Covid-19 Cases Update : தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.கொரோனாவால், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், ஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூடுதல் செயலர், திருப்புகழ் தலைமையில், ஐந்து பேர் குழுவினர், சென்னை வந்தனர். இக்குழுவினர், தலைமைச் செயலர், சண்முகத்தை சந்தித்தனர். வருவாய் துறை செயலர், அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர். ஆழ்வார்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். சென்னை, மாநகராட்சி அலுவலகத்தில், மத்திய குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கமிஷனர், பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், பங்கேற்றனர்.சென்னையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம்; கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்; எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசித்தனர்.
தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், போலீசார் மற்றும் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள், நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள, அரசு பரிந்துரை செய்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஜிங்க் மருந்து - 150 மி.கி., அளவிற்கு, தினமும் ஒன்று என்ற வீதம், 10 நாட்கள் உட்கொள்ள வேண்டும். விட்டமின் - சி அல்லது அனைத்து வகையான விட்டமின் மாத்திரை - 500 மி.கி., அளவில், தினமும், 10 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுர குடிநீர் பருக வேண்டும். நிலவேம்பு மற்றும் கபசுர பொடி, 5 கிராம் அளவில் எடுத்து, 240 மில்லி தண்ணீரில் காய்ச்சி, அது, 60 மில்லியாக குறையும் வரும் வரை, நன்கு கொதிக்க வைக்க வேண்டும் . இந்த கஷாயத்தை, சாப்பாட்டுக்கு முன், பெரியவர்கள், 60 மில்லி, குழந்தைகள், 30 மில்லி அளவில், எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரைச் சேர்ந்த சேர்ந்தவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு இன்று சென்னையில் நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் மீண்டும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமானது.
தீவிரமாகப் பரிசோதனை செய்வதுதான் கரோனா வைரஸைத் தோற்கடிக்கும் ஆயுதம். இப்போது இந்தியாவில் நாள்தோறும் 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செயயப்படுகின்றன. இதை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும்.
மக்களுக்கு அதிகமாக கரோனா பரிசோதனை நடத்துவதுதான் வைரஸைத் தடுக்கும் வழி என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நாள்தோறும் நாம் இப்போது செய்யும் 40 ஆயிரம் பரிசோதனைகளை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் இருப்பு இருக்கிறது. பிரதமர் மோடி வேகமாகச் செயல்பட்டு , தடைகளைக் களைந்து பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும்.
- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
மே 16 ஆம் தேதிக்குப்பிறகு கொரோனா நோய்த்தொற்று இல்லாமல் போய்விடும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் என்பவர் அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஐசிஎம்ஆர் இந்த மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை எனவே நிதி ஆயோக்கின் அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவேண்டும்.
- எம்.பி.ரவிக்குமார்
கொரோனா அப்டேட்
மே 16 ஆம் தேதிக்குப்பிறகு கொரோனா நோய்த்தொற்று இல்லாமல் போய்விடும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் என்பவர் அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஐசிஎம்ஆர் இந்த மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை எனவே நிதி ஆயோக்கின் அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவேண்டும். pic.twitter.com/6DSdGiSuXB
— Dr Ravikumar M P (@WriterRavikumar) April 26, 2020
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஆய்வு பணியை மேற்கொண்ட ஆட்சியர் அன்புச்செல்வன், அந்த பகுதியில் தூய்மை பணிகள் சரிவர செய்யப்படாததை கண்டறிந்தார். இதையடுத்து, அலுவலர் சக்திவேலை பணி இடைநீக்கம் செய்ததோடு, பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தாத யாராக இருந்தாலும் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் ஸிங்க் (zinc) மாத்திரைகள் வழங்கப்படும்
* ஸிங்க் (zinc)மாத்திரைகள், மல்டி வைட்டமின் மாத்திரைகள் நாளைமுதல் 10 நாட்களுக்கு வழங்கப்படும்
- தமிழக அரசு
சென்னையில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவையின்றி சாலையில் சுற்றித் திரிபவர்களைப் பிடித்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை தமிழகம் முழுவதும், 3 லட்சத்து 6 ஆயிரத்து 339 வழக்குகள் தொற்று நோய் தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மூன்று லட்சத்து 24 ஆயிரத்து 269 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மூன்று கோடியே 27 லட்சத்து 33 ஆயிரத்து 714 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாமென அஜித் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டதாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் ட்வீட் செய்துள்ளார்.
Dear #Thala Fans
Got a call from #Ajith sir’s office requesting not to hav any common DP for his bday and celebrate it during #Corona It was his personal request! As a fan and as a fellow actor & human would like to respect his words! @Thalafansml @ThalaFansClub @SureshChandraa— Aadhav Kannadhasan (@aadhavkk) April 26, 2020
சென்னை மயிலாப்பூர் - 4.8 செமீ, புரசைவாக்கம் - 3.8செமீ, கிண்டி - 3.5 செமீ மழை பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதம்
ராணிப்பேட்டை : அரக்கோணத்தில் மின்னல் தாக்கி 11ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
தமிழகத்தில் 104 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி, அதன் விளைவாக வாங்கி வந்த கரோனா வைரஸ் நோயை குழந்தைகளிடம் பரப்பியதன் மூலம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச்சலனம் கார்ணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் - 4.8 செமீ, புரசைவாக்கம் - 3.8செமீ, கிண்டி - 3.5 செமீ மழை பதிவாகியுள்ளது
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், பிரதமர் மோடி மனதின் குரல் ( மான் கி பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று ஒலிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் என்று மக்களிடையே அவர் யோசனைகளை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா குறித்த முக்கிய விழிப்புணர்வு மற்றும் கருத்துக்களை அவர் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது, கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை. பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை முழுவதையும் அரசே ஏற்கும் . வியாபாரிகள் செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு. கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நேரத்தில் தேவையில்லாத சர்ச்சையை ஸ்டாலின் கிளறி உள்ளதாக துறை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 15-வது நிதிக்குழுவின் சாதக பாதகங்கள் குறித்து நிதிநிலை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரூ.4,025 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்க நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்திற்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தை முழுமையாக அதிமுக அரசு பெற்றுத் தரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 'அவசரப்பட வேண்டாம்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தும், பல்வேறு மாகாணங்களில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights