Covid-19 Cases Update : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.
श्रमिकों के लिये बड़ी राहत, आज के दिन लगभग 200 श्रमिक स्पेशल ट्रेन चल सकेंगी, और आगे चलकर ये संख्या बड़े पैमाने पर बढ़ पायेगी।
— Piyush Goyal (@PiyushGoyal) May 19, 2020
கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரலில், அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாயுடன், அத்தியாவசிய பொருட்களும்; சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கப்பட்டன.இம்மாதமும், ஜூன் மாதமும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அதை, செப்டம்பர் வரை நீட்டிப்பது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நான்காம் கட்ட ஊரடங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குறைத்து விட வேண்டாம்; விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
புதுச்சேரியில் இருந்து கடலூர், நாகை வழியாக காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பேருந்துகள் தமிழக பகுதிகளை கடந்து செல்ல இருப்பதால் கடலூர், நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் நிபந்தனைகளுடன் இயக்க ஒப்புதல் அளித்ததால் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட ஏசி பெட்டி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேல்ம், இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும். இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விவசாயிகளிடம் இருந்து நாளை முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்த 2 நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.
ஆம்பன் புயல் காரணமாக வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் எல்லாம் புயல் நகரும் பகுதிக்கு உறிஞ்சப்படுவதால் தமிழகத்தில் வெயில் கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை மீனம்பாக்கம் மற்றும் மதுரையில் வெயில் 106.5 டிகிரி பாரன்ஹீட் கொளுத்தியது. சென்னை நுங்கம்பாக்கம், வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் 106.3 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெயில் பதிவாகியுள்ளது.
அதிமுகவில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக வசதிக்காக சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு பிரிக்கப்பட்டுள்ளதக அதிமுக தெரிவித்துள்ளது. சென்னை - அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் - கோவை சத்யன், கோவை - ஜி.ராமச்சந்திரன், மதுரை - ராஜ் சத்யன் ஆகியோர் ஐ.டி. செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இன்று (19 ஆம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
இணையதள முகவரி: https://jeemain.nta.nic.in
கொரோனா பாதிப்பில் பூஜ்ஜிய நிலையை எட்டியதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேரும், குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து திருவாரூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து நேரடியாக பச்சை மண்டலத்திற்கு ஒரு சில தினங்களில் மாறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற இடங்களில் 50 % பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு அனுமதி.
வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு அரங்கம், மைதானங்களை திறக்கவும், சிவப்பு மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க, கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
சிவப்பு மண்டலத்தில் உள்ள பல் மருத்துவமனைகளில் அவசர பல் சிகிச்சை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Ministry of Health and Family Welfare issues guidelines for Dental clinics functioning in #Lockdown4. pic.twitter.com/NSf4AzGxfD
— ANI (@ANI) May 19, 2020
ஜூன் 15க்குள் நிலைமை சீராகி விடுமா..?
தன்னிச்சையாக அறிவித்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, எதிர்ப்பு பலமானதும் தள்ளிவைத்தார்கள்
மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை
- மு.க.ஸ்டாலின்
#CoronaVirus காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட #10thExam-ஐ எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான்.
அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை!
— M.K.Stalin (@mkstalin) May 19, 2020
நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. டெல்லியில் ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா, கேப் உள்ளிட்டவைகள் இயங்கலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். டெல்லி அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ’ஊரடங்கில் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு தளர்வு அளிப்பது டெல்லிவாசிகளுக்கு மரணதண்டனைக்கான அழைப்பானை கொடுப்பது போன்றது. இதுகுறித்து டெல்லி அரசு மீண்டும் சிந்திக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்ட சூழலிலும் ஊழியர்களுக்குப் பிடித்தமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும் என்று மார்ச் மாதம் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது
10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி. ஆனால் தனிமனித விலகளுடன்கூடிய சுகாதாரமான வாகனம், வகுப்பறை உள்ளிட்ட கொரோனா பரவலுக்கு எதிரான பெற்றோர்-ஆசிரியர்-மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டால்தான் அரசின் நடவடிக்கை முழுமையடையும்.
- உதயநிதி ஸ்டாலின்
10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி. ஆனால் தனிமனித விலகளுடன்கூடிய சுகாதாரமான வாகனம், வகுப்பறை உள்ளிட்ட கொரோனா பரவலுக்கு எதிரான பெற்றோர்-ஆசிரியர்-மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டால்தான் அரசின் நடவடிக்கை முழுமையடையும். @EzhilarasanCvmp
— Udhay (@Udhaystalin) May 19, 2020
கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்து பேருந்து சேவை 55 நாட்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. ஒரு பேருந்தில் அதிகபட்சம் 30 பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நேற்று இயக்கப்பட்ட பேருந்துகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்தனர்.
இன்றும் பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அலுவலகம் செல்லும் பலர் பொதுப் போக்குவரத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
"ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை"
- புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்
கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம்
பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இரு தரப்பினர் பயங்கர மோதிக்கொண்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 10 பேர் படுகாயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார. முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,92,981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,65,241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,03,777 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறியதற்காக ரூ.6.39 கோடி அபராதம் விதிப்பு வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பிலான பேட்ட படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், உத்தரபிரதேச வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக நவாசுதீனின் தாய்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உபி அரசின் அனுமதியுடன் மும்பையிலிருந்து உ.பி மாநிலம் புதானாவுக்கு நவாசுதீன் குடும்பத்துடன் வந்தார். அங்கு அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூரில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கஞ்சா வியாபாரி மகேஸ்வரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Elusive offender Maheswari arrested with 6 of her associates, by ins Kavitha,SI Ranjeeth team-#vaniyambadi pol https://t.co/Z4iwdv5zEJ 20,14,000& 21.7 kg #ganja seized
kudos to the team💐#கஞ்சா வியாபாரி மகேஸ்வரி கைது செய்யப்பட்டார்@vijaypnpa_ips#cannabis#tnpolice pic.twitter.com/dJnUUPPw5O
— Tirupathur Dist Police (@sp_tirupathur) May 19, 2020
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும், 56 வயது ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு கொரோனா இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனவே உயிரிழப்பிற்கு பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்திய தமிழர்கள், கையில் பணமின்றி பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களை தமிழகம் மீட்டுவரவேண்டியது அரசின் கடமை. 3/3
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 19, 2020
போக்குவரத்து இல்லாத சூழலில் தமிழகம் திரும்ப அவர்கள் படும் துன்பங்களை முதல்வர் அறிவாரா? மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் மக்களை மீட்டு வந்து, பரிசோதனைகள் செய்தல் தனிமைப்படுத்தல் என்று ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றனர். 2/3
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 19, 2020
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் விமானங்களில், நேரடியாக அதிக விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் விமானங்களில், நேரடியாக அதிக விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. முதல்வரும் தமிழகத்திற்கு விமானங்கள் வருவதை விரும்பவில்லை. மற்ற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் தமிழர்கள் பயணித்து, 1/3
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 19, 2020
வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர், தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரு லட்சம் மக்களில் 7.1 நபர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்களில் 431 பேரும் இங்கிலாந்தில் 361 பேரும் ரஷ்யாவில் 195 பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.அதேபோல் ஸ்பெயினில் 494; இத்தாலியில் 372; பிரேசிலில் 104; ஜெர்மனியில் 210; துருக்கியில் 180; பிரான்சில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights