Covid-19 Cases Update: கொரோனா தொற்றால் டாக்டர் சைமன் மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள், டாக்டர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் இன்றுமுதல் பணிநேரத்தில் கருப்புப்பட்டை அணிய முடிவு எடுத்துள்ளனர்.
தமிழகத்தில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும், மத்திய அரசு அறிவித்துள்ள, மே, 3 வரை, தொடர்ந்து கடைபிடிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு, ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய் தொற்றின் தன்மையை, மீண்டும் ஆராய்ந்து, நோய் தொற்று குறைந்தால், வல்லுனர் குழு ஆலோசனை பெற்று, நிலைமைக்கு ஏற்றார்போல், தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழகம்முழுவதும் பசியால் வாடும் மக்களுக்கு உணவு தருவோம்,'' என, மாவட்ட செயலர்களிடம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க., மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:'ஒன்றிணைவோம் வா' என்ற தலைப்பில், நம் பணியை துவக்க உள்ளோம். ஒட்டுமொத்த உலகத்தையும், கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து, வைரசை வீழத்துவோம் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கிறது.புயல், சுனாமி, வெள்ளம், தீ விபத்து, பஞ்சம் போன்ற, பல பேரிடர்களை சமாளித்துள்ளோம். தமிழகம் முழுவதும், பசி பட்டினியோடு இருப்பவர்களுக்கு உதவி செய்வோம். தற்போது, பசியால் வாடுபவர்களுக்கு, உணவு வழங்கி, தனித்தனியாக, தி.மு.க.,வினர் உதவி செய்து வருகின்றனர். அடுத்த கட்டமாக, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவி செய்வோம்.ஒருங்கிணைவோம்; உணவு தருவோம்; உயிரூட்டுவோம்; பசியை போக்குவோம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கொரோனாவால் இறந்த மருத்துவருக்கு அஞ்சலி இரங்கல் தெரிவிக்கும் வகையில், அரசு மருத்துவர்கள் நாளைமுதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்றும் அரசு மருத்துவர்கல் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பணியின்போது இறந்த மருத்துவர்களுக்கு நாளை இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் மெழுகு வர்த்து ஏந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 590-ல் இருந்து இன்று 603 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,259 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம். மாநில அரசுகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்.
ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்துவது குறித்து 2 நாட்களுக்கு பிறகு மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பலரும் நிதி வழங்கி வரும் நிலையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் அளித்த நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணி - உயிரிழக்கும் சுகாதார பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம். உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு. மருத்துவப் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
- ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கீழ்ப்பாக்கத்தில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா அறப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கும் மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. நமக்காக உயிரை பணயம் வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் தலைவணங்கி மனிதநேயம் காக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இறந்தவர்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பதே மனித நேயம். கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை உருவான நிலையில் மக்களுக்கு சென்னை மாநகராட்சி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனாவுக்கு பின் நாட்டை சீரமைக்கும் முக்கிய பணியில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார். எளிய மனிதனின் பிரச்னைகளையும் தேவைகளையும் கவனத்தில் வைத்து தேசத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டு கனவை நோக்கி பயணிக்கும் நேரம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights