Covid-19 Cases Update:'கொரோனா' குறித்த விழிப்புணர்வால், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், அரசு கேட்டுக் கொண்டபடி, வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். கிராமப்புறங்களில், எல்லைகளை மூடி, வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டோரா போட்டும், 'மக்கள் வெளியில் வர வேண்டாம்' என, எச்சரிக்கின்றனர். தேவையற்ற வதந்திகளால் ஏற்படும் பீதியை அகற்றும் விதமாக, இளைஞர்கள் மற்றும் போலீசார் இணைந்து, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் அமைத்துள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா தடுப்பில், மாநிலம் முழுதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து, நடவடிக்கைகள் எடுக்க, அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, முதல்வர் கூட்ட வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்த செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவமனைகளை தயார்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் அரசு சார்பில் 15 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளனர். அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூக பரவலை தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது - விஜயபாஸ்கர்
தீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்- தமிழக முதல்வர்.
பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு, துணை ராணுவப்படையினர் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கி உள்ளனர். 116 கோடி ரூபாய்க்கான காசோலையை துணை ராணுவப் படை அதிகாரிகள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர். அதற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கொரோனா தொடர்பான பிரதமரின் நிவாரண நிதிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகை ஊழியர்களும் ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ள நிலையில், மக்கள் பிரதமரின் கொரோன நிவாரண நிதிக்கு தாராளமாக உதவ முன்வர வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில், மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203-ஐ தொட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், கர்நாடகாவிலும் ஏழு பேர் புதிதாக பாதிக்க, எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
பிறமாநில தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதியும் வழங்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மேலும், ஊழியர் சம்பள பட்டியல் தயாரிக்க கல்வி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 3 நாள் சிறப்பு அனுமதி. மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறலாம் - முதல்வர் பழனிசாமி
டிஸ்னிலேண்ட் மற்றும் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ஆகியவை இப்போதைக்கு பொதுமக்களுக்கான கதவுகளைத் திறக்காது. கலிஃபோர்னியா மற்றும் புளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த இரண்டு தீம் பார்க்குகளும் அடுத்த வாரம் புதன்கிழமை திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் 27,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் உலகளவில் 600,000 ஐத் தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் நீடிப்பதால், தீம் பார்க்குகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் போது, கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்துவதாகவும், இதனால், பொருட்கள் குறித்த நேரத்திற்கு கொண்டுசெல்ல முடியவில்லை என லாரி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டினர். இப்பிரச்சினைக்கு தீர்வு காணம் வகையில், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் வாகனங்களுக்கு, சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வருவாயத்துறை அதிகாரிகள் அனுமதி அட்டை வழங்கினர். பிற மாநில போலீசார் அறிந்துகொள்ளும் வகையில்,அந்த அனுமதி பாஸ் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் கொரோனா வைரஸுக்கு 4 பேரும், காசியாபாத்தில் 2 பேரும் பாதிப்பு
4 fresh cases in Noida and 2 in Ghaziabad.
Number of cases till Sunday afternoon
Noida- 31 (highest in UP)
Ghaziabad- 7#CoronaUpdate@IndianExpress— Amil Bhatnagar (@AmilwithanL) March 29, 2020
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணி நிவாரணத்திற்காக,திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், தனது ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தயாநிதிமாறன் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நிலையில், தற்போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி, #கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹ 1 கோடி வழங்கியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.#DMKagainstCorona #Covid_19india #Corona pic.twitter.com/ZpGjYqQ8zo
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) March 29, 2020
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த போரூரைச் சேர்ந்த கோரோன வைரஸ் தொற்று நோயாளிகள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் நோயில் இருந்து குணமானதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனையில் இரண்டு முறை நெகட்டிவ் என்று முடிவு வந்தது. அதனால், அவர்கள், 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். இந்த நோயாளிகள் குணமாவதற்கு அக்கறையுடன் செயல்பட்ட டீன் மற்றும் குழுவினரை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
#update: 2 Pts US return admitted at #RGGH for #Covid_19 ve, from Porur is discharged from hospital today.They have recovered from d illness & tested negative twice.They will be home quarantined for next 14 days. I appreciate the Dean & team who took care of d Pts. @MoHFW_INDIA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020
நகரங்களில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுபப்டுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகரங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து செல்வதையும் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
புலம்பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களை வெளியேற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
புலம்பெயர்ந்து வந்து பணியாற்று தோழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தரவு
நகரங்களில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுபப்டுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகரங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து செல்வதையும் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
புலம்பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களை வெளியேற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
புலம்பெயர்ந்து வந்து பணியாற்று தோழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசகால பயணத்துக்கு அனுமதி பெற காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டும் மின்னஞ்சல் மூலமும் 5000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை அவசரக கால பயணத்துக்கு 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட் அடிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளான அரும்பாக்கம், சைதாப்பேட்டை, புரசைவாக்கம், விருகம்பாக்கம், மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவும், எப்போதும் தங்கள் வீடுகளுக்குள் முகமூடியை அணிய வேண்டும் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 300% கவனமாக இருக்க வேண்டும், ஒருபோதும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது. தங்களுக்கு வேண்டிய பொருட்களை பெற்றுக்கொள்ள அவர்களே ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். வீட்டின் வெளியே ஒரு கூடையை வைத்து பொருட்களை அதன் மூலம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக பிரதமர் மோடி, மான் கி பாத் நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டுள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியின் வாயிலாக, மக்களிடம் உரையாற்றி வருகின்றார். அந்த வகையில், இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்த இத்தாலியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனா பலி 2000 ஐ கடந்தது. நேற்று ஒரே நாளில் 19,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் 1,23,000 ஐ கடந்தது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights