இந்தியாவிலும் கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 2ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 3ம் தேதி), காலை 9 மணிக்கு மக்களிைடயே வீடியோ மூலம் உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
'கொரோனா நோயை கட்டுப்படுத்த, அனைவரும் வீட்டிலேயே இருங்கள்' என, முதல்வர், பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள, 'ஆடியோ'வில், அவர் கூறியிருப்பதாவது: உங்கள் முதல்வர் பழனிசாமி பேசுகிறேன்... உலகெங்கும் தீவிரமாக பரவி வரும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த, ஜெ., அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும், எங்களுக்கு முக்கியம். உங்கள் நலன் கருதி, அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், முழு ஒத்துழைப்பு நல்க, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்நோயை கட்டுப்படுத்த, விழித்திருங்கள்; விலகி இருங்கள்; வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
உங்களுடன் உரையாட இன்று ”லைவ்”-வில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அமெரிக்காவில் மனிதர்களை கொரோனா முழுவீச்சில் தாக்கி அழிக்கிறது . ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரத்து 613 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.நேற்று மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 660 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிஸ் மாலில் பணிபுரிந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10-17 தேதிகளில் சென்றவர்கள் அங்கே பணிபுரிபவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் தகவல் தர அறிவுறுத்தியுள்ளது.
ஃபீனிஸ்க் மாலுக்கு சென்றவர்கள், பணிபுரிபவர்கள் கவனமுடன் இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறை
ஃபீனிஸ்க் மாலுக்கு சென்றவர்கள், பணிபுரிபவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் - சென்னை மாநகராட்சி
செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் 74 பேர். தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 2 வது இடத்தை அடைந்துள்ளது.” என்று கூறினார்.
மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மூலதனத்தில் 30% மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமி இந்த சலுகையை வழங்கியுள்ளார்.
மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 100% முத்திரைத் தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருண்டு பெரும் கடங்களுக்கான வட்டியில் 6% மானியம் வழங்கப்படும்
அனுமதிக்காக காத்திருக்காமல் நிறுவனங்கள் உற்பதியை தொடங்கலாம்.
இந்த சலுகை சிறு, குறு, நடுத்தர, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும் - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாலர் கடிதம் எழுதியுள்ளார்.
ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினாலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசு கோரிய ரூ.9,000 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
என்95 மாஸ்க், வெண்டிலேட்டர்கள் வாங்க கூடுதலாக ரூ.3000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி
2020-21-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி
பிரதமர் மோடி காணொலி மூலம் நடத்திய ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கோரிக்கை
தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத் தொகை, ரேஷன் பொருட்களை நேரில் சென்று வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு
கொரோனா பாதித்த ஒருவர் ரேஷன் கடைக்கு வந்தால் பலருக்கு கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைல் இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஏப்ரல் 7-ம் தேதி தொடங்க இருந்த விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் விடைத்தாள் திருத்தும் பணி தேதி பின்னர் அறிவிக்கபடும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கயத்தாறில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் மளிகைப் பொருட்களைப் பதுக்கி செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கினால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. தமிழகத்தில் இதுவரை மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. கொரோன தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழக்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.
அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்துவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் மக்களை சென்றடைய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பணிகளுக்கு நிதியை உதவி செய்ததுடன் சமூக விலகலை நடைமுறைப்படுத்த அறிவுத்தினார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா சமூக பரவல் நிலையை எட்டவில்லை - மத்திய அரசு
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 இடங்களை கண்டறிந்துள்ளது மத்திய சுகாதாரத்துறை -
கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ள 22 இடங்களை சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது - மத்திய அரசு
ஊரடங்கு காலத்தில் கேரளாவில் மருத்துவர் பரிந்துரையின் பேரில் மதுபானம் வழங்கலாம் என்று அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது.
இது தொடர்பான வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் 3 வாரத்திற்கு தடை விதித்து அதிரடி உத்தரவு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு உத்தரவு 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 14ம் தேதிக்கு பிந்தைய பயணத்திற்காக ரயில் முன்பதிவு நடைபெற்றுவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து ரயில்வே அதிகாரியிடம் விளக்கம் கேட்டதற்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக, எவ்வித புதிய அறிவிப்பையும் தாங்கள் வெளியிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களில் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ அழைப்புகள் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று மாலை 6 மணிக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் உரையாட வருகிறார் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன். எப்போதும் மற்றவர்களின் வாய்வழிக் கதைகளை உண்மை என்று நம்பி வதந்திகளை பரப்புவதற்கு பதிலாக, கள நிலவரம் என்ன என்பதை அரசாங்க ஊழியர்கள் வாயிலாக கேட்டு அறிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது தானே!
தமிழகத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறிய 42 ஆயிரத்து 035 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 35, 206 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கை மீறியதற்காக ரூ.16,27,844 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களில் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
டெல்லி மாநாட்டிற்கு சென்று ராமேஸ்வரம் திரும்பிய 17 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 15 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் மிக முக்கிய தொடராக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூன் மாதம் லண்டனில் நடைபெறுவதாக இருந்தது. இந் நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000, இலவசப்பொருட்கள் விநியோகம் தொடங்கியது. ஊரடங்கு உத்தரவால் அரிசி அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் , தமிழகத்தில் வரும் 12ம் நாட்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகையால், வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்கவும். தெரிந்தவர்கள் வெளியே செல்ல முற்பட்டால், அவர்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, 16 மாவட்டங்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை, 124 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் நடந்த மத ரீதியான மாநாட்டிற்கு, தாய்லாந்து நாட்டினருடன் சென்ற, 1,000க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதில், 515 பேர் மட்டுமே, சுகாதாரத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை, 67 பேருக்கு பாதிப்பு இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலருக்கு அறிகுறி இருப்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights