Advertisment

Corona Latest Updates: தமிழகத்தில் கொரோனாவுக்கு முதல் பலி: மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்

Coronavirus Latest LIVE Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

Covid-19 Cases Update: கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி மதுரையில் நிகழ்ந்துள்ளது. மதுரை அ்ண்ணா நகர் பகுதியில் தொற்று ஏற்பட்டிருந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

Advertisment

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லி தொற்றான 'கொரோனா வைரஸ்' உலகம் முழுவதும் ஆட்டிப்படைகிறது. 195 நாடுகளில் பரவிய வைரசால், இதுவரை 3,78,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,512 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் குறித்து பயம் மக்களிடையே பரவினாலும், கட்டுப்பாடுகளாலும், தனிமைப்படுத்தலாலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து வருகின்றனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக ஒரு அறிகுறியை கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    07:18 (IST)25 Mar 2020

    தமிழகத்தில் கொரோனாவுக்கு முதல் பலி

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி மதுரையில் நிகழ்ந்துள்ளது. மதுரை அ்ண்ணா நகர் பகுதியில் தொற்று ஏற்பட்டிருந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

    22:17 (IST)24 Mar 2020

    Corona Latest Updates: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18-ஆக உயர்வு

    நியூசிலாந்து, லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் 3 பேருக்கு கொரோனா இருக்கும் தகவலை டுவிட்டரில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    19:42 (IST)24 Mar 2020

    சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல செயல்படும் - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசிய பணிகள், உணவுப் பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை என்று தமிழக அரசு அறிவித்ததன் பேரில் சென்னை கோயம்பேசு காய் கனி அங்காடி வழக்கம் போல செயல்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    18:46 (IST)24 Mar 2020

    144 தடை உத்தரவை மீறினால் ஐபிசி படி நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல்துறை அறிவிப்பு

    தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது

    18:42 (IST)24 Mar 2020

    பார்சல் வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி

    ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்

    * ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தடை. பார்சல் வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி

    * உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஊபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட தடை

    18:42 (IST)24 Mar 2020

    இறைச்சி, மீன் கடைகள் செயல்பட அனுமதி

    பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி

    * ரிசர்வ் வங்கி வரையறைக்கு உட்பட்டு வங்கிகள், ஏ.டி.எம்.-கள் செயல்படும்

    * பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் அலுவலகங்கள் செயல்பட எந்த தடையும் இல்லை

    18:42 (IST)24 Mar 2020

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 500 ஐ தாண்டியது

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.

    18:41 (IST)24 Mar 2020

    மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் இயங்கும்

    டைகளுக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்

    * ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்று கூட தடை

    * மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவில் இருந்து விலக்கு

    18:41 (IST)24 Mar 2020

    மருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதி

    மருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதி

    * மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம்

    * அத்தியாவசிய காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே செல்ல தடை

    18:41 (IST)24 Mar 2020

    அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி

    ஆம்புலன்ஸ், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி

    கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைப்பு

    ஆசிரியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுரை

    18:14 (IST)24 Mar 2020

    கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டியது

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 519ஆக அதிகரிப்பு.

    18:09 (IST)24 Mar 2020

    144 தடை உத்தரவு - எச்சரிக்கும் காவல்துறை

    அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் மூடல்

    கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் மூடல்.

    சாலையில் கூட்டமாக யாரும் நிற்கக் கூடாது, அனைவரும் வீட்டிற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

    18:07 (IST)24 Mar 2020

    144 தடை உத்தரவு அமல்

    தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடத் தடை.

    18:00 (IST)24 Mar 2020

    ஒலிம்பிக்ஸ் ஒத்திவைப்பு

    டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பரிந்துரையை ஏற்றது சர்வதேச ஒலிம்பிக் சங்கம்.

    17:40 (IST)24 Mar 2020

    குடிநீர் வழங்க ஏற்பாடு

    தடை காலத்திலும் பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் வாரியம் சார்பாக குடிநீர் வழங்க ஏற்பாடு

    அனைத்து பகுதிகளிலும் குறைபாடு இன்றி உடனுக்கு உடன் குடிநீர் வழங்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி செய்வார்கள்

    -தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவிப்பு

    17:16 (IST)24 Mar 2020

    ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள்

    புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்

    இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் - தனியார் நிறுவனம்

    17:16 (IST)24 Mar 2020

    ஒரு மாத ஊதியம்...

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு மாத ஊதியத்தை அளித்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

    17:16 (IST)24 Mar 2020

    மருத்துவர்களை வீட்டை காலி செய்ய நெருக்கடி

    வாடகைக்கு இருக்கும் மருத்துவர்களை வீட்டை காலி செய்ய நெருக்கடி

    * உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உள்துறை அமைச்சரிடம் மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

    17:11 (IST)24 Mar 2020

    அனைவரும் தேர்ச்சி - அரசு அறிவிப்பு

    குஜராத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவிப்பு

    17:10 (IST)24 Mar 2020

    சிறப்பு தற்செயல் விடுப்பு

    சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

    16:44 (IST)24 Mar 2020

    கடுமையான கட்டுப்பாடுகள்...

    இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வரவில்லை 144 தடை உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக சில கடுமையான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு

    தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது

    16:43 (IST)24 Mar 2020

    உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,138ஆக அதிகரிப்பு

    உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,138ஆக அதிகரிப்பு

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்.

    16:31 (IST)24 Mar 2020

    முகக்கவசங்கள், மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்

    மருத்துவமனைகள் தங்களது பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்.

    செயற்கை சுவாச கருவிகள், முகக்கவசங்கள், மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    கொரானோவை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு.

    16:05 (IST)24 Mar 2020

    ஒரு கடையில் 10 பேருக்கு மேல் கூட கூடாது

    பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் கிடைக்கும். டீ கடைகள் திறக்கலாம். ஒரு கடையில் 10 பேருக்கு மேல் கூட கூடாது - திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு பேட்டி

    15:53 (IST)24 Mar 2020

    தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

    15:32 (IST)24 Mar 2020

    அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டம் இல்லை

    மார்ச், ஏப்ரல், மே மாத ஜிஎஸ்டியை ஜூன் இறுதி வரை தாக்கல் செய்யலாம். நாட்டில் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டம் இல்லை. ரூ.5 கோடிக்கு கீழ் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி தாமதத்திற்கான அபராதம் ரத்து - நிதியமைச்சர்

    15:11 (IST)24 Mar 2020

    அனைத்து ஏடிஎம்களிலும் சேவைக் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

    'அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு, அனைத்து ஏடிஎம்களிலும் சேவைக் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்' என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    15:06 (IST)24 Mar 2020

    ஜிஎஸ்டி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்

    ஜூன் 30ஆம் தேதி வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்

    - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

    15:05 (IST)24 Mar 2020

    வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள் - சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

    சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா நோயால், வயதானவர்களுக்கு இறப்பு நேரிடுவதால், உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். மக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உலக நாடுகளை கொரோனா உலுக்கி கொண்டிருந்தால், அதன் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து, மக்கள் அரசுக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். எதிர்மறையான கருத்துக்களுக்கு இடமளிக்காமல், ஒருமித்த கருத்துகளுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    14:34 (IST)24 Mar 2020

    ஆதார் - பான் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு

    அதேபோல், ஆதார் - பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    14:29 (IST)24 Mar 2020

    ஜூன் 30 வரை கால அவகாசம்

    2018-19ம் ஆண்டுக்கான  வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    14:23 (IST)24 Mar 2020

    கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டும் ரிலையன்ஸ்

    மும்பையில், 2 வாரத்துக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியுடன் இணைந்து,100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவர்களை தனிமைப்படுத்தும் சிறப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. முகக்கவச உற்பத்தி, அவசர ஊர்திகளுக்கான இலவச எரிபொருள், இலவச உணவு உள்ளிட்ட பணிகளை செய்ய உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    14:12 (IST)24 Mar 2020

    2.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது

    இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மேல் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    14:05 (IST)24 Mar 2020

    15 நபர்களில் இருவர் மட்டுமே இளைஞர்கள்

    மதுரையில் கரோனா தொற்று ஏற்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருடன் தொடர்பில் இருந்த 60 பேர் தீவிர கண்காணிப்பு. தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள 15 நபர்களில் இருவர் மட்டுமே இளைஞர்கள்.

    13:37 (IST)24 Mar 2020

    சென்னையில் புதிதாக மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

    சென்னையில், புதிதாக மேலும் 3 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஸ்டான்லி மற்றும் கேஎம்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புரசைவாக்கம், கீழ்க்கட்டளை மற்றும் போரூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனறு அமைச்சர் விஜயபாஸ்கர், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    12:40 (IST)24 Mar 2020

    மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சிறப்பு ஊதியம் – முதல்வர் அறிவிப்பு

    மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

    12:35 (IST)24 Mar 2020

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை?

    கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் வரும்பட்சத்தில், கோவிட் 19 நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வழிவகை ஏற்படும்.

    12:06 (IST)24 Mar 2020

    350 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார்

    சென்னை அரசு மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் ஆக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    11:57 (IST)24 Mar 2020

    கட்டட தொழிலாளர்களுக்கு சம்பளம் - சோனியா காந்தி வேண்டுகோள்

    கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கட்டட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

    11:21 (IST)24 Mar 2020

    இன்று இரவு பிரதமர் மோடி உரை

    கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரி்தது வரும் நிலையில், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்த பிரதமர் மோடி சமீபத்தில் மக்களிடையே உரையாற்றியிருந்த நிலையில், இன்று ( மார்ச் 24) இரவு 8 மணிக்கும் மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    11:10 (IST)24 Mar 2020

    இது கொரோனோவுக்கு எதிராக போர் தொடுக்கும் நேரம் - ஐ.நா. பொதுச்செயலாளர்

    இது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக சர்வதேச அளவில் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் என்று ஐக்கிய நாடுகள் சபை பாெதுச்செயலாளர் ஆன்டனியோ குவாட்ரஸ் தெரிவித்துள்ளார்.

    10:23 (IST)24 Mar 2020

    குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – முதல்வர் பழனிசாமி

    கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

    10:14 (IST)24 Mar 2020

    நாளை முதல் கார்கோ விமானங்களின் சேவை மட்டுமே இயங்கும்

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச விமான சேவை கடந்த 22ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை (25ம் தேதி முதல்) கார்கோ விமானங்கள், சிறப்பு விமானங்கள், ஆப் ஷோர் ஹெலிகாப்டர்கள், மருத்துவ சேவை விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என்று விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    10:11 (IST)24 Mar 2020

    நேற்று மட்டும் இருவர் மரணம்

    கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நேற்று ( மார்ச் 23ம் தேதி) மட்டும் 2 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, இந்தியாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

    09:48 (IST)24 Mar 2020

    492 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரி்ததுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை இந்தியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Corona latest news updates : உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் முக கவச உற்பத்தி திறனை, ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் என்ற அளவுக்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

    Tamil Nadu Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment