 May 2020

    மருத்துவமனை கழிவறையிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி

    சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் கழிவறையிலேயே மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    19:04 (IST)29 May 2020

    முதல்வர் பழனிசாமி டுவிட்டர் பதிவு

    இதுவரை 2,47,561 வெளிமாநில தொழிலாளர்கள் 170 ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து பயணச் செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது. 2,218 வெளிநாடு வாழ் தமிழர்கள் விமானம் மற்றும் கப்பல் மூலமாகவும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

    கொரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவிக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்றி மிகச் சிறப்பாக செயல்படுத்திய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், துணை நின்ற அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் மனமார, உளமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    18:27 (IST)29 May 2020

    நீதிமன்ற உத்தரவு நாங்களே எதிர்பார்க்காதது - தீபா

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசுகள் யார் என்ற வழக்கில்,நீதிமன்ற உத்தரவு நாங்களே எதிர்பார்க்காதது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தை அரசியல் ஆக்க சிலர் முயற்சி செய்கின்றனர். என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக எதிர் கொள்ள நான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    18:08 (IST)29 May 2020

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.

    18:02 (IST)29 May 2020

    ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் கூடாது

    திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. மே 29ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையில் தடையை, சென்னை உயர்நீதிமன்ம் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நீட்டித்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    17:37 (IST)29 May 2020

    குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை - 7 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் புதூரில் வசித்த சிவமுனி , ராமலட்சுமி தம்பதிக்கு 3 குழந்தைகள். இந்நிலையில் ராமலட்சுமி பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் பயங்கர சம்பவம் நடந்தது. கணவர் சிவமுனி தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

    குழந்தைகள் மூவரும் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டுள்ளனர். உடனே வீட்டை பூட்டி கொண்ட சிவமுனி தானும் விஷமருந்தியுள்ளார். அத்துடன் சிவமுனி தனது கைகளிலும் கால்களிலும் ஆயுதத்தால் வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பட்டாசு தொழிற்சாலையில் இருந்த ராமலட்சுமி, தகவல் அறிந்து வீட்டிற்கு வந்துள்ளார். 3 குழந்தைகளையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதில் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி என்ற ஏழு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிவமுனிக்கும், 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    17:23 (IST)29 May 2020

    1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை - அமேசான்

    ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் 1,25,000 பேருக்கு நிரந்தர வேலை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆன்லைன் சேவைகளை நாட ஆரம்பித்தனர். அதனால் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக லட்சக்கணக்கான தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் அனைத்து விதமான பொருட்களும் ஆன்லைனில் விற்கப்படுகின்றன. அதனால் ஆன்லைன் விற்பனை சேவை அதிகரித்து வருகிறது.

    இதனையடுத்து இந்தியாவில் 50,000 பேருக்கு தற்காலிகமாக வேலை கொடுப்பதாக அமேசான் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது ஆன்லைன் சேவை அதிகரித்து வருவதாலும், பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருவதாலும் 1,25,000 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் வேலையை இழந்து வரும் இந்த சூழலில், அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    16:56 (IST)29 May 2020

    அரசால் நேரடியாக தடுக்க முடியாது

    'OTT-யில் திரைப்படம் வெளியீடு: அரசுக்கு இழப்பு - அமைச்சர்'

    OTT-யில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது

    OTT-யில் திரைப்படம் வெளியிடுவதை அரசால் நேரடியாக தடுக்க முடியாது

    - அமைச்சர் கடம்பூர் ராஜூ

    16:55 (IST)29 May 2020

    வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்

    மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும்

    ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும்

    - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

    16:47 (IST)29 May 2020

    சொந்த ஊருக்கு அனுப்ப தீவிர நடவடிக்கை

    புலம் பெயர் தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப தீவிர நடவடிக்கை - ரயில்வே வாரியத் தலைவர் உறுதி

    மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் தயார் நிலையில் உள்ளன தாமதம் எதுவும் இல்லை. இதுவரை 52 லட்சம் பேர் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1524 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன

    புறப்படும் இடங்களில் மட்டுமே மாநில அரசுகள் உணவு, குடிநீர் வழங்குகின்றன. ஐ.ஆர்.டி.சி. மூலம் பயணம் முழுவதும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

    16:41 (IST)29 May 2020

    தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது

    வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பணி செய்ய விரும்பினால் அனுமதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவித்துக் கொள்ள கூடாது - முதல்வர் பழனிசாமி

    16:40 (IST)29 May 2020

    எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை

    "இந்தியா- சீனா எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை"

    * சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அறிவிப்பு

    * இந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என ட்ரம்ப் தெரிவித்த நிலையில் சீனா பதில்

    16:15 (IST)29 May 2020

    அஜித் ஜோகி மறைவு

    'சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மறைவு’

    சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (74) உடல்நலக்குறைவால் காலமானார்

    * ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அஜித் ஜோகியின் உயிர் பிரிந்தது

    16:15 (IST)29 May 2020

    மக்கள் ஒத்துழைப்பு தேவை

    'சென்னையில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வர மக்கள் ஒத்துழைப்பு தேவை'

    மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே தளர்வுகளை அறிவிக்கக்கூடாது

    தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி தொழிலாளர்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்

    -முதல்வர் பழனிசாமி

    15:59 (IST)29 May 2020

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    * அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்

    15:50 (IST)29 May 2020

    வாரிசுகளாக தீபா, தீபக் அறிவிப்பு

    தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    2ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

    15:19 (IST)29 May 2020

    காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

    சென்னை மாநகர காவல்நிலையங்களின் குளியல் அறைகளில் விசாரணை கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.

    15:19 (IST)29 May 2020

    தாமாக முன்வந்து வழக்கு

    அம்பத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் கை முறிந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு

    * சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

    15:13 (IST)29 May 2020

    பறவைகளின் தாகம் தீர்க்கும் ஆட்சியர்

    சுட்டெரிக்கும் கோடைக்கால வெயிலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் உயிரினங்களுக்கு தகர டப்பாவை தண்ணீர் இருக்கும் பாத்திரமாக மாற்றி பறவைகளின் தாகம் தீர்த்து வருகிறார் நெல்லை மாவட்ட சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்.

    publive-image

    15:03 (IST)29 May 2020

    பொதுமக்கள் வழிபட அனுமதி

    புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர்

    நாராயணசாமி கடிதம்

    மின்துறை தனியார் மயமாக்கத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்காது - நாராயணசாமி

    14:43 (IST)29 May 2020

    எண்ணிக்கை 989 ஆக உயர்வு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது

    * பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 989 ஆக உயர்வு

    * ஒரே நாளில் 56 பேருக்கு புதிய பாதிப்பு

    14:42 (IST)29 May 2020

    எண்ணிக்கை 989 ஆக உயர்வு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது

    * பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 989 ஆக உயர்வு

    * ஒரே நாளில் 56 பேருக்கு புதிய பாதிப்பு

    14:25 (IST)29 May 2020

    48 நபர்களுக்கு கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    * மொத்த கொரோனா பாதிப்பு 352 ஆக உயர்வு

    14:18 (IST)29 May 2020

    8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    13:57 (IST)29 May 2020

    சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை

    கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை

    * சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ திட்டவட்டம்

    உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க கோரி வழக்கு

    * சி.எம்.டி.ஏ பதிலுக்கு பின் ஜூன் 5ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு

    13:50 (IST)29 May 2020

    தி.நகர் கடைகளை மூட உத்தரவு

    சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவில்லை என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை கடைகளை திறக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    13:11 (IST)29 May 2020

    10 தேர்வு நடத்தும் பணி தீவிரம்

    சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 75 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களே தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பு. 10ம் வகுப்பு பொது தேர்வு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    12:38 (IST)29 May 2020

    கேரளத்தில் கொரோனா சமூக பரவல் இல்லை

    கேரள மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, கேரளாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை. நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்நோய் பரவி வருகிறது என்று கூறியுள்ளார். 

    12:20 (IST)29 May 2020

    இந்திய சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காக்கிறது - ராகுல் குற்றச்சாட்டு

    இந்திய சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் அமைதி காக்கிறது என்றும், எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு உடனே, வெளிப்படைத் தன்மையுடன் கூற வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    12:10 (IST)29 May 2020

    முதல்வர் - ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டம்

    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் குறைக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் கூட சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவே உள்ளாது என்று முதல்வர் பேச்சு

    11:45 (IST)29 May 2020

    சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா?

    சென்னை தேர்வுத்துறை இயக்குநர் உதவியாளருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இயக்குநர் உஷாராணி உடனடியாக தன்னுடைய அலுவலகத்தை மாற்றினார். தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.

    11:36 (IST)29 May 2020

    டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    ஒரு டி.எஸ்.பி., ஒரு காவல் ஆய்வாளர், ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    11:00 (IST)29 May 2020

    கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 22 நபர்கள் உயிரிழப்பு

    ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர் மற்றும் ஐ.ஐ.டி. ஊழியர் ஒருவர் உயிரிழப்பு

    10:55 (IST)29 May 2020

    மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

    மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடையும் ஊரடங்கை தொடர்ந்து, பொது போக்குவரத்து தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    10:32 (IST)29 May 2020

    சென்னை 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-த்தை நெருங்கியது

    கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் மட்டும் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,324 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    10:11 (IST)29 May 2020

    ராஜ்யசபை உறுப்பினர் வீரேந்திர குமார் மறைவுக்கு மோடி இரங்கல்

    10:01 (IST)29 May 2020

    Covid19 in USA அமெரிக்காவில் தாண்டவமாடும் கொரோனா

    அமெரிக்க நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் 4.98 லட்சம் நபர்கள் இந்த நோயில் இருந்து குணம் அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கொரோனா நோயால் சுமார் 1 லட்சத்தி மூவாயிரத்து முன்னூற்று முப்பது நபர்கள் பலியாகியுள்ளனர்.

    09:59 (IST)29 May 2020

    கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

    சென்னையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    09:54 (IST)29 May 2020

    பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டிற்கு அதிவிரைவு ரயில்

    பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டிற்கு அதிவிரைவில் சென்று சேரும் ரயிலுக்கான சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ரயில் கேரளாவை அடைந்தது.

    09:52 (IST)29 May 2020

    தஞ்சையில் கொரோனா நிலவரம்

    தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 92 நபர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஏற்கனவே 74 நபர்கள் குணம் அடைந்திருந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 5 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் 92 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்றைய செய்திகள் ஹைலைட்ஸ் : புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ரயில் பிராயணம் மேற்கொண்டால் அவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பே அறிவிக்க முடியும் என்று திருமலை திருப்பதி கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    பொன்மகள் வந்தாள்

    நடிகர் சூர்யா தயாரிப்பில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று காலை அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

     

    Coronavirus Live Updates
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment