Advertisment

200 ரயில்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கம்: பியூஸ் கோயல் அறிவிப்பு

ஜூன் 1-ம் தேதி முதல் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
train services begins from june 1st

train services begins from june 1st

Covid-19 Cases Update : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

Advertisment

கொரோனா பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப்ரலில், அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாயுடன், அத்தியாவசிய பொருட்களும்; சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கப்பட்டன.இம்மாதமும், ஜூன் மாதமும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அதை, செப்டம்பர் வரை நீட்டிப்பது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

நான்காம் கட்ட ஊரடங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குறைத்து விட வேண்டாம்; விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:32 (IST)19 May 2020

    புதுச்சேரியில் இருந்து கடலூர், நாகை வழியாக காரைக்காலுக்கு பேருந்துகள் இயக்க அனுமதி

    புதுச்சேரியில் இருந்து கடலூர், நாகை வழியாக காரைக்காலுக்கு பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பேருந்துகள் தமிழக பகுதிகளை கடந்து செல்ல இருப்பதால் கடலூர், நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் நிபந்தனைகளுடன் இயக்க ஒப்புதல் அளித்ததால் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது.

    21:30 (IST)19 May 2020

    ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

    ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் குளிரூட்டப்பட்ட ஏசி பெட்டி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேல்ம், இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும். இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படியே இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    20:47 (IST)19 May 2020

    புதுச்சேரி விவசாயிகளிடம் நாளை முதல் நேரடி நெல் கொள்முதல்

    புதுச்சேரியில் விவசாயிகளிடம் இருந்து நாளை முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்த 2 நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

    20:21 (IST)19 May 2020

    சென்னையில் மட்டும் இன்றும் மேலும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    சென்னையில் மட்டும் இன்று மேலும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக உயர்ந்துள்ளது.

    19:38 (IST)19 May 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.

    19:07 (IST)19 May 2020

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை வரவேற்கிறேன் - அமைச்சர் பாண்டியராஜன்

    அமைச்சர் பாண்டியராஜன்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை நான் வரவேற்கிறேன். தனியார்மயமாக்கல் மூலம் முதலீடு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    18:50 (IST)19 May 2020

    ஆம்பன் புயலால் சென்னை, மதுரையில் வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது

    ஆம்பன் புயல் காரணமாக வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் எல்லாம் புயல் நகரும் பகுதிக்கு உறிஞ்சப்படுவதால் தமிழகத்தில் வெயில் கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை மீனம்பாக்கம் மற்றும் மதுரையில் வெயில் 106.5 டிகிரி பாரன்ஹீட் கொளுத்தியது. சென்னை நுங்கம்பாக்கம், வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் 106.3 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெயில் பதிவாகியுள்ளது.

    18:38 (IST)19 May 2020

    அதிமுகவின் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து - தலைமைக் கழகம் அறிவிப்பு

    அதிமுகவில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18:35 (IST)19 May 2020

    கேரளாவில் கொரோனா தொற்று இருப்பதை மறைத்த 3 பேர் மீது வழக்குப் பதிவு

    கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மறைத்ததற்காக அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    18:33 (IST)19 May 2020

    அதிமுக ஐடி விங்; 4 மண்டலங்களாக பிரித்து செயலாளர்கள் அறிவிப்பு

    நிர்வாக வசதிக்காக சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு பிரிக்கப்பட்டுள்ளதக அதிமுக தெரிவித்துள்ளது. சென்னை - அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் - கோவை சத்யன், கோவை - ஜி.ராமச்சந்திரன், மதுரை - ராஜ் சத்யன் ஆகியோர் ஐ.டி. செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    18:31 (IST)19 May 2020

    கொரோனா பாதிப்பில் இருந்து 38.73% பேர் குணமடைந்தனர் - மத்திய அரசு தகவல்

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என்றும் நோய் பாதித்த 38.73% பேர் மீண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    18:28 (IST)19 May 2020

    ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

    ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இன்று (19 ஆம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

    இணையதள முகவரி: https://jeemain.nta.nic.in

    18:26 (IST)19 May 2020

    பட்டியலின மக்களை விமர்சித்ததாக பாஜக அளித்த புகாரின் பேரில் தயாநிதிமாறன் மீது வழக்குப்பதிவு

    பட்டியலின மக்களை விமர்சித்ததாக கோவையில் பாஜக அளித்த புகாரை அடுத்து, தயாநிதி மாறன் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    17:53 (IST)19 May 2020

    அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து

    அதிமுகவில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து

    * அதிமுக தலைமை அறிவிப்பு

    * ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும்

    17:42 (IST)19 May 2020

    பச்சை மண்டலமாக மாறும் திருவாரூர் - கொரோனா பாதிப்பில் பூஜ்ஜியம் நிலை

    கொரோனா பாதிப்பில் பூஜ்ஜிய நிலையை எட்டியதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேரும், குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து திருவாரூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து நேரடியாக பச்சை மண்டலத்திற்கு ஒரு சில தினங்களில் மாறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17:26 (IST)19 May 2020

    ஹோமியோபதி மருந்து

    கொரோனா தொற்றுக்கு நோய் எதிர்ப்பு மருந்தாக "ஆர்செனிகம் ஆல்பம் - 30" என்ற ஹோமியோபதி மருந்து பயன்படுத்தப்படுகிறது - தமிழக அரசு

    மத்திய ஆயுஷ் அமைச்சக பரிந்துரையை ஏற்று செயல்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

    17:26 (IST)19 May 2020

    மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

    ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணமின்றி மின்கட்டணத்தை செலுத்தலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

    ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு - மின்சார வாரியம்

    16:49 (IST)19 May 2020

    50 % பயணிகளுடன் பேருந்து

    மகாராஷ்டிராவில் சிவப்பு மண்டலத்தை தவிர மற்ற இடங்களில் 50 % பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு அனுமதி.

    வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு அரங்கம், மைதானங்களை திறக்கவும், சிவப்பு மண்டலத்தில் தொழிற்சாலைகள் இயங்க, கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

    16:34 (IST)19 May 2020

    அவசர பல் சிகிச்சை

    சிவப்பு மண்டலத்தில் உள்ள பல் மருத்துவமனைகளில் அவசர பல் சிகிச்சை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    16:06 (IST)19 May 2020

    நிலைமை சீராகி விடுமா..?

    ஜூன் 15க்குள் நிலைமை சீராகி விடுமா..?

    தன்னிச்சையாக அறிவித்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, எதிர்ப்பு பலமானதும் தள்ளிவைத்தார்கள்

    மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை

    - மு.க.ஸ்டாலின்

    16:06 (IST)19 May 2020

    5 நட்சத்திர மதிப்பீடு

    மைசூர், சூரத், நவி மும்பை உள்ளிட்ட 6 நகரங்கள் குப்பை இல்லாத நகரங்களாக அறிவிப்பு: 5 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது மத்திய அரசு

    15:37 (IST)19 May 2020

    தமிழ்நாடு இல்லம் மூடல்

    ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது. கணக்காளரான அந்த நபருக்கு கொரோனா உறுதியானதால் மற்ற ஊழியர்களையும் தனிமைப்படுத்தி பரிசோதிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

    15:36 (IST)19 May 2020

    முதல் முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்

    'சென்னையில் 100 டிகிரியை தாண்டியது வெயில்'

    2020ஆம் ஆண்டில் சென்னையில் முதல் முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில்

    * விலகிச் சென்ற #Amphan புயலால் சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது

    15:32 (IST)19 May 2020

    ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும் - அரவிந்த் கெஜ்ரிவால் முடிவுக்கு கவுதம் கம்பீர் அதிருப்தி

    நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. டெல்லியில் ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா, கேப் உள்ளிட்டவைகள் இயங்கலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். டெல்லி அரசின் இந்த முடிவுக்கு பா.ஜ.க எம்.பியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ’ஊரடங்கில் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு தளர்வு அளிப்பது டெல்லிவாசிகளுக்கு மரணதண்டனைக்கான அழைப்பானை கொடுப்பது போன்றது. இதுகுறித்து டெல்லி அரசு மீண்டும் சிந்திக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    15:06 (IST)19 May 2020

    உத்தரவை திரும்பப் பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம்

    கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்ட சூழலிலும் ஊழியர்களுக்குப் பிடித்தமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும் என்று மார்ச் மாதம் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது

    14:30 (IST)19 May 2020

    15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி

    10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி. ஆனால் தனிமனித விலகளுடன்கூடிய சுகாதாரமான வாகனம், வகுப்பறை உள்ளிட்ட கொரோனா பரவலுக்கு எதிரான பெற்றோர்-ஆசிரியர்-மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டால்தான் அரசின் நடவடிக்கை முழுமையடையும்.

    - உதயநிதி ஸ்டாலின் 

    14:22 (IST)19 May 2020

    தமிழக அரசுக்கு உத்தரவு

    ஊரடங்கில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்

    * பொதுமக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

    * ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    14:16 (IST)19 May 2020

    கர்நாடகாவில் மீண்டும் பேருந்து சேவைகள் தொடக்கம்

    கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்து பேருந்து சேவை 55 நாட்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. ஒரு பேருந்தில் அதிகபட்சம் 30 பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நேற்று இயக்கப்பட்ட பேருந்துகளில் மிகவும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்தனர்.

    இன்றும் பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அலுவலகம் செல்லும் பலர் பொதுப் போக்குவரத்தை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

    14:14 (IST)19 May 2020

    அனைத்து மாநில அரசுகளும் கண்டிக்க வேண்டும்

    கொரோனா பாதிப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி மாநில உரிமைகளில் மத்திய அரசு தொடர்ந்து தலையிடுகிறது

    மத்திய அரசின் தவறான நடவடிக்கையை அனைத்து மாநில அரசுகளும் கண்டிக்க வேண்டும்

    - கனிமொழி எம்.பி.

    13:55 (IST)19 May 2020

    தமிழக அரசு முன்னோடி

    "கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது"

    - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பாராட்டு

    ஐசிஎம்ஆர் மூத்த அதிகாரிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து பாராட்டு

    13:41 (IST)19 May 2020

    இலவச உணவு

    'பொதுமுடக்கம் முடியும் வரை இலவச உணவு'

    சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே31 வரை இலவச உணவு தொடர்ந்து வழங்கப்படும்

    - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    மீண்டும் கட்டணம் வசூலிப்பு என செய்தி வெளியான நிலையில் அரசு நடவடிக்கை

    13:40 (IST)19 May 2020

    அதிமுக அரசு விட்டுத்தரக்கூடாது

    கொரோனா கடன் வாங்க இலவச மின்சார திட்டத்தை அதிமுக அரசு விட்டுத்தரக்கூடாது

    மத்திய அரசின் நிபந்தனையை அதிமுக அரசு எந்த சூழ்நிலையிலும் ஒப்புக்கொள்ளக்கூடாது

    பாஜக ஆட்சியை பகைத்துக்கொண்டால் ஆட்சி, அதிகாரத்தை கேட்பார்களோ என பயப்படக்கூடாது

    - மு.க.ஸ்டாலின்

    13:40 (IST)19 May 2020

    8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

    - சென்னை வானிலை மையம்

    13:39 (IST)19 May 2020

    அலுவலகத்தை மூட வேண்டியதில்லை

    "ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை"

    - புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்

    கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம்

    பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும்

    13:26 (IST)19 May 2020

    விருத்தாச்சலத்தில் இரு தரப்பினர் பயங்கர மோதல்

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இரு தரப்பினர் பயங்கர மோதிக்கொண்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 10 பேர் படுகாயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    13:08 (IST)19 May 2020

    1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1272 ஆக அதிகரி்ததுள்ளது. அதற்கடுத்த நிலையில், கோடம்பாக்கம் (1077) உள்ளது.

    12:15 (IST)19 May 2020

    தணிகாசலம் மீது மேலும் இரண்டு வழக்கு

    போலி மருத்துவர் தணிகாசலம் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

    11:56 (IST)19 May 2020

    ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

    தமிழகத்தில் ஜூன் 1 முதல் 10 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

    publive-image

    11:37 (IST)19 May 2020

    புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல்

    திருவள்ளூரில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார. முன்னதாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    11:20 (IST)19 May 2020

    சென்னையில் கொரோனா பாதிப்பு

    சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

    publive-image

    11:16 (IST)19 May 2020

    மகாராஷ்டிராவில் புதிதாக 55 போலீசாருக்கு கொரோனா

    மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 1,328ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    10:54 (IST)19 May 2020

    4,92,981 பேர் கைது

    தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,92,981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  4,65,241 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 4,03,777 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  ஊரடங்கு விதிகளை மீறியதற்காக ரூ.6.39 கோடி அபராதம் விதிப்பு வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    10:31 (IST)19 May 2020

    ரஜினி பட நடிகர் கொரோனா பாதிப்பால் தனிமை

    ரஜினிகாந்த் நடிப்பிலான பேட்ட படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், உத்தரபிரதேச வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக நவாசுதீனின் தாய்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உபி அரசின் அனுமதியுடன் மும்பையிலிருந்து உ.பி மாநிலம்  புதானாவுக்கு நவாசுதீன் குடும்பத்துடன் வந்தார். அங்கு அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    publive-image

    10:18 (IST)19 May 2020

    திருப்பத்தூரில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

    திருப்பத்தூரில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கஞ்சா வியாபாரி மகேஸ்வரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

    10:04 (IST)19 May 2020

    கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் மரணம்

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும், 56 வயது ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு கொரோனா இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனவே உயிரிழப்பிற்கு பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    09:57 (IST)19 May 2020

    கனிமொழி டுவிட் -3

    09:57 (IST)19 May 2020

    கனிமொழி - டுவிட் 2

    09:56 (IST)19 May 2020

    வெளிநாடுகளில் இந்தியர்கள் தவிப்பு - தமிழக அரசு மீது கனிமொழி தாக்கு

    வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் விமானங்களில், நேரடியாக அதிக விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

    09:35 (IST)19 May 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு

    கொரோனா வைரசின் தாக்கம் சர்வதேச நாடுகளில் பெரும் உயிர்ச்சேதங்களை விளைவித்து வருகிறது.

    அமெரிக்கா  - 91981

    இங்கிலாந்து - 34796

    இத்தாலி - 32007

    பிரான்ஸ் - 28239

    ஸ்பெயின் - 27709

    பிரேசில் - 16853

    ஜெர்மனி - 8123

    துருக்கி - 4171

    09:20 (IST)19 May 2020

    1,01,139 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. 39,184 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 3,163 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அழைத்து வர, கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன' என,

    வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர், தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஒரு லட்சம் மக்களில் 7.1 நபர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்களில் 431 பேரும் இங்கிலாந்தில் 361 பேரும் ரஷ்யாவில் 195 பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.அதேபோல் ஸ்பெயினில் 494; இத்தாலியில் 372; பிரேசிலில் 104; ஜெர்மனியில் 210; துருக்கியில் 180; பிரான்சில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Tamil Nadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment